தசைகள் துடிப்பது மற்றும் நடுங்க என்ன காரணம்

0

 

 நமது தசைகள் வெளிக்காட்டும் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள்:

 

நமது உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதை குறிப்பிட்ட சில அறிகுறிகள் மூலம் நமது உடல் நமக்குத் தெரிவிக்கும் இதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் , சப்ளிமெண்ட் போன்றவை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கும்,தசைகளுக்கும்  எவ்வித பாதிப்பும் உண்டாகாது.

தசைகளில் வலி மற்றும் தொற்று:

 

தசைகளில் ஏதேனும் ஒரு பகுதியில் காயம் பட்டது போல் வலி மற்றும் தொற்றுகளால் பாதிப்பு ஏற்படும்போது ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே அதனை சரி செய்ய முடியும், அதே விட்டமின் டி குறைபாடு, இது தசைகள் உள்ள காயங்களை சரிசெய்யவும் மேலும்  தொற்று எதிர்ப்பொருள் ஆக செயல்படுகிறது. பெரும்பாலும் இந்த வலி மற்றும் தொற்றுகள் கீழ் முதுகு பகுதிகளில் அதிகமாக தோன்றுகிறது இதற்கு விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்  தினசரி எடுத்துக்கொள்ள  வேண்டும்.
 

தசைகளில் ஏற்படும் துடிப்புகள்:

 

கண்ணத்தில் உள்ள தசைகள் மற்றும் தோல் பட்டை மற்றும் பல இடங்களில் உள்ள தசைகள் அடிக்கடி துடிப்பது போல் காணப்படும் இதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்து குறைபாடு மற்றும் உடல் அதிக காரத்தன்மை நிலைக்கு சென்று விட்டது தான் காரணம். இதனை சரிசெய்ய கால்சியம் அதிகமுள்ள வெண்ணெய் மற்றும் பால், காய்கறிகள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
மேலும் கால்சியம் கார்பனேட் அடங்கிய மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது அது இரத்தத்திற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது
 
மேலும் உடலில் உள்ள அதிக காரத்தன்மை குறைக்க நம் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம். மேலும் உணவில் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அடங்கிய உணவுகளை குறைக்க வேண்டும்,( ரொட்டி, பர்கர், சிப்ஸ், சோடா பானங்கள்etc...) 
 

உடற்பயிற்சிக்கு பிறகு குறைந்த ரிக்கவரி:

 

கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு நமது உடல் அதனை சரிசெய்ய புரதங்களில் உள்ள அமினோ ஆசிட் தொகுப்பை பயன்படுத்தி அதனை சரி செய்து பெரிதாக வளர்ச்சி அடைய செய்யும் ஆனால் குறிப்பிட்ட ஒரு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இந்த ரெக்கவரி காலம் அதிகமாக பிடிக்கும். இதனால் அடுத்த நாள் உடற்பயிற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு காரணம் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம், அதிக அளவு ஒமேகா-3 அடங்கிய மீன் உணவுகள்  பயன்படுத்தலாம்.
 

தசைகளில் எரிச்சல் உணர்வு:

 

அடிக்கடி தொடைப்பகுதியில் உள்ள தசைகள் மற்றும் முதுகுப்புற தசைகளில் எரிச்சல் உணர்வு காணப்படும் இதில் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் தோன்றும், இதற்கு காரணம் ஓய்வில்லாமல் கால் தசைகளுக்கும் முதுகுக்கும் அதிக வேலையை கொடுப்பது ஆகும், இதனால் அதிக அளவு லாக்டிக் ஆசிட் தசைகளில் சேமித்து வைக்கப்படும், நமது உடல் இதனை தானாகவே சரி செய்து கொள்ளும் ஆனால் இந்த குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் நமது உடல் சரி செய்து கொள்ளாது.
 
விட்டமின் பி1 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உள்ள லாக்டிக் ஆசிட் முழுவதும் நீங்கும் மேலும் இரவு வேளைகளில் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உண்பதை தவிர்க்க வேண்டும்( ரொட்டி, பர்கர், சிப்ஸ், சோடா பானங்கள்etc...) 
 

தசைகளில் பிடிப்பு:

 

அடிக்கடி குனியும்போதும் நிமிரும் போதும் வயிற்றுப் பகுதி மற்றும் கால் பகுதியில் தசைகள் பிடித்துக்கொள்ள காரணம் உடலில் போதிய அளவு சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், தாது உப்புகள் குறைவாக உள்ளது தான் காரணம்.
 
நாம் கடல் உப்பை பயன்படுத்தும்போது சோடியம் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம்.
 
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தாது உப்புகள் கிடைக்க வாழைப்பழம், பீன்ஸ், கொண்டைக்கடலை, ராகி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
 

வலிமையற்ற தசைகள்:

பெரிய தசைகள் ஆக இருந்தாலும் வலிமையற்ற உணர்வு இருப்பது போல் தோன்றும் இதற்கு காரணம் தசைகளுக்கு தேவையான விட்டமின் ஈ ஊட்டச்சத்து குறைவாக உள்ளதுதான். நீங்கள் உங்களது தசைகளில் வலிமையற்ற உணர்வு தோன்றினால் விட்டமின் ஈ உள்ள உணவுகளையும் சப்ளிமெண்ட் களையும் எடுத்துக்கொள்ளலாம்.



 


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)