ஸ்டெராய்டு(steroids) என்றால் என்ன எப்படி வேலை செய்கிறது

0

ஸ்டெராய்டு(steroids) முக்கியத்துவம் :


தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் ஆரம்பம் முதலே ஊக்க மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

ஏனென்றால் நாம் இயற்கையாக உடலை கட்டுமஸ்தாக கொண்டு வந்தாலும்,   நமது எதிரணியினர் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி நம்மை பின் தள்ளி விடுவார்கள்.

இதன் கட்டாயத்தால் நாம் ஊக்க மருந்து என்பது உடற்கட்டு துறையில் முக்கியமாக  ஒன்றாகவே உள்ளது.

ஆனாலும் ஊக்க மருந்து என்பது வெறும் 5% மட்டும்தான் மீதம் உள்ள 95 % நமது கடின உழைப்பும் உணவு முறையும் தான் காரணம்.

இந்த மீதமுள்ள 5 பர்சன்டேஜ் இல்தான் இப்போதெல்லாம்வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றன.

சந்தையில் குறைந்த அளவு பக்க விளைவுகள் உள்ள ஊக்கம் மருந்துகளும் நிறையவே கிடைக்கின்றன. இருந்தாலும் பயிற்சியாளர் பரிசீலனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.

ஸ்டெராய்டு(steroids) உடல் எப்படி அணுகுகிறது:

நமது உடல் இயற்கையாகவே கணிசமான அளவு ஊக்க மருந்துகளை சுரக்கும் இதனை உணவு பழக்கவழக்கங்கள் மூலம் அதிகரிக்கலாம். ஆனால் இயற்கையாக உடற்கட்டு கொண்டுவர பல வருடங்கள் பிடிக்கும்.

முக்கியமாக டெஸ்டோஸ்டீரான் எனப்படும் ஊக்கமருந்து நமது உடலில் உள்ள விதைப்பையில் இயற்கையாகவே குறிப்பிட்ட அளவு சுரக்கின்றது ஆனால் இது போதாது, அதனால் செயற்கையாக டெஸ்டோஸ்டீரான் மற்றும் குரோத் ஹார்மோன் ஊசி மூலம் செலுத்தும் பொழுது நமது ரத்த ஓட்டத்தில் கலந்து தனது குறிப்பிட்ட பணியை செய்கிறது,. சேர்க்கையாக ஹார்மோனை உடலில் செலுத்தும்போது, உடலிலுள்ள சென்சார் அதனை அறிந்து ஏற்கனவே ரத்தத்தில் ஹார்மோன்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது நாம் எதற்கு சுரக்க வேண்டும் என்று உறக்க நிலைக்கு சென்று விடும்.

ஆனால் நாம் ஸ்டீராய்டு உபயோகிப்பதே நிறுத்தியவுடன் உறக்க நிலையில் உள்ள ஹார்மோன் சுரப்பிகளை நாம் இயற்கையாக தூண்டாவிட்டால் தான் பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது .

ஸ்டெராய்டு(steroids) உடலில் எப்படி வேலை செய்கிறது:

ஒருவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது ஒவ்வொரு தசைநார் களிலும் காயங்களும், தசைகள் கிழிவது போன்ற பல நிகழ்வுகள் நடக்கும்.

இதனை சரிசெய்ய நாம் புரதங்களைப் பயன்படுத்துவோம், இதில் உள்ள அமினோ ஆசிட் தசைகளுக்கு சென்று காயங்களை சரி செய்தவுடன் மீண்டும் தசை அதிக அடர்த்தி யுடனும் பலத்துடனும் வளர ஆரம்பிக்கும்.

ஆனால் ஸ்டெராய்டு எடுக்கும்பொழுது இந்த செயல் 50 லிருந்து 60 மடங்கு வேகமாக நடக்கின்றனர் இதனால்தான் ஸ்டெராய்டு(steroids) உபயோகிக்கும்போது அதிகளவு புரதம் தேவைப்படும்.

சாதாரணமாக இயற்கையாக தசை வளர்ச்சி அடையும்போது மாதத்திற்கு 150 கிராம் என்ற அளவு தான் இருக்கும் ஆனால் ஸ்டெராய்டு(steroids)  உபயோகிக்கும்போது மாதத்திற்கு இரண்டிலிருந்து ஐந்து கிலோ வரை தசை வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.

ஸ்டெராய்டு(steroids)  உபயோகப்படுத்த தொடங்கி விட்டால்  ஒவ்வொரு சுற்று (2 மாதங்கள் )  முடிந்தவுடன் கண்டிப்பாக 50 நாட்கள் இடைவெளியுடன் இயற்கையாக உள்ள ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் முயற்சி செய்ய வேண்டும் இதனை போஸ்ட் சைக்கிள் தெரபி (PCT) என்று கூறுவார்கள்.

இதனை செய்யாவிட்டால் ஸ்டெராய்டு எடுப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் உடலில் தோன்ற ஆரம்பிக்கும்.

ஸ்டெராய்டு(steroids) எடுப்பதால் உண்டாகும் நன்மைகள்:

 • உடலில் உரோம வளர்ச்சி அதிகரிக்கும் அதாவது மீசை தாடி மற்றும் பிற பகுதிகளில் உள்ள உரோம வளர்ச்சியைத் தூண்டும்.
 • தசைகள் வளர்ச்சி அதிகரிக்கும் முக்கியமாக தோள்பட்டை தசைகள் .
 • எலும்புகளின் அடர்த்தியும், இணைப்புகளும் அதிக பலம் பெறும்
 • அதிக எடை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யலாம்
 • உடலில் உள்ள கொழுப்பு சதவீதம் குறைய ஆரம்பிக்கும் இதனால் உங்களது தசைகள் வெளியில் தெரியும்.
 • மனதில் தைரியமும் , ஆளுமைத் திறனும் உருவாகும்.

 ஸ்டெராய்டு எடுப்பதால்  உண்டாகும் தீமைகள்:

 • தசைகள் இழப்பு.
 • அதிகப்படியான கெட்ட கொழுப்பு உடலில் சேர்தல்.
 • முடி கொட்டுதல் முக்கியமாக தாடி மீசை உள்ள இடங்களில் முடி கொட்டுதல்.
 • முட்டிகளில் கடுமையான வழி.
 • மன அழுத்தம் எரிச்சல் உணர்வு மற்றும் சண்டை உணர்வு.
 • அதிகப்படியான பய உணர்வு தோன்ற ஆரம்பிக்கும்.
 • ஆண் மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும்.
.


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)