கண்களை சுற்றி பாதுகாக்க கடுக்காய் போதும் போதுமானது

0

 

 கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய எளிய வழி:

இப்போது உள்ள காலகட்டத்தில் கருவளையம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு பாதிப்பு ஆகிவிட்டது . இதனை சரிசெய்ய ஏராளமான வழிமுறைகளை முயன்றும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சோர்ந்து போய்விடுகின்றனர். இதற்கென்று பல லட்சங்கள் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட பலர் உள்ளனர். ஆனால் கண்களைச் சுற்றி கருவளையம் எதனால் வருகிறது, நமது உடல் நம்மிடம் என்ன கூறுகிறது, இதற்கான முழுத் தீர்வு என்ன என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நாம் செயல்பட வேண்டும்.

கண்களைச் சுற்றி கருவளையம் எதனால் வருகிறது:

கருவளையம் என்பது பல காரணங்களால் வருகின்றன ஆனால் பொதுவாக ஒரு குறிப்பிட்ட 3 காரணிகள் அனைவரிடமும் காணப்படுகிறது.

அதிகப்படியான கதிர்வீச்சு:

அதிகப்படியான கதிர்வீச்சு தோல்களில் உள்ள செல்களை அழித்து , இயற்கையாக உள்ள நிறங்கள் மங்க காரணமாகும், நமது உடலில் உள்ள மற்ற பாகங்களில் தோல்களின் தடிமன் ஆனது அதிகமாக உள்ளது, ஆனால் கண்களுக்கு அடியிலுள்ள தோலானது மிகவும் லேசான ஒரு திசுக்களால் ஆனது இதை கைகளில் தேய்த்தால் கூட பல பாதிப்புகள் உண்டாகும். அதனால்தான் முதலில் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் கருவளையம் தோன்ற ஆரம்பிக்கின்றது. இதனை குறைக்க வேண்டும் என்று பல களிம்புகளை உபயோகப்படுத்துகின்றனர் ஆனால் அந்த களிம்பானது மற்ற பகுதிகளில் உள்ள தோல் களுக்கு மட்டுமே பொருந்தும் கண்களுக்கு அடியிலுள்ள தோள்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கி சுருக்கங்களையும், நரம்புகளையும்ஏற்படுத்தும்.

அதிக கதிர்வீச்சு காரணிகள்

அதிகப்படியாக செல்போன் உபயோகப்படுத்துவது 75% பாதிப்புக்கு உள்ளாகும்.
அளவுக்கதிகமான மடிக்கணணி உபயோகம்60% பாதிப்புக்கு உள்ளா கின்றது.
நம்மைச் சுற்றியுள்ள மற்ற தொலைத்தொடர்பு கதிர்வீச்சுகள் நம்மை 16% வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கதிர்வீச்சை எப்படி கட்டுப்படுத்துவது:

உடலில் சிறிதளவு தங்கம் படுத்திய ஆபரணம் அணிய  வேண்டும் இது  நம்மைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு களிடமிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.
குறைந்த கதிர்வீச்சு உடைய உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

கண்களை தேய்ப்பது:

ஏதேனும் சிறு தூசி அல்லது சிறு பூச்சிகள் கண்களில் விழுந்தால் கூட கண்களை அளவுக்கு அதிகமாக தேய்க்கின்றனர் இதனால் சுற்றியுள்ள மிகவும் மெல்லிய தோள்கள் கிழிந்து கருமை நிறமாக தோற்றமளிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு:

போதிய அளவு ஊட்டச்சத்து நமது உடல் இல்லாத காரணத்தினால் உடலிலுள்ள மெட்டபாலிசம் அளவு குறைகிறது, உடலில் உள்ள மெட்டபாலிசம் அளவு பாதிக்கப்பட்டால் கண்களில் கருவளையம் மற்றும் முகம் ஒடுங்கியும் காணப்படும்.
மேற்கூறிய 3 பொதுவான காரணங்கள் தான் அனைவருக்கும் கருவளையம் உண்டாக காரணமாகிறது.
இந்தக் காரணங்களை சரிப்படுத்திக் கொண்டாலும் கூட ஏற்கனவே பாதிப்படைந்த தோல் திசுக்கள் அப்படியே கருமை நிறத்துடன் காணப்படும் இதனை சரி செய்ய ஒரே ஒரு மருந்து மட்டுமே போதுமானது, இது முழுக்க முழுக்க ஒரு இயற்கை சார்ந்த மருந்தாகும்.

கடுக்காய்(inknut, hertikai):

மிகவும் விலைமலிவாக கிடைக்கக்கூடிய இந்த கடுக்காய் பயன்படுத்தி கண்களுக்கு அடியிலுள்ள கருமை நிறத்தை நீக்கிவிடலாம், மேலும் இது கண்களுக்கு அடியில் உள்ள தோள்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்குவதில்லை, சிறிது கடுக்காய் எடுத்துக்கொண்டு ஒரு கல்லில் சிறிது நீர் விட்டு நன்கு தேய்த்து அதை பசைபோல் எடுத்துக்கொள்ள வேண்டும், சுண்டு விரலில் தொட்டு கண்களைச் சுற்றி அப்ளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் பின்பற்றி வந்தால் பத்தே நாட்களில் கருவளையத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)