ஆனால் நம் தசைகளை வளர்ப்பதற்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 200 கிராம் புரதம் தேவை.
மேலும் ஒரு நல்ல புரதம் என்றால் அதனுடைய அமினோ ஏசிட் அளவு 100விட அதிகமாக இருக்க வேண்டும்
நம் எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் விலை மலிவான புரத உணவுகளை இங்கு பார்ப்போம்
முட்டை:
ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது, அமினோ ஆசிட் அளவு 132 உள்ளதால் இது ஒரு நல்ல புரதமாகும் மேலும் வேறு எதிலும் கிடைக்காத கோளின் என்னும் சத்து பொருள் இது உள்ளது.
நமது உடலுக்குதேவையான நிறைவுறால் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தசை வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது
நாம் சாதாரணமாக ஐந்து ரூபாய்க்கு ஒரு முட்டை வாங்கி விடலாம்.
அதனால் விலை மலிவான புரதங்களில் முட்டை முக்கியமானதாகும்.
முளைகட்டிய பாசிப்பயறு:
நாம் சாதாரணமாக பாசிப்பயிரை சாப்பிடும் பொழுது100 கிராமுக்கு25 கிராம் புரதம் மட்டுமே கிடைக்கும், ஆனால் முளைக்கட்டிய பாசி பயிரை நாம் சாப்பிடும் பொழுது 100 கிராமுக்கு 38 கிராம் புரதம் நமக்கு கிடைக்கும்,
இதனுடைய அமினோ ஆசிட் அளவு 80, இதனை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அமினோ ஆசிட் லெவல் சமமாகிவிடும்.
பன்னீர்:
மேலும் விலை மலிவாக கிடைக்கக்கூடிய புரத உணவுகளில் பன்னீரும் ஒன்றாகும்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் புரதம் உள்ளது, இதில் உள்ள புரதமானது கேசின் வகையை சார்ந்தது ஆதலால் ஜீரணத் தன்மைக்கு தாமதமாகும் என்பதால் இரவு வேலைகளில் எடுத்துக் கொள்ளலாம்
இதில் உள்ள வைட்டமின் கே ஆனது குடலில் உள்ள ஈ கொலை பாக்டீரியாவால் விட்டமின் கே 2 மாற்றப்பட்டு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாது உப்புகளை எலும்புக்குள் செலுத்துவதில் இந்தக் விட்டமின் கே 2 உதவி புரிகிறது.
100 கிராம் பன்னீர் ஆனது 25 ரூபாய்க்கு கிடைக்கும் சைவப் பிரியர்களுக்கு இது ஒரு முக்கிய புரதம் ஆகும்.
பீன்ஸ் வகைகள்:
பெரும்பாலான இந்தியர்கள் புரதத்திற்காக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சார்ந்த உள்ளன.
அதில் முக்கியமான பீன்ஸ் வகை என்னவென்றால் கிட்னி பீன்ஸ், அவரை விதை, கருப்பு பீன்ஸ் போன்றவையாகும்.
ஆனால் பீன்ஸில் உள்ள ஒருவித ரசாயன கலவை அதில் உள்ள தாது உப்புக்கள் மற்றும் இரும்பு சத்துக்களை நமது உடல் உறிஞ்ச விடாமல் தடுக்கப்படுகிறது. அதற்கு பீன்ஸை நன்கு ஊற வைத்து பின்பு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் உள்ள அமினோ ஆசிட் அளவு 80 ஆகும் இதனை சிக்கன் மற்றும் மாட்டு இறைச்சியுடன் கலந்து சாப்பிடும் பொழுது தசை வளர்ச்சிக்கு நன்றாக இருக்கும்
மேலும் 100 கிராம் பீன்ஸ் ஆனது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது, இருந்து நமக்கு 22 கிராம் புரதம் கிடைக்கிறது.
மாட்டிறைச்சி:
அதிகப்படியான அமினோ ஆசிட் அளவு உள்ள மாட்டிறச்சியில் நமக்கு 28 கிராம் புரதம் கிடைக்கும்
100 கிராம் மாட்டு இறைச்சி எனது 30 ரூபாய்க்கு நமக்கு கிடைக்கிறது
இதில் உள்ள ஜிங் மற்றும் கிரியேட்டின் ஆனது தசை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தாது பொருட்களாகும்
மாட்டிறைச்சியை அண்ணாச்சி பழத்துடன் சாப்பிடும் பொழுது நமது உடல் புரதத்தை எளிதில் உட்கவரந்து கொள்ளும்
மீன் வகைகள்
நமது இந்தியாவில் கிடைக்கக்கூடிய பல வகையான மீன் வகைகள் விலை மலிவாகவே கிடைக்கின்றன.
மீன் உணவானது ஜீரணத் தன்மைக்கு மிகவும் எளிதானது மற்றும் இதில் உள்ள அமினோ ஆசிட் அளவானது138 ஆகும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் தசை வளர்ச்சிக்கு உகந்தது மற்றும் விட்டமின் டி உட்கிரகைதலுக்கு மிகவும் துணை புரிகிறது.
சிக்கன்:
இதில் உள்ள அமினோ ஆசிட் அளவு 132, பாடிபில்டிங் செய்யக்கூடிய அனைவரும் எடுக்கக்கூடிய முக்கியமான புரத உணவு சிக்கன் ஆகும்
100 கிராம் சிக்கன் இருபது ரூபாய்க்கு நமக்கு கிடைக்கிறது.
ஒரு கிராம் சிக்கனில் நமக்கு 30 கிராம் புரதம் கிடைக்கிறது.