Remove dark circle under eyes | கண்ணில் கருவளையம் மறைய வேண்டுமா

0

கண்களைச் சுற்றி கருவளையம் வர காரணங்களும் தீர்வும்

  


 இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள முக்கியமான பிரச்சனை என்றால் அது கண்ணை சுற்றி கருவளையங்கள் தான், இதனால் முகத்தை வெளியில் காட்டவே வெட்கபடுவர்கள், குறிப்பாக பெண்கள், இதற்கென்று குறிப்பாக காரணம் கிடையாது. ஆனால் இதனை மரயவைக்க நிறைய வழிகள் உள்ளது அதில் சிலவற்றை பார்ப்போம்.


இரும்பு சத்து குறைபாடு:


பொதுவாக இரும்பு சத்து நமது ரத்தத்தில் குறைவாக இருக்கும் பொழுது போதிய அளவு ஆக்சிஜன் நமது தோலுக்கு கிடைப்பதில்லை.

ஆதலால் அதிகம் உள்ள உணவுகளை நம் தினந்தோறும் எடுத்துக்கொண்டால் கண்களைச் சுற்றி கருவளையம் மறைய வாய்ப்புள்ளது

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளான முளைகட்டிய பாசிப்பயறு, ஈரல் உணவுகள், முருங்கைக் கீரைகள், அகத்திக்கீரைகள் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அலர்ஜி:


அலர்ஜி காரணத்தினால் கூட கண்களை சுற்றி கருவளையம் வர வாய்ப்பு உள்ளது.

இதனால் கண்களை சுற்றி அரிப்பு உண்டாகும் பொழுது கண்களை அதிகம் தேய்க்க கூடாது ஏனென்றால் கண்கள் அடிப்பகுதியில் உள்ள தோல் மிகவும் மென்மையானது எளிதில் பாதிப்படைய கூடியதாகும்

இதனால் உணவில் மிளகு அதிகம் சேர்த்து வந்தால் அலர்ஜி குறைய வாய்ப்புள்ளது.


போதிய அளவு தண்ணீர் அருந்துதல்:


நமது அன்றாடம் உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வில்லை என்றால் நமது சருமம் வறண்டு எளிதில் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. ஆகவே போதிய அளவு தண்ணீரை நாம் குடிக்கும் பொழுது சருமம் மீண்டும் புத்துணர்ச்சி பெரும். புகைப்பழக்கம் இருந்துதல் மற்றும் அதிகப்படியான உப்பு உணவில் எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்க வேண்டும் இதனால் உடல் விரைவில் நீர் சத்துகளை இழக்கும்.


தூக்கமின்மை:


ஒரு நாளைக்கு தேவையான ஏழு முதல் எட்டு மணி நேரம் சரியான தூக்கம் இல்லையென்றால் கூட சருமபிரச்சனைகளும் கண்களைச் சுற்றி கருவளையம் வர வாய்ப்புள்ளது.

ஆழ்ந்த தூக்கத்தை பெற இரவு உணவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு உண்ட பின்பு மூன்று மணி நேரம் கழித்துபின்பு உறங்கச் செல்ல வேண்டும்.


ஆவாரம் பூ மற்றும் மகிழம் பூ:


அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்ட மகிழம் பூ மற்றும் ஆவாரம் பூ அரைத்து கருவளையம் உள்ள பகுதியில் அல்லது முகம் முழுவதும் பூசி குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும் மற்றும் பூஞ்சை தொற்று, கண் கருவளையம், விரைவில் குணமாகும் கரும்புள்ளிகள்விரைவில் குணமாகும்


மெலனின்:


மெலனின் என்னும் நிறமி தான் நமது தோல் முக்கிய காரணமாகும் இதன் உற்பத்தியை குறைக்கும் பொழுது கருவளையம் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆதலால் மெலனின் உற்பத்தியை குறைக்கக்கூடிய கிரீன் டீ, வெண்ணை பால், மற்றும் முட்டையை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய மஞ்சள் முகத்திற்கு பூசிகுளிக்கும் பொழுது மெலனின் உற்பத்தியை குறைக்கலாம்.

ஆண்கள் ஆலுவேரா முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தலாம்

மேலும் அதிகம் சூரிய ஒளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதனால் நமது தோல் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க கூடும்.


விட்டமின் இ 

       

       சருமத்திற்கு தேவையான முக்கியமான சத்தில் ஒன்றான விட்டமின் இ , பால் பொருட்களில் விட்டமின் ஈ அதிகம் உள்ளதால் கருவளையம் உள்ள இடத்தில தடவி மசாஜ் செயயுங்கள், இப்படி செய்யும் போது கருவளையம் மறைவதை கண்கூடாக பார்க்கலாம். குளிர் பதனப்படுத்தப்பட்ட பால் பயன்படுத்துவது மிகவும் நல்ல பலன் அளிக்கும்


ரோஸ் வாட்டர்


        சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கவும் சருமம் புத்துணர்ச்சி அடையவும் தேவையான முக்கியமான பொருள் இந்த ரோஸ் வாட்டர். இதனை கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவுடன் கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.


உருளைகிழங்கு தோல்


          உருளை கிழங்கு தோல் சீவி கருவளையம் உள்ள இடத்தில் பத்துபொல போட வேண்டும், இது சாதாரணமாக தோளில் ஊடுருவி கழிவுகளை வெளியேற்றும், ஒரு வாரத்தில் இதன் பலனை காணலாம்.


கீழாநெல்லி

  

          கருவளையம் வர முக்கியமான காரணத்தில் ஒன்று கல்லீரல் கழிவுகள் அல்லது மஞ்சள் காமாலை , கீழாநெல்லி சாப்பிடும்போது நாள்பட்ட கல்லீரல் பிரச்சினை சரியாகும் , அதனால் கருவளையம் மறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

Remove dark circle under eyes





                 

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)