Dry cough வரட்டு இருமல்
வரட்டு இருமல் வரும் காரணத்தைப் பொருத்து நிறைய வகையான சிகிச்சைகள் உள்ளது.
Dry cough(வரட்டு இருமல்) வயதைப் பொறுத்து குறிப்பிட்ட காலம் வரை தொடரும். அதாவது சிறியவர்களுக்கு இரண்டிலிருந்து மூன்று வாரமும் வயதானவர்களுக்கு அதற்குமேலும் நீடிக்கலாம்.
எதனால் Dry cough(வரட்டு இருமல்) வருகிறது
சளியுடன் கூடிய காய்ச்சலால் பொதுவாக வரட்டு இருமல் வருகிறது அல்லது காய்ச்சலின் அறிகுறிகளால் வரட்டு இருமல் வருகிறது.மேலும் தீவிரமான வைரஸ் தொற்றுக்கு பின்பு Dry cough(வரட்டு இருமல்) நீண்ட காலம் வரை நீடிக்கும்.
பிற காரணங்கள்:
- புகைப்பிடித்தல்.
- பூவிலுள்ள மகரந்தத்தூள் மூலம் அலர்ஜி.
- செல்லப் பிராணிகளால் வரும் ஒவ்வாமை.
- சைனஸ் பிரச்சனைகள்.
- குரல்வளையில் ஏற்படும் காயங்கள் , தொற்றுக்கள், மற்றும் வீக்கம்.
- குறட்டை விடும் பழக்கம்.
- நுரையீரல் தொற்று அல்லது சுவாசக் குழாயில் தூசி அடைத்தல்.
Dry cough வரட்டு இருமல் அதிகரிக்க காரணங்கள்:
- குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள்.
- குளிரூட்டப்பட்ட குடிநீர்.
- ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பலகாரங்கள்.
- மாசுபட்ட காற்றை சுவாசித்தல்.
- புகை பிடித்தல் அல்லது புகையிலையை உட்கொள்ளுதல்.
- அதிகப்படியான உடல் வெப்பநிலை.
தொடர்ச்சியான Dry cough(வரட்டு இருமல்)கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்:
அடிக்கடி வறட்டு இருமலால் பெண்களுக்கு குறிப்பாக வயதான மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர் அடக்கி வைக்கும் திறன் குறைகிறது.உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது இதனால் கண்கள் சிவந்தும் உடல் சோர்வுடன் காணப்படும்.
தூக்கத்தில் இடையூறுகள் ஏற்படும் இதனால் ஆற்றலுடன் செயல்பட முடியாது.
கட்டுப்படுத்த முடியாத இருமல் சில நேரங்களில் வாந்தி மற்றும் மயக்கத்தை உண்டாக்கும்.
கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
Dry cough(வரட்டு இருமல்) தடுக்க வழிகள்
தேன்:
வரட்டு இருமலுக்கு தேனை தொண்டைப் பகுதியில் பூசுவதன் மூலம் இருமல் குறைய வாய்ப்புள்ளது.மேலும் தேனுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிப்பதனால் தொண்டைக்கு இதமளிக்கும்.
உறங்குவதற்கு முன்பு 2 லிருந்து 3 ஸ்பூன் தேன் சாப்பிடலாம்
தேனை 12 மாதங்களுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பொட்டுலிசம் என்னும் அரிய வகை நோய் காரணமாக கொடுக்கக்கூடாது.
காய்கறிகள் கொண்ட சூப்:
காய்கறிகள் நிறைந்த வெதுவெதுப்பான சூப் சாப்பிடுவதின் மூலம் தொண்டைக்கு இதமளிக்கும் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.அல்லது சுக்கு கலந்த டீ பருக தொண்டைப் புண்ணை ஆற்றும் இருமலை குறைக்கும்.
உடனடி நிவாரணங்கள்:
உப்பு நீர்:
வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதன் மூலம் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.இஞ்சி டி:
இஞ்சியைத் தோல் சீவி மைய அரைத்துக்கொண்டு பின்பு கொதிக்கவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து பருக வேண்டும்இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தொண்டையில் உள்ள தொற்றுக்களை உடனடியாக அளிக்கும்.
புதினா டீ:
புதினா இலையை அரைக்காமல் அப்படியே வைத்து பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து ஆறியபின் பருக வேண்டும் இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.கொள்ளு ரசம்:
100 கிராம் கொள்ளு எடுத்துக்கொண்டு அதில் சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து உப்பு சேர்த்து பருக வேண்டும் இதனால் உடல் வெப்பம் அதிகரித்து சளித்தொல்லை மற்றும் வரட்டு இருமல் குறையும்.தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- அதிக வெள்ளை சர்க்கரை கொண்ட பொருள்கள்.
- பொரித்த உணவுகள்.
- அரிசி சாதம் மற்றும் கோதுமை பொருட்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.
- பகலில் உறங்குவது.
- காபி அருந்துவது.
பின்பற்றவேண்டியவை:
- வெதுவெதுப்பான நீர் பொருட்களை அடிக்கடி எடுக்க வேண்டும்.
- சிறிது காலம் பழங்களைத் தவிர்ப்பது நல்லது.
- தலையணை மற்றும் போர்வையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- மெத்தையில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அதில் ஏராளமான தூசுக்கள் இருக்கும்..
- குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..