அலர்ஜி சைன்ஸ் பற்றி கவலை வேண்டாம் எளிதில் குணப்படுத்தலாம்

0

  சைனஸ் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளில் அலர்ஜி சைனஸ் என்பது ஒரு வகையாகும்.  இது ஒரு  எதிர்ப்புசக்தி கோளாறால் உண்டாகும் ஒரு பாதிப்பாகும்.  இயல்பாக உள்ள ஒருவருக்கு  மூக்குப் பகுதிகளில் தூசுகள் அல்லது ஏதேனும் மகரந்த  பொருட்களோ மூக்குத் துவாரங்களில் நுழையும் பொழுது அவர்களது எதிர்ப்பு சக்தி ஒரு சில  தும்மல் மூலம் வெளியேற்றிவிடும்,  ஆனால் அலர்ஜி சைனஸ் உள்ளவர்கள்  ஏதேனும் தூசுகள் உள் செல்லும்போது  அவர்களது எதிர்ப்பு சக்தியானது  மிகப்பெரிய பாதிப்பு மூக்கில் ஏற்பட்டுள்ளது போல்  செயல்பட்டு  பத்திலிருந்து இருபது தும்மலும்  மூக்கில் சளி சுரப்பிகள் அதிகமாக சுரப்பதும் ஆக  ஒரு எதிர்ப்புசக்தி கோளாறை உண்டாக்குகிறது.   இது ஒரு சிலருக்கு  பிறவியிலிருந்து இருக்கும் ஆனால் வெகு சிலருக்கு அவர்களது வயதின் நடுப்பகுதியில் தான் தோன்றுகிறது இதனை ஒரு சில தற்காப்பு நடவடிக்கைகள் மூலமும் உணவு பழக்க வழக்கங்களில் மூலமும் சரி செய்து கொள்ளலாம்.

 அலர்ஜி சைனஸ் வருவதற்கான காரணங்கள்:

 ஜீரண பிரச்சனை:

 பெரும்பாலும் எதிர்ப்பு சக்தி  கோளாறு மட்டுமல்லாமல் பல  பாதிப்புகள் இந்த ஜீரண பிரச்சனையால் உண்டாகும் மலச்சிக்கல் காரணமாகிறது.  நீண்ட நாள் மலச்சிக்கல் காரணமாக நமது மூளை சூடு மற்றும்  அழுத்தம் அதிகமாக இருக்கும் இதே வருடக்கணக்கில் நீடிக்கும் போது ஹைப்போதலாமஸ் போன்ற  தலைமை சுரப்பிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மரபணு கோளாறு மற்றும் எதிர்ப்புசக்தி கோளாறு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சரியான உணவுகளை சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது:

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நாம் உணவின் மூலமே பெறுகிறோம் ஆனால் இதிலேயே பற்றாக்குறையும் காலதாமதம் ஏற்படும்போது பல பிரச்சனைகள் உடலில் உண்டாகிறது.   அதிகப்படியான சோடியம் நிறைந்த உணவுகள்  மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியாக உள்ளது இதனை நாம் வருடக்கணக்கில் உண்ணும் பொழுது  நமது  செல்களில்  பாதிப்புகள் ஏற்பட்டு  பல மரபணு மற்றும் உடல்  எதிர்ப்பு சக்தி சார்ந்த மாறுபாடுகளை நமது உடலில் உண்டாகிறது.

அலர்ஜி சைனஸ் பாதிப்பிலிருந்து குணமடைய வழி முறைகள்:

 மிளகு:

நமது உடலில் அலர்ஜி  மற்றும் மூச்சு சார்ந்த பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படுவது நமது மிளகு  ஆகும்.  இது உணவில் மட்டுமல்லாமல்  அடிக்கடி ஒரு நான்கிலிருந்து ஐந்து மிளகு வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும்  இதனால்  நமது உடலில் ஏற்பட்ட எதிர்ப்புசக்தி கோளாறு நாளடைவில் குணமாகும்.


 இஞ்சி:

தினமும் உணவு உண்டபின் சிறிதளவு இஞ்சி எடுத்துக்கொண்டு  அதன் தோல் சீவி நன்கு மென்று வெதுவெதுப்பான நீர் மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு நீங்கும்.

 வெற்றிலை:

 இயற்கையாகவே வெற்றிலையில் சளி நீக்கும்  ரசாயன மருந்துகள் அதிகம் உள்ளது.  ஒரு வெற்றிலையில் நான்கைந்து மிளகு மற்றும் சிறிதளவு துளசி வைத்து நன்கு மென்று அதன் சாறை மட்டும் அருந்த வேண்டும் இதனால் நுரையீரலிலுள்ள சளி மற்றும் தூசுகள் முற்றிலும் நீங்கும்.

வெதுவெதுப்பான நீர்:

அலர்ஜி சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ச்சியான நீரையோ அல்லது பொருட்களையோ உன்ன கூடாது . நன்கு  காய்ச்சி பின்பு ஆற வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை  பருக வேண்டும் மேலும் குளிப்பதற்கும்  முகம் சுத்தப்படுத்துவதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.

மின்விசிறி:

 மாலை வேளைகளில்  பயணங்கள்  மேற்கொள்ள கூடாது இதனால் குளிர்ச்சியான காற்று நமது நாசித்துவாரத்தின் செல்லும்போது அலர்ஜியை உண்டாக்கும்.  மேலும்  நமது வீடுகளில் பயன்படுத்தப்படும்  மின்விசிறி களையும் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

ஆவி பிடித்தல்:

ஆவி பிடித்தல் என்பது நன்கு பலன் அளிக்கக்கூடிய ஒரு முறையாகும்.  இதில் நொச்சி இலை அல்லது ஆடாதொடை போன்ற இலைகளை பயன்படுத்தி  தினமும் இரண்டு வேளை ஆவி பிடித்தல் வேண்டும். இதனால் நமது மூக்கு பகுதியில் உள்ள  உணர்வு  செல்களின் ஈரப்பதம் அதிகரித்து,  சளி பொருட்கள் அதிலிருந்து நழுவி வெளியேறும்.

மேலும் ஆவி பிடிக்கும் பொழுது சிறிதளவு தைல எண்ணையும்  மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மூக்கு குவளை : 

ஜல நிதி  என்று சொல்லக்கூடிய ஒரு பாரம்பரிய நாசித் துவாரத்தை சுத்தம் செய்யும் முறையை பயன்படுத்த வேண்டும் இது நமது மூக்கு பகுதிகளிலுள்ள தூசுகளும் ஏதேனும் கிருமித் தொற்றும் ஏற்பட்டால் அதையும்  முழுவதும் குணமடையச் செய்யும்.

இதற்கு நித்தி பாட் என்று சொல்லக்கூடிய ஒரு மூக்கு குவளையும் சிறிதளவு சுத்தமான நீரும்,  உப்பு மற்றும் சிறிதளவு சமையல் சோடா போன்றவை பயன்படுத்த வேண்டும்.

சுத்தமான நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் கல்லுப்பு மற்றும் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நமது தோல் பகுதி பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு நீரை ஆற வைக்க வேண்டும்,  பின்பு  குவளையின்  வாய்ப்பகுதியை மூக்கின் ஒரு துவாரத்தில்  வைத்து  நீரை உள்ளே விட வேண்டும் அந்த நீர் மூக்குத் துவாரத்தின் மறுபுறம் வரவேண்டும்  இதேபோன்று அடுத்த மூக்கு துவாரத்திலும் செய்யவேண்டும்  .  இந்த முறை  சைனஸ் பாதிப்புக்கு பெரிதும் பலனளிக்கக் கூடியதாகும். 


 முகக் கவசம்:

மேற்கண்ட முறைகளை கடைப்பிடிக்கும் போது மேலும் நாசித்துவாரத்தில் தூசிகள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதற்கு  மருந்தகத்தில்  கிடைக்கக்கூடிய காற்றை சுத்தப்படுத்தும் வகை உள்ள முகக் கவசத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும்.


உடற்பயிற்சி:

நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 தினமும் காலை வேளையில் ஓட்டப் பயிற்சியும்.  மாலை வேளைகளில் நடைப்பயிற்சியும் செய்யும்பொழுது நன்கு பலனளிக்கும்.

மேலும் இந்த அலர்ஜி சைனஸ் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் நன்கு பலன் அளிக்கக்கூடிய பல சூரணங்கள் உள்ளது அதை  தகுந்த சித்த மருத்துவரை ஆலோசித்து வாங்கி உபயோகப்படுத்தலாம்.  சித்த மருந்துகளை பயன்படுத்தும் போது  பாதிப்புகள் குணமடைய நீண்ட நாள் எடுத்துக் கொள்ளும் அதனால் மருந்து உட்கொள்வதை பாதியிலேயே நிறுத்தி விடக்கூடாது.

செயற்கை மருந்துகள்:

இந்த அலர்ஜி சைனஸ் பிரச்சனைகளுக்கு செயற்கை மருந்துகள் உடனடி பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும் ஆனால் செயற்கை மருந்துகள்  நிறுத்தியவுடன் அந்த  பாதிப்புகள்  மீண்டும் ஏற்படும்.  மிகவும் கடுமையான தும்மல் மற்றும் மூக்கடைப்பு  காலங்களில் மட்டும் இந்த செயற்கை மருந்துகளை பயன்படுத்தலாம் மற்ற வேலைகளில் இயற்கையான சித்த மருத்துவம் சிறந்த ஒரு தீர்வாகும்.

பழக்கவழக்கங்கள்:

  • உணவே மருந்து என்று உண்டு வந்த நமது முன்னோர்கள் அதீத உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று மருந்தே உணவு என்று சார்ந்து உள்ளோம்.
  •  தினமும் அதிகளவு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  நமது உணவில் சோடியம் அளவு குறைவாக இருக்க வேண்டும்.
  •  நம் காலை உண்ட உணவு சரியாக ஜீரணம் அடையாமல் இருக்கும் ஓர் உணர்வு ஏற்படும் போது மதிய உணவை தவிர்த்து இரவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  நாம் காலை வேளைகளில் சீக்கிரம் எழுந்து சுறுசுறுப்பாக இயங்க கற்றுக்கொள்ள வேண்டும் இதனால் நமது ஜீரண மண்டலம் ஆரோக்கியம் மேம்படும்.
  • அதிகளவு  பாஸ்ட் புட் உண்பதை முழுவதுமாக தவிர்க்கலாம்.
  •  தினமும் அரிசி உணவுகளை உண்பதை தவிர்த்து  கேழ்வரகு சாமை போன்ற சிறுதானியங்களை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
  • அன்றாட உணவில் மிளகு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காப்பி மற்றும்  டி போன்ற பானங்களை தவிர்த்து  இஞ்சி கசாயம் சுக்கு கசாயம் போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  மலச்சிக்கலை தவிர்க்க நம் கடுக்காய் சூரணம் இரவு வேளைகளில் எடுத்து வரலாம்.


 









கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)