How to cure sinus problem | சைனஸ் பிரச்சனை சரிசெய்வது எப்படி

0

முற்காலத்தில் இருந்தது விட இப்பொழுது சைனஸ் பிரச்சனையானது அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்றால் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் உணவு பழக்க வழக்கம் தான்.


துரித உணவுகளை அதிகம் நாம் உண்ணும் பொழுதே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடுகிறது. இதனால் ஆட்டோ இம்யூனோ டிசிஸ் எனும் நிலைக்கு நமது உடல் செல்வதால் ஒரு சிறு கிருமி தொற்று அல்லது தூசானது நமது உடலுக்குள் செல்லும் பொழுது நமது உடல் அதற்கு அதிகமான எதிர்ப்பை காட்டும் இதனால் அலர்ஜி உண்டாகிறது.

இந்த அலர்ஜியானது பல்வேறு வகைகளில் உண்டாகிறது அதில் ஒன்றுதான் சைனஸ் பிரச்சனை.

ஒரு சாதாரண தூசு அல்லது குளிர்ந்த காற்று நமது நாசித் துளையில் நுழையும் பொழுது நமது நோய் எதிர்ப்பு மண்டலமானது அதனை மிகப்பெரிய பாதிப்பாக கருதி நாசித் துலையை மூடச் செய்வது மற்றும் சளி போன்ற கோழை பொருட்களை உருவாக்குவது என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


இதனால் சுவாசிக்க மிகவும் சிரமமாக இருக்கும், இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளான தலைவலி, சுவாசப் பகுதிகளில் பூஞ்சை தொற்று மற்றும் கிருமித் தொற்றுகள்போன்றவை உருவாக வாய்ப்புகள் உள்ளது

வாதம் பித்தம் ஒன்று சேர சைனஸ் பிரச்சினை தோன்ற ஆரம்பிக்கும், இதனை சரியான முறையில் கையாண்டு சரிசெய்யவில்லை என்றால் ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்,

நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்தால் உடனடி பலன் கிடைக்கும் ஆனால் நீடிக்காது ,மறுபடியும் சைனஸ் உருவாக ஆரம்பிக்கும் சில நட்டு வைத்தியங்கள் மூலம் இதனை நிரந்தரமாக குணமாக்கலாம்.


உணவு கட்டுப்பாடு:

துரித உணவுகளை தவிர்த்து நம் உண்ணும் உணவானது அது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஏதுவாக இருப்பது போல்அமைக்க வேண்டும் .

அதாவது அதிக புரதம் மற்றும் நல்லகொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவே நம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் உண்ணும் உணவு இடைவேளையை அதிக படுத்த வேண்டும் அதாவது ஒவ்வொரு உணவிற்கு இடையிலும் எட்டு மணி நேரம் இடைவேளை இருக்க வேண்டும்.

ஜீரணத்துக்கு ஏதுவாக அரை வயிறு உணவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமைத்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆன உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நமது உணவில் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவை குறைத்து ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்( கிட்னி பீன்ஸ், மஞ்சள் பூசணி, இறால், முட்டை)

முடிந்தவரை வாரம் ஒரு முறையானது விரதம் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

அதிகப்படியான சைனஸ் பிரச்சனையானது நமது குடல் ஆரோக்கியத்தை பொறுத்து அமைவதால். நமது குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் அதில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றவும் இயற்கையாக அமைந்த கழிவு நீக்க மூலிகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்( கடுக்காய் பொடி மற்றும் நிலவாரை சூரணம்)

பெரும்பாலும் குடல் சுத்தமானது உடலில் 80 சதவிகித நோயை குணப்படுத்துவதால் இந்த முறை மிகவும் முக்கியமானதாகும்


மிளகு:

சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தர மிளகை உணவில் அதிகம் எடுக்கலாம் , சாப்பிடும் அனைத்து உணவிலும் சேர்த்துக்கொண்டால் நிரந்தரமாக குணமடையும் ,

அதிலும் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூக்கடைப்பு கரைந்து வெளியேறும்.


பட்டை தூள் :

இதிலுள்ள ஆன்டி பையாட்டிக் குணங்கள் சைன்ஸ் ஆல் ஏற்பட்ட தொற்றுக்கள் சரிசெய்ய பயன்படும். உடல் சூடு அதிகரிக்க மிகவும் பயன்படும். உடல் சூடு அதிகரித்தால் மட்டுமே சைனஸ் அடைப்பு குறைக்கும்.


குளிர்ச்சியான உணவு:

சைனஸ் உள்ளவர்கள் குளிர்ச்சியான பொருளை அரவே எடுக்க கூடாது . இதனால் கபம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுகளையும் எடுக்க கூடாது .


உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு உடல் குளிர்ச்சியை அதிகரிக்க கூடியது, அதுவும் இரவு நேரத்தில் ,முக்கியமாக எடுக்க கூடாது. இதனால் மூக்கடைப்பு மேலும் அதிகரிக்கும்.


பால் பொருள்கள்:

பால் பொருட்களான , தயிர், நெய், மற்றும் இனிப்புகளை எடுக்கக்கூடாது. அதில் மோர் மட்டும் விதிவிலக்கு . மோரில் மிளகு கலந்து சாப்பிடும்போது மூக்கடைப்பு நீங்கும் .







கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)