நுரையீரல் ஆரோக்கியம்

0

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகள் :



நமது உடல் இயக்கத்திற்கு தேவையான ஆக்சிஜனை அளிப்பதில் முக்கிய பங்குவகிப்பது நுரையீரல்ஆகும் .

 நமது நுரையீரலில் உள்ள கோடிக்கணக்கான காற்றறைகள் நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை ரத்தத்துடன் கலக்கின்றது.

நுரையீரல் தமனிகள் மற்றும் சிறையில் மூலமாக காற்றினை சவ்வூடு பரவல் மூலமாக பரிமாறிக்கொண்டு நமது உடலை சமநிலையில் வைத்துள்ளது.

இந்த நுரையீரல் காற்றறைகளில் எண்ணிக்கையை குறையும் போது, அல்லது காற்றறைகளில் பாதிப்பு ஏற்படும்போது நமது ரத்தத்தின் கழிவுகள் அதிகரிக்கின்றது, நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவை குறைக்கின்றது மற்றும் இந்த பாதிப்பு பல உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.


மேலும் நுரையீரல் பாதிப்பால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறையும் பொழுது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுவதும் பாதிப்படைகிறது.


நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணங்கள்;


புகைப்பிடித்தல்:


புகைப்பிடித்தல் மூலம் பல ஆயிரக்கணக்கான காற்று நுண்ணறைகள் முழுவதும் சிதைவடைந்து நுரையீரலின் கொள்ளளவை குறைகிறது.

இதில் உள்ள பல்வேறு விதமான நச்சு வாயுக்கள் நுரையீரலின் காற்றறைகளில் படிந்து நுரையீரல் புற்றுநோயை தோற்றுவிக்கிறது.

இதனால் புகைப்பிடித்தலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.


மாசுக்கள் நிறைந்த சூழ்நிலை:


இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் வாகனங்களும் புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது இதனால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் எளிதில் நுரையீரல் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் மாசுக்கள் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது காற்று வடிகட்டி உள்ள முக கவசம் பயன்படுத்துவது மிகவும் நல்லது.


வலுவற்ற நுரையீரல்


அடிக்கடி நுரையீரலுக்கு பயிற்சி கொடுக்காமல் இருக்கும் பொழுது, நுரையீரலின் தாங்குதிறன் குறைய ஆரம்பிக்கிறது. இதனால் தினமும் ஏதேனும் நடை பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ செய்யும்பொழுது நுரையீரலின் கொள்ளளவையும், தாங்கு திறனையும் அதிகரிக்கிறது.


நுரையீரலை வலுப்படுத்தவும் உணவுகள்;


வெற்றிலை:


வெற்றிலை என்பது காலங்காலமாக சளி பிரச்சனைக்கு படுத்தப்பட்டு வந்த ஒரு மூலிகையே.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இதனை நாம் முழுவதும் மறந்து விட்டோம்.

உணவு உண்டபின் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் நமது முன்னோர்களிடம் இருந்து வந்தது.


வெற்றிலையுடன் சிறிதுமிளகு சேர்த்து சாப்பிடும் பொழுது நுரையீரலிலுள்ள நாள்பட்ட சளி கரைந்து வெளியேறிவிடும்.


இஞ்சி:


இஞ்சியில் உள்ள அதிகப்படியான ஜின்ஜரால்  எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில்   உள்ள கொழுப்பு கட்டிகளை கரைத்து நுரையீரல் எளிதில் சுருங்கி விரிய உதவுகிறது.


பழங்கள்:


நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது பழங்களாகும். தினமும் ஏதேனும் அருகாமையில் கிடைக்கக்கூடிய பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியம் இருக்கும்.

அதில் முக்கியமான பழங்கள் என்னவென்றால்.

சிவப்பு கொய்யா பழம்

அன்னாசி பழம்

கிருணிப்பழம்

அத்திப்பழம்

ஆப்பிள் பழம்

 

தவிர்க்க வேண்டியவை:


நுரையீரல் பாதிப்பினால் அதிகம் சளி கோர்க்கும் பொழுது ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும், அது கீழ்க்கண்டவாறு

பால் பொருட்கள்

வாழைப்பழம்

குளிர்ச்சியான நீர்

உருளைக்கிழங்கு.... போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

புரதங்கள்:

நுரையீரல் மேம்பாட்டிற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானது.

ஆகையால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முக்கியமானது புரதம் ஆகும்.

அதனால் எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்:

முட்டை

மீன்

கோழி இறைச்சி

பருப்பு வகைகள்

நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்க தேவையான பயிற்சிகள்:

  • தினமும் அதிகாலையில் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • மூச்சை நன்றாக இழுத்து 3 வினாடியில் வைத்து பின் விட வேண்டும் இதனால் நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கலாம்.
  • வாரம் இரண்டு முறையாவது ஓட்ட பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆவி பிடித்தல்:


நுரையீரல் பாதை மற்றும் மூக்கு புறங்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது இதனை தடுக்க ஆவிபிடித்தல் ஒரு நல்ல தீர்வாகும்.

தினமும் சுத்தமான வெந்நீரில் ஆவி பிடித்தல் அன்றாட நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆனால் தலையில் நீர் கோர்த்தல் மற்றும் தும்மல் போன்ற உபாதைகளுக்கு சிறிதளவு மூலிகைகளை பயன்படுத்தும் போது நிரந்தர தீர்வு கொடுக்கும்.


தேவையான மூலிகைகள்:

  • நொச்சி இலை
  • மஞ்சள்
  • தைல மர இலை
  • கருஞ்சீரக எண்ணெய்
  • ஆடாதோடை இலை

போன்ற நுரையீரலுக்கு பலம் அளிக்கக் கூடிய ஏதேனும் ஒரு மூலிகைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் போது நுரையீரலில் உள்ள பாக்டீரியா , வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம்

மூலிகை உருண்டை:

லவங்கப்பட்டை, ஆடாதொடை பொடி, மஞ்சள் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தி மூலிகை உருண்டை தயாரிக்கலாம், இதனை இரவு நேரங்களில் தூங்கும் அறையில் பற்ற வைக்கும் பொழுது பூஞ்சை மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து நுரையீரலை பாதுகாக்கலாம்.




நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள் :

  • சுவாச பிரச்சனை (ஆஸ்துமா )
  • அடிக்கடி சளிபிடித்தல் 
  • வலுவற்ற தசைகள் 
  • அதிகப்படியாக மூச்சு வாங்குதல் .
  • எதிர்ப்பு சக்தி குறைவு. 
  • நரம்பியல் குறைபாடு . 
 

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)