ஸ்டெராய்டுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்PCT- Post cycle therapy:
முதல் முறை ஸ்டெராய்டு உபயோகிப்பவர்கள் ஒரு ஸ்டெராய்டு சைக்கிள் முடிந்தவுடன்அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விட்டுவிடுவார்கள் மற்றும் தான் செய்த கடினமான உடற்பயிற்சி மற்றும் அப்டமன் ஒர்க்அவுட், கார்டியோ பயிற்சிகள் ரெஸ்ட் பெயரில் ஒன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு தவிர்த்துவிடுவார்கள் . இதனால் அதிகப்படியான பக்கவிளைவுகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. தீவிரமான கல்லீரல் சிதைவுக்கு உள்ளாக நேரிடும், நமது உடலில் உள்ள அடிப்பேசு திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளை சுற்றி கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும் இதயத் தசைகளின் அடர்த்தி அதிகரிக்கும் இதனால் தசைகள் சுருங்கி விடுவதில் சிரமம் ஏற்படும் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு அடைப்பதால் கரோனரி இதய நோய் வர வாய்ப்புள்ளது.சாதாரண மனிதர்களை விட உடல் உறுப்புகள் அபரிதமான வளர்ச்சி ஏற்படுவதால் மேற்கொண்டு உறுப்புகள் இயங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் சண்டை உணர்வை தூண்டுகிறது இதனால் குடும்பம் மற்றும் நண்பர்களிடையே பிரிவு ஏற்படுத்துகிறது. இயற்கையாக உண்டாகக்கூடிய டெஸ்டோஸ்ட்டேன் உற்பத்தியை முழுவதும் அடக்குகிறது இதனால் விந்து உற்பத்தி மிகவும் குறைந்து விடுகிறது
மூட்டு இணைப்புகளில் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது இதனால் ஸ்டெராய்டு எடுப்பது நிறுத்தியவுடன் தொற்றுகள் அதிவேகமாக பரவ ஆரம்பிக்கிறது பின் உறுப்புகளை இலக்க நேரிடுகிறது.அதிகப்படியான உடல் வெப்பம் காரணமாக முடி கொட்டுதல் , பெரிய முகப்பருக்கள் போன்றவை உருவாகிறது.
ஹார்மோன் சமநிலை இன்மை காரணமாக ஆண் மார்பக வளர்ச்சி ஏற்பட காரணம் ஆகிறது
உடலிலுள்ள ஸ்டெராய்டு மருந்துகளை வெளியேற்றுவது என்று பார்ப்போம்
ஸ்டெராய்டு உபயோகப்படுத்தும் போது , உறக்கத்திலிருந்த தலைமை சுரப்பியானபிட்யூட்டரி சுரப்பியை நாம் தூண்ட வேண்டும் இதிலுள்ள GH மற்றும் FSH ஹார்மோன்கள்தான் நமது வளர்சிதை மாற்றத்தையும் விதைப்பையில் உள்ள டெஸ்டோஸ்டீரான்
ஹார்மன் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறது,இதை நாம் தூண்ட ஆரம்பிக்க
வேண்டும்.
இயற்கையாக ஹார்மோன் அதிகரிக்க உணவுகள்:
விட்டமின் சி
உடலிலுள்ள ஸ்டெராய்டு மருந்துகளை வெளியேற்ற நாம் விட்டமின் சி உள்ள உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். இதனால் விட்டமின் சி உள்ள பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு , மற்றும் அன்னாசி போன்ற பழங்களை ஜூஸ் போலசெய்து ஒரு நாளைக்கு 3 வேளை பருக வேண்டும். இது நமது கல்லீரல் மற்றும்
சிறுநீரகத்தில் ஸ்டீராய்டு மருந்துகளால் உண்டான விளைவுகளை குறைத்து, அதன்
வேகத்தை அதிகப்படுத்தி உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கும்.
பீட்ரூட் மற்றும் மாதுளை:
பீட்ரூட் மட்டும் மாதுளை போன்ற அதிக நைட்ரிக் ஆக்சைடு உள்ள உணவுகளை
எடுக்கும் பொழுது நமது இரத்த குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க
உதவுகிறது.மேலும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டஇது மிகவும் உதவுகிறது
உணவு முறை:
ஸ்டிராய்டு மருந்துகளை வெளியேற்றும் போது நாம் முன்பு பயன்படுத்திய உணவு
முறைகளை மாற்ற கூடாது அதே அளவு புரதமும், கார்போஹைட்ரேட்டும் ,கொழுப்புகளும்,சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு முறையை பின்பற்ற வேண்டும். வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய கோதுமை ஓட்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்க
வேண்டும்.மேலும் அதிகப்படியான இனிப்பு மற்றும் உப்பு கலந்த கார வகைகளை தவிர்த்துவிட வேண்டும்.
உடற்பயிற்சி:
இப்போது நாம் ஸ்டீராய்டு மருந்துகளை வெளியேற்றும் நிலையில் உள்ளதால்
அதிகப்படியான எடைப் பயிற்சி செய்யக்கூடாது. ஏனென்றால் அதிக எடை பயன்படுத்தி செய்யும்பொழுது தசைகளில் காயங்கள் உண்டாகும்
இதனை சரிசெய்ய இந்த நேரத்தில் நம் உடலில் போதிய அளவு ஹார்மோன்கள் இல்லாததால் தசை இழப்பு அதிகமாக இருக்கும், ஏனென்றால் நாம் இப்போது ஸ்டெராய்டு மருந்துகளைவெளியேற்றும் நிலையில் உள்ளோம். இதனால் உடல் ஒத்துழைக்கும் அளவு மட்டும் எடை பயன்படுத்தி பயிற்சி செய்ய வேண்டும்.அதிகப்படியாக கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டும். அதிகப்படியாக கார்டியோ பயிற்சிகளை செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் கல்லீரலுக்கு இரத்த சுத்திகரிக்கும் பணி அதிகமாகும் மற்றும் உடலில் உள்ள கழிவுகளை நமது சிறுநீரகம் வியர்வையாக வெளியேற்றும்.
ஸ்டெராய்டு எடுப்பது நிறுத்திய உடன் நாம் ஹை இன்டர்சிட்டி இன்டர்வெல்வொர்க் அவுட்HIIT என்று சொல்லக்கூடிய உடற்பயிற்சி முறையை பின்பற்ற வேண்டும். அதிகப்படியான நிறைவுறா கொழுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற கீழாநெல்லி உபயோகிக்க வேண்டும். மற்றும் நமது சிறுநீரகத்தில் உள்ள நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்ற வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் நெருஞ்சில் போன்ற மூலிகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.