மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும்:
பெரும்பாலும் அனைத்து விதமான உடல் நல குறைவுக்கும் காரணமான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகையாகும்.
காலை மற்றும் இரவு வேலைகளில் அஸ்வகந்தா நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது விரைவில் ஏற்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டு நமது இலக்கை அடைய உதவி செய்கிறது.
ஹைப்போதலாமஸ் மற்றும் சுரப்பிகளை ஆசிர்வாசப்படுத்தி ஆபத்தான நேரங்களில் ஏற்படும் பதட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
மேலும் இந்த மூலிகையானது மூளை செல்களின் செயல் திறனை அதிகரித்து படிக்கும் மாணவர்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கிறது.
மலட்டுத்தன்மை:
பல ஆயிரம் வருடங்களாக ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கு பயன்படுத்தி வந்த மூலிகைகளில் முக்கியமானது
அஸ்வகந்தா ஆகும்.
குறிப்பிட்ட நாட்களில் அஸ்வகந்தாவை தொடர்ந்து எடுக்கும் பொழுது ப்ரோஸ்டேட் பாதிப்பு குறைந்து விரைவில் விந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
மேலும் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதால் உடல் உஷ்ணம் குறைவு மிகவும் குறைகிறது அதனால் விதைப்பையில் உள்ள லீடிக்செல்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதில் எவ்வித தடையும் இல்லை.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்து கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைகிறது.
பெண்களுக்கு தரமான கருமுட்டை உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
ஆண்களுக்கு அதிக ஆற்றல் உடைய விந்து செல்லை உற்பத்தி செய்கிறது.
காலையில் அஸ்வகந்தா மற்றும் பூனைக்காலி பொடியை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இரவு அஸ்வகந்தா மற்றும் பால் கலந்து வெதுவெதுப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஆழ்ந்த உறக்கம்:
ஆழ்ந்த உறக்கத்தை தூண்டுவதில் மிக முக்கியமாக செயல்படுவது அஸ்வகந்தா ஆகும்.
உறக்கத்திற்கு முன்பு ஏற்படும் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகிறது.
உறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வெதுவெதுப்பான நீருடன் அஸ்வகந்தா மற்றும் மஞ்சள் கலந்த நீரை பருக வேண்டும்.
உடல் பலம் அதிகரிக்கும்:
தசை சோர்வு மற்றும் எலும்பு பலமின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது இதில் உள்ள ஸ்டிராய்டல் ரசாயன கூட்டுக் கலவை தசைகள் மற்றும் எலும்புகளில் தாதுஉப்புக்களின் செறிவு அதிகரிக்கிறது. தசைகளுக்கு தேவையான அதிக நைட்ரஜன் மற்றும் அமினோ ஆசிட் சேர்க்கையை அதிகரிக்கிறது
எலும்புக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
மேலும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து அதில் உள்ள ஆக்சிஜன் செறிவை அதிகரிக்கிறது இதனால் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பழுதுக்கும் வீரர்களும் இதனை பயன்படுத்தும் பொழுது அதிகப்படியான ஆற்றல் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்கிறது:
வயது முதிர்வால் ஏற்படும் டைப் டு டயாபடீஸ்( சர்க்கரை வியாதி) இதிலிருந்து சிறிது சிறிதாக விடுபட அஸ்வகந்தா உதவி செய்கிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் ஹார்மோன் தரம் குறைவதால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு அஸ்வகந்தாவை பயன்படுத்தும் பொழுது பீட்டா செல்களில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் வீரியத்தை அதிகரிக்கிறது.
இதயத்திற்கு பலம் அளிக்கிறது:
அதிகப்படியான நொறுக்கு தீனிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களை உண்ணும் பொழுது நமது இதே குழல்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு( கரோனரி இதய நோய்) பாதிப்பை அஸ்வகந்தா குறைகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை மற்றும் அஸ்வகந்தா பயன்படுத்தும் பொழுது கரோனரி இதய நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி:
உடலுக்கு தேவையான பல தாது உப்புக்கள் மற்றும் போலிக் ஆசிட் மற்றும் சிங்க் அதிகம் உள்ளதால் எலும்ப அடர்த்தி அதிகரிக்கப்பட்டு எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
இதனால் தைமசுரப்பியின் செயல்பாடு அதிகரித்து உடல் நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கிறது.
என்றும் இளமையுடன் வைத்திருக்கும்:
தினமும் அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ளும் பொழுது விரைவில் வயதாகும் தோற்றத்தை குறைக்கிறது. மற்றும் வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கம், நரைமுடி, எலும்பு சோர்வு, முதுகு வலி போன்றவற்றை குறைத்து சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது.
தினமும் அஸ்வகந்தா எடுத்துக் கொள்வதன் மூலம் எவ்வித உடலுக்கு நேராது
அஸ்வகந்தாவை பக்குவப்படுத்தும் முறை:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அஸ்வகந்தா கிழங்கு அல்லது தண்டு தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.
தூய பசும்பாலில் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு நிழலில் அதன் ஈரம் வற்றும் வரை நன்கு உலர்த்தி நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பின்பு காற்று புகாத கண்ணாடி கலன்களில் அடைத்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
உண்ணும் முறை:
அஸ்வகந்தா வை குறிப்பிட்ட சில பொருட்களுடன் சேர்ந்து பயன்படுத்தும் போது நல்ல பலன் அளிக்கும்
அஸ்வகந்தா மற்றும் பூனைக்காலி விதையை வெதுவெதுப்பான நீர் அல்லது நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணும் பொழுது நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மை அதிகரிக்க அஸ்வகந்தா மற்றும் தேன் கலந்து அவ்வப்போது எடுத்து வரலாம்.