ஆண்களுக்கு அழகே அந்த மீசை தாடி தான் அதிலும் குறை என்றால் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும். இது ஒரு சில ஹார்மோன் பிரச்சனையால் வரகூடியது மட்டுமே ஆகும். அதனை சரி செய்து ஒரு சில இயற்கை எண்ணெய்களை உபயோகிப்பதின் மூலம் சரி செய்யலாம்.
டெஸ்டோஸ்டீரான் மற்றும் டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் போன்ற இரண்டு ஹார்மோன்கள் தான் தாடி மீசை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது, இவை அதிகமாக இருந்தால் தாடி மீசை அடர்த்தியாகவும் கடினமாகவும் வளரும்.
அன்னாசி பழம் சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன்அளவு 150% வரை அதிகரிக்கும் , இது அதிக அண்டி ஆக்ஸிடென்ட் கொண்டது , புரத உள்ளீர்தல் அதிகரிக்கும். தசை வளர்ச்சி அதிகரிக்கும்.
பட்டை தூள் உபயோகித்தால் ஹார்மோன் அளவு சீர்படும்.
நல்லா ஆரோக்கியமான தாடி, மீசை மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது,
அடிக்கடி சேவிங் செய்து வந்தால் மீசை நன்றாக வளரும் எனும் கட்டுக்கதையை யாரும் நம்பாதீர்கள், மீசை தாடி சேவிங் செய்தால் அதிகமாக வளர்ச்சி அடையாது.
அதிக புரதம் உள்ள உணவுகள்:
முடி அடர்த்தியாக வளர மிகவும் முக்கியமானது புரத உணவுகள் ஆகும், நமது உணவில் 50 சதவிகிதம் புரதம் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், அதில் முக்கியமாக முட்டை , மட்டன், மீன், மற்றும் மாட்டு இறைச்சி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
இரவு உறங்குவதற்கு முன்பு முகத்திற்கு தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரும்பொழுது மீசை வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஜிங்க்:
ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும், குரோத் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான ஒரு தாது பொருள் ஜிங்க் ஆகும். ஜிங்க் அதிகம் உள்ள சிப்பி மற்றும் நண்டு உணவுகள், மாட்டிறைச்சி, பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் தவறாது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி:
பெரும்பாலும் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அது குறைவாக இருந்தால் கூட முடி உதிர்தல், முடி வளர்ச்சி குறைவு போன்றவை ஏற்படும்.
இதற்கு நன்கு உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் ஒரு தீர்வாகும்
அதிக எடை தூக்கி பயிற்சி செய்யும் பொழுது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு அளவு குறையும் இதனால் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி அதிகரிக்கும்.
நல்ல கொழுப்பு:
நமது ஹார்மோன் உற்பத்தி சீராக இருக்க நாம் நிச்சயம் எடுக்க வேண்டியது நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகும், இதற்கு நாம் நெய், வெண்ணை, நிலக்கடலை, வெண்ணெய் பழம், முட்டை மஞ்சள் கரு போன்றவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.
அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகளான பொறித்த உணவுகள், வருக்கப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
மருத்துவரின் ஆலோசனை:
பல முயற்சிகள் செய்த பிறகும் எவ்விதவு மாற்றமுமில்லை என்பவர்கள் மருத்துவருடன் ஆலோசித்து மினாக்சிடில் போன்ற மருந்துகளை குறுகிய காலத்துக்கு பயன்படுத்தும் பொழுது மீசை தாடி வளர வாய்ப்புள்ளது
ஆமணக்கு எண்ணெய்:
காலம் காலமாக ஆமணக்கு எண்ணெய் முடி வளர உபயோகத்தில் முதலாக உள்ளது, இரவில் உறங்கும் முன் இதனை தாடி மீசை உள்ள இடத்தை தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்சின்ன வெங்காயம்:
இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் , ஆன்டி ஆக்சிடன்ட், முடி வளர நன்கு உதவும், இதில் சல்பர் அதிகம் உள்ளது முடி வேர் வரை சென்று வளர ஊக்குவிக்கும்.மூலிகை எண்ணெய்:
ஒருசிலர் முடி வளர சிறப்பான எண்ணெய் தயாரித்து வைத்திருப்பார்கள், அதுபோல செய்து பயன்படுத்தலாம் அதற்கு தேவையான பொருள், தேங்காய் எண்ணெய், கருவேப்பிலை, கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய், போன்றவை கலந்து காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.சருமத்தை சுத்தமாக வைத்திருத்தல்:
எந்தவித பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளும் இல்லாமல் சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொழுது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.தேங்காய் எண்ணெய் மற்றும் கல் உப்பு கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்பொழுது இறந்த செல்கள் நீங்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது, மேலும் உப்பு என்பது ஆண்டிபயாட்டிக் என்பதால் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.