What is BCAA - Branched chain amino acid
BCAA - Branched chain amino acid என்பது உடற்பயிற்சி துறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சப்ளிமெண்ட். இது தசை வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் முக்கியமான 3 அமினோ அமிலங்களை உள்ளடக்கி தயாரிக்க பட்டதுதான் இந்த BCAA.
உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள்
isolusine, histidine, leucine, lysine, methionine, phenylalanine, threonine, tryptophen, valine
போன்ற அமினோ அமிலங்கள் உள்ள தசை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது இது நம் சாப்பிடும் புரத உணவுகளை எளிதில் உட்கிரகித்துக் கொள்ள உதவுகிறது அதிலும் leucine எனப்படும் அமினோ அமிலம் தான் முதல் இடத்தை வைக்கிறது.
இந்த leucine அமினோ அமிலத்தை முதன்மைப் பொருளாக கொண்டு leucine, isolucine , valine, ஆகியவை குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு சேர்த்து BCAA உருவாக்கப்படுகிறது
leucine அமினோ அமிலம் அதிகமுள்ளBCAA நல்ல தரம் உடையதாக இருக்கும்
why to take BCAA :
இந்தப் BCAA வை எப்பொழுதும் உடற்பயிற்சிக்கு இடையில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் கடுமையான உடற்பயிற்சியின் போது தசைகளில் நிறைய காயங்களும் தசை இழப்புகளும் ஏற்படும் அதனை உடனடியாக ஈடுகட்ட இந்த BCAA மிகவும் உதவியாக இருக்கும் இதனால் தசை இழப்பு 80% வரை குறையும்.
முக்கியமாக fatloss இன் போது உடலில் அதிக அளவு தசை இழப்புகள் ஏற்படும் அதனை ஈடுசெய்ய உடற்பயிற்சிக்கு இடையே BCAA எடுத்துக்கொண்டால் தசை இழப்பு இல்லாமல் பாதுகாக்கலாம். அதிலும் அதிகம் LEUCINE உள்ள BCAA தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
நாம் சாப்பிடும் புரத உணவுகளின் உட்கிரகித்தல் வேகம் அதிகரிக்கும் அதாவது(40%-50%) வரை அதிகம் புரதத்தை நமது உடல் எடுத்துக்கொள்ளும்.
BCAA Foods:
நமது உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் இல் இந்த மூன்று முக்கியமான அமினோ ஆசிட் நாம் சப்ளிமெண்ட் மூலம் மட்டுமே எடுக்கலாம் ஏனென்றால், உணவின் மூலம் கிடைக்கக்கூடிய leucine, isolucine, valine, அமினோ அமிலங்களை நமது உடல் ஜீரணம் செய்து பிரிக்க முடியாது அவ்வளவு கடினமாக உணவுடன் பிணைக்கப்பட்டிருக்கும்.
இதுவே நம் சப்ளிமென்ட் மூலமாக எடுக்கும்போது உடனுக்குடன் நமது உடல் அதனை எடுத்துக் கொள்ளும்.
BCAA அதிகம் உள்ள உணவு வகைகள்:
சிக்கன், முட்டை, மீன், மாட்டிறைச்சி, பீன்ஸ், சோயா போன்ற உணவுகளில் அத்தியாவசியமான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது
முக்கியமாக பால் சம்பந்தமானஅனைத்து பொருட்களிலும் இந்த வகையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
நம் பரவலாக பயன்படுத்தப்படும் வே. புரதம் கூட பாலில் இருந்து தயாரிப்பது தான்.
நம் எளிமையாக வே புரதத்தை எடுத்துக்கொள்ள மோர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் இதில் உள்ள குறைந்த பெப்டயில் பாண்ட் அமினோ ஆசிட் விரைவில் உடல் எடுத்துக் கொள்ளும்
BCAA( food vs suppliments)
![]() |
Amino acid bonds |
BCAA உணவில் மற்றும் சப்ளிமெண்ட் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சங்கிலித்தொடர் மட்டுமே அதாவது amino acid pheptail bond
இது உணவின் மூலம் எடுக்கக்கூடிய அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் அதிகம் காணப்படும் . அதனால் உணவில் இருந்து கிடைக்கும் புரதத்தை எளிதில் ஜீரணம் அடைய செய்ய வேண்டும்
இதற்கு ஒவ்வொரு முறை புரத உணவுகளை எடுக்கும் பொழுது மாவுச்சத்து அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதிக விட்டமின் சி உள்ள உணவுகளை புரதத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்க இஞ்சி புரத உணவு உடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நாம் உண்ணும் புரத உணவுகள் ஒழுங்காக ஜீரணம் அடைய வில்லை என்றால் இந்த சங்கிலித் தொடர் பிணைப்புகளை நமது உடல் உடைக்க முடியாது அது அப்படியே கழிவாக வெளியேறிவிடும்.
இதுவே BCAA வை சப்ளிமெண்ட் மூலமாக எடுக்கும்போது அதில் amino acid pheptail bond இருக்காது அதனால் உடனடியாக உடல் அதனை எடுத்துக்கொண்டு தசை வளர்ச்சியை அதிகரிக்கும்.