கடுக்காய்(Haritaki)-மருத்துவ குணம்

0

கடுக்காய் நன்மைகள்Haritaki:


குறிப்பு:
கடுக்காயின் தோல் மருத்துவ குணம் வாய்ந்தது ஆனால் அதன் விதை நச்சுத்தன்மை வாய்ந்தது அதை தவிர்த்துவிட வேண்டும்

வாதம் பித்தம்:

சிறிதளவு கடுக்காய் பொடியை தினமும் அதிகாலையில் கொதிக்க வைத்து குடித்து வர வாதம் மற்றும் பித்தம் முற்றிலும் குணமாகும். ஏனென்றால் இந்த வாதம் மற்றும் பித்த நீர்தான் உடலில் 100 விதமான உங்களுக்கு முக்கிய காரணமாகும் குறிப்பாக சைனஸ் கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தமான நோய்களுக்கு இதுவே காரணம் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள் காலை கடுக்காய் உண்டுவர வாதம் பித்தம் சம்பந்தமான நோய்கள் முற்றிலும் குணமாகும்.

மூக்கில் ரத்தம் வடிதல்:

உடல் சூடு அல்லது நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூக்கில் கொப்புளங்கள் மற்றும் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனை உண்டாகும் கடுக்காய் பொடியை சிறிதளவு லவங்கப் பட்டையுடன் சேர்த்து முகர்ந்து வந்தால் 5 நிமிடங்களில் இரத்தம் வடிதல் குணமாகும் மற்றும் காயங்கள் விரைவில் ஆறும்.

இயற்கையான பேதி:

தவறான உணவு பழக்கம் வயிற்றில் நிறைய கழிவுகள் தேங்குகிறது இதனை வெளியேற்றாவிட்டால் தொப்பை பிரச்சனை மற்றும் பல வியாதிகளும் உண்டாக நேரிடும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் நான்கிலிருந்து ஆறு ஸ்பூன் கடுக்காய் பொடியை கொதிக்கவைத்து பருக வேண்டும், இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் வயிற்றில் உள்ள அனைத்து கழிவுகளும் நீங்கிவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்

வாய் துர்நாற்றம்:

கடுக்காய் பொடியுடன் சிறிதளவு கொட்டைப் பாக்கு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இதைக் கொண்டு பல் துலக்கி வர வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகள் சம்பந்தமான வியாதிகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

விந்தணு அதிகரிப்பு:

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் உண்டால் விந்தணுவும் பலமே
என்று சித்தர் பாடலில் கூறியுள்ளது போல்
கடுக்காயை ஒரு மண்டலம் சாப்பிட கிழவனும் குமரன் ஆகலாம்,
தினமும் இரவு உணவு உண்டபின் செலவு கடுக்காயை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும் இதுல உடலில் கழிவுகள் வெளியேறி வாதம் பித்தம் போன்ற நோய்கள் குணமாகும் இதனால் உடல் உஷ்ணம் குறைந்து விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

உடல் எடை குறைய:

திரிபலா என்பது கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் ஆகிய மூன்றும் கலந்த மருந்தாகும்.
இதனை காலை மற்றும் இரவு வேளையில் கொதி நீரில் கலந்து குடிக்க உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கட்டிகள் கரையும் மேலும் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளும் கரையும்.

உடல் பலம்:

சிறிதளவு கடுக்காய் தேனில் குழைத்து அதனுடன் ஐந்து பேரிச்சம் பழமும் சுண்டக்காய்ச்சி பசும்பாலும் எட்டு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் இரும்பு போல் பலம் பெறுவதை நீங்களே உணர்வீர்கள்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்:

பொதுவாகவே சிலருக்கு ஜீரணசக்தி மிகவும் குறைவாக இருக்கும் அவர்களுக்கு பச்சை கடுக்காய் தோலை எடுத்து அத்துடன் இஞ்சி பச்சை மிளகாய் சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் போல் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் குடல் பூச்சிகள் நீங்கும்.

முகத்தில் கருப்பு போக:

சிலருக்கு உடலில் காயங்கள் மற்றும் முகத்தில் தோன்றும் முகப்பருக்களில் கருப்பாக வடுக்கள் இருக்கும் அதனைப் போக்க கடுக்காய் பொடியை சிறிதளவு நீர் சேர்த்துக் குழைத்து பத்து போல் போட ஒரு சில வாரங்களில் கருமை நீங்கும்.

குடல் பூச்சிகள் நீங்க:

குடல் பூச்சிகளால் ஆசனவாயில் அரிப்பு , அஜீரண தன்மை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் இதிலிருந்து நீங்க கடுக்காய் பொடியை சிறிதளவு வேப்பெண்ணை கலந்து கவளம் போல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை இரண்டு மற்றும் இரவு தூங்கும் முன் இரண்டு என சாப்பிட்டு வர குடல் பூச்சி தொந்தரவு இருக்காது முற்றிலும் நீங்கிவிடும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)