insomnia என்பது ஒருவகையான தூக்க கோளாறு, இதில் தூக்கம் வரும் உணர்ச்சிகள் தோன்றாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பது போல மாயத்தோற்றத்தை உண்டாக்கும்.
தூக்கமின்மையின் வகைகள்
- 1. முதன்மை insomnia
- 2. இரண்டாம் நிலை insomnia
முதன்மை insomnia:
இந்த நிலை குறுகியகால தூக்கமின்மை( இது கடுமையாக இருக்கும்) அல்லது நீண்ட காலம்( மாதக்கணக்கில் நீடிக்கும்) உடல் ஆரோக்கியத்தைப் பொருத்து அவ்வபோது தோன்றும்.
முதல் வகையான குறுகிய கால insomnia அல்லது கடுமையான insomnia ஒரு இரவு முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும். இதில் வாரத்திற்கு 3 லிருந்து 4 முறை இரவில் தூக்கமின்மை ஏற்படும். இந்த வகையில் வரும் தூக்கமின்மை பிரச்சனை உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பொருத்து அமையாது, சூழ்நிலை பொறுத்து அமையும்.
இரண்டாம் நிலை insomnia :
இரண்டாம் நிலை insomnia உடல்நலம் மற்றும் சுகாதாரத்தைப் பொருத்தது( வாதம் , மன வலிமை குறைவு, மனசோர்வு, சைனஸ், புற்றுநோய், ஆஸ்துமா) போன்ற உடல்நல பிரச்சனை காரணமாக உண்டாகும். மேலும் வலி நிவாரணி மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதாலும் உண்டாகும்.
insomnia காரணம்:
முதன்மை தூக்கமின்மைக்கான காரணம்:
சமூகப் பிரச்சனை( காதல் தோல்வி, நெருங்கியவர்களின் மரணம், விவாகரத்து, வேலையில் பிரச்சனை) போன்ற நிகழ்வுகளால் மன அழுத்தம் . அதிகரிப்பு.தூங்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்( அதிக வெளிச்சம், சத்தம், அசுத்தமான படுக்கை)
தூங்கும் நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது( இரவு பணி, இரவு பார்ட்டி, மற்றும் பயணங்கள்)
இரண்டாம் நிலை தூக்கமின்மைக்கான காரணம்:
உடல்நலப் பிரச்சனைகளான மன அழுத்தம், படபடப்பு, மூக்கடைப்பு, ஒவ்வாமை, சளி, ஜீரணமின்மை, மூட்டு வலி போன்றவையால் உண்டாகும்.
மேலும் அப்படியான காப்பி மற்றும் ஆல்கஹால் உபயோகப்படுத்துவதால் இரண்டாம் நிலை தூக்கமின்மை ஏற்படும்.
பெரும்பாலும் மக்கள்தொகையில் பாதிக்குமேல் சைனஸ் மூக்கடைப்பு போன்றவையால் தான் அதிகமான தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
insomnia நிகழும் ஆபத்து:
தூக்கமின்மை பிரச்சனை இளைஞர்களை விட வயதானவர்களை அதிகம் பாதிக்கின்றது. பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களும் மற்றும் அமெரிக்கர்களும் இதில் பாதிப்படைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.insomnia அறிகுறிகள்:
insomnia பிரச்சனையால் உடல் சோர்வு, கண்களை சுற்றி கருவளையம், கண் எரிச்சல், அறிவுத் திறன் பாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்றவையாகும்.
insomnia கண்டறிதல்:
முறையான மருத்துவரை சந்திக்க வேண்டும் அவர் உங்களது உடல்நலம் மற்றும் தூக்க கால இடைவேளையை பற்றி கேட்பார். மேலும் உங்களது அன்றாட வேலைகளில் உள்ள புத்திக்கூர்மை மற்றும் வலிமையைப் பற்றி அறிந்து கொள்வார் இதனைப் பொறுத்து உங்களது insomnia வகையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
insomnia சிகிச்சைகள்:
insomnia பிரச்சனைக்கு வேறு எந்த கடினமான சிகிச்சையும் தேவையில்லை.insomnia உடல் சக்தி இழப்பு மற்றும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரிடம் குறுகிய காலத்திற்கு தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தூக்க மாத்திரைகள் நல்ல பலனை கொடுத்தாலும் அடுத்தநாள் மயக்கம் படபடப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தூக்கத்தை அதிகம் தூண்டக்கூடிய மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் அது காலப்போக்கில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
insomnia சரி செய்ய உங்களது உடல்நல பிரச்சனை சரி செய்து கொள்ள வேண்டும்.
insomnia சிக்கல்கள்:
நமது உடலுக்கும் முக்கியமாக மூளைக்கும் ஓய்வு தேவை அப்போதுதான் குறைபாடுகளை சரிசெய்து உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும். ஒருவேளை insomnia பாதிக்கப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட பல உடல்நலப் பிரச்சனைகள் ஒன்றுசேர்ந்து கொள்ளும்.
அதிக உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், மனஅழுத்தம் , சுருங்கிய முகம், தன்னம்பிக்கை இழந்தவராக தோன்றுதல், பிரச்சனைகளை கையாளுவதில் சிக்கல், கவலையோடு இருத்தல், எரிச்சல், ஒரு சில நேரத்தில் விபத்துக்கள் கூட நேரிடலாம்.
insomnia எப்படி தடுப்பது:
இரவில் சரியான நேரத்தை குறித்து கொண்டு தூங்கச் செல்லுதல்( 20 வயதுக்கு மேற்பட்டோர் இரவு 9.30 உறங்கச் செல்லலாம்).
பகலில் ஒருபோதும் தூங்கக்கூடாது. அது உங்களது இரவு தூக்கத்தை கெடுக்கும்.
படுக்கையறையில் கைபேசி போன்ற மின்னணு உபகரணங்களை வைக்கக்கூடாது அதிலிருந்து வரும் கதிரியக்கம் தூக்கத்தை மிகவும் பாதிக்கும்.
தூங்கும் இடத்தில் குறைந்த வெளிச்சம் உள்ளது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான காபி பருகுவதை நிறுத்த வேண்டும்.
புகையிலை மற்றும் ஆல்கஹால் கோபத்தை குறைக்க வேண்டும்.
அதிக அளவு உடற்பயிற்சி செய்து உடல் சக்தியை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதாவது படுக்கைக்கு மூன்று மணி நேரம் முன்பு நன்கு உடற்பயிற்சி செய்து இருக்க வேண்டும்.
இரவு காரசாரமான உணவுகள் அதிகமாக எடுக்கக்கூடாது. அரை வயிறு உணவு போதும்.
இரவில் புத்தகம் வாசிக்கும் போது அதிகப்படியான உறக்கம் தோன்ற வாய்ப்பு உள்ளதால் இதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.