ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் குழலின் நீளம் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுகிறது.
நமது குடல் பகுதிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் அதிகம் உள்ள போது அவை மெதுவாக ஊர்ந்து சென்று சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழல் பகுதிகளில் தொற்று வியாதிகளை ஏற்படுத்துவதால் இவை ஏற்படுகிறது.
முக்கியமாக ஈகொலை மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியா மூலம் தான் பாதிப்புகள் தோன்றுகின்றனர் . இதனால் பதித்தவர்களுக்கு கடுமையான எரிச்சல் உடன் கூடிய சிறுநீர், சிறிய காய்ச்சல், முதுகுவலி, ரத்தத்துடன் கலந்து சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகள் தோன்றும். இதனை எளிய முறையில் எப்படி சரிசெய்வது என்பதை பார்ப்போம்.
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் எடுக்க வேண்டும். அதில் முதன்மையானது அன்னாசிப்பழம் , பப்பாளி பழம் .இதில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது . கடுமையான மலேரியா காய்ச்சல் கூட குணப்படுத்தும் தன்மை கொண்டது, 50 ஆப்பிள் இல் உள்ள சத்துக்கள் ஒரேயொரு அன்னாசி மற்றும் பப்பாளிஇல் உள்ளது.
பாக்டீரியா தொற்றுக்களுக்கு காரணம் நம் உணவில் போதுமான அளவில் பூண்டு, பட்டைகிராம் , இஞ்சி சேர்ப்பதில்லை . இதனை உணவில் எடுத்துவந்தால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் முழுதும் அழிந்துவிடும்.ஏனென்றால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் பெருக்கத்தின் காரணமாக அவைகள் ஊர்ந்து சென்று சிறுநீர் பையை அடைகிறது , ஒருவேளை இன்பெக்சனால் பாதிப்படைந்தால் இஞ்சி பூண்டு பட்டை போட்டு டீ போல செய்து பருக நல்ல பலன் கிடைக்கும் .
ஆன்டி -ஆக்ஸிடென்ட் :

ஆன்டி- பாக்டீரியல் :

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் :
பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவுகளான முளைகட்டிய பாசிப்பயறு கொண்டைக்கடலை கிட்னி பீன்ஸ் ஈரல் உணவுகள் மற்றும் முருங்கைக் கீரை போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
பழங்களில் நாம் வாழைப்பழம் மற்றும் மாதுளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலுறவு:
தினமும் உடலுறவு வைத்துக் கொள்ளும் பொழுது பெரும்பாலும் சிறுநீர்பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் உடலுறவிற்கு பின்பு தவறாமல் சிறுநீர் கழிக்க வேண்டும்.
மருத்துவ ஆலோசனை:
நமது சிறுநீர் பாதையில் எந்த விதமான பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும் இது உடனடி பலன் அளிக்கும்
கருப்பு திராட்சை:
விதையுடன் கூடிய கருப்பு திராட்சையை ஜூஸ் செய்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம் இதில் உள்ள விட்டமின் சி பிகாம் ப்ளெக்ஸ், மற்றும் துவர்ப்புத் தன்மை உடலில் உள்ள தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது
இளநீர்:
இளநீரில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் தொகுப்புகள் சிறுநீரக செயல்பாட்டை அதிகரித்து சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுகளை விரைவில் அடித்துச் செல்கிறது.
உணவு முறை:
பெரும்பாலும் உடலில் உள்ள கழிவுகளின் தேக்கத்தால் அதிகப்படியான பாக்டீரியாக்கள் உருவாகி உடலில் பல இடங்களுக்கு பரவி செல்கிறது இதனை தடுக்க குடலில் கழிவுகள் தேங்குவதை தவிர்க்க வேண்டும் இதற்கு இரவு உணவிற்கு பின்பு கடுக்காய் பொடி மற்றும் நிலாவரை பொடி வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை போன்றவை எடுக்கும்போது சிறுநீர்ப்பை இல் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
தண்ணீர்:
தொற்று உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சிறுநீர் பையில் உள்ள பாக்டீரியாக்கள் அடித்து செல்லும். அதனால் அதிகம் நீர்
பருகுங்கள்
தர்பூசணி:
தர்பூசணியில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் சிறுநீரக செயல்பாட்டின் அதிகரிக்கிறது உடலில் நீர் சத்துக்களை அதிகரிக்கும் பொழுது சிறுநீர்ப்பைகளில் உள்ள கிருமிகள் விரைவில் வெளியேற்றப்படுகிறது , இதற்கு நாம் வெண்பூசணி கூட ஜூஸ் செய்து பயன்படுத்தலாம்