பெருங்குடல் அலர்ஜி | colon allergy home treatment in tamil

0

  பெருங்குடல் அலர்ஜி குணப்படுத்த ஒரு சில வழிமுறைகள் colon allergy home treatment:

குளூட்டன் உணவுகளை தவிர்த்தல்:


குளூட்டன் என்பது ஒரு புரத பிணைப்பாகும் ,குளூட்டன் அதிகம் உள்ள உணவுகள் நமது பெருங்குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகவும், இது அலர்ஜியை மேலும் அதிகரிக்கக் கூடியது,

குளுட்டன் அதிகம் உள்ள உணவுகளான கோதுமை ஓட்ஸ் பார்லி போன்ற உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளான கருப்பு கவுனி அரிசி அல்லது சாதாரண அரிசி மற்றும் பருப்பு வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

பால் பொருட்கள்:


குடல் அலர்ஜி உள்ளவர்கள் மிக முக்கியமாக தவிர்க்க வேண்டியது பால் பொருட்களாகும் இதில் உள்ள கேசின் புரோட்டின் நமது பெருங்குடல் ஜீரணம் செய்வதற்கு கடினமாக இருக்கும், அலர்ஜியை அதிகரிப்பதில் பால் பொருட்கள் மிக முக்கியமாக உள்ளது.


அளவான காய்கறிகள்:

காய்கறிகளை உண்பது நமது உடலுக்கு ஆரோக்கியம் தான் ஆனால் குடல் அலர்ஜி உள்ளவர்கள் அதிகப்படியான காய்கறிகளை சாப்பிடும் பொழுது நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதில் உள்ள நார்ச்சத்துக்களை செறிக்க ஆரம்பிக்கும், அதனால் அதிகப்படியான வயிறு உப்பசத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடல் சுவர் உள்ள காயங்கள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.


மாமிச உணவுகள்:

குடல் அலர்ஜிஉள்ளவர்கள் அதிகப்படியான காய்கறிகளை உண்பதை விட மாமிச உணவுகளை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் புரதம் அதிகம் எடுக்கும் பொழுது இரைப்பையில் ஆசிட் சுரப்பு அதிகரிக்கிறது. இரைப்பையில் சுரக்கப்படும் அதிகப்படியான ஆசிட் ஆனது மாமிசத்தில் உள்ள புரதங்களைசெறிக்க ஆரம்பிக்கும், முக்கியமாக நம் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் பயன்படுத்துகிறது.


எண்ணெய் பொருள்கள்:

நமது அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் என்னை பொருட்களில் அதிகமாக ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளதால் இது அலர்ஜி அதிகரிக்க கூடிய மிக முக்கியமான பொருளாகும் இதனால் குறைந்த அளவுஎண்ணெய் பொருட்களை பயன்படுத்த வேண்டும் முக்கியமாக தவிர்க்க வேண்டிய எண்ணெய் பொருட்கள் சோயா எண்ணெய், கடலை எண்ணெய், சோளஎண்ணெய், பருத்தி எண்ணெய் , பாமாயில் ஆகும்.


மது அருந்துதல் மற்றும் புகைப்பழக்கம்:

புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதால் நமது உடலில் உள்ள விட்டமின் சி மிகவும் குறைந்து விடுகிறது மேலும் உணவுப் பொருட்களில் உள்ள விட்டமின் சி நம் உடல் எடுக்க ஏதுவாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் நமது உடலில் ஆண்டி ஆக்சிடென்ட் அளவு குறைந்து மேலும் அலர்ஜியை தூண்டுகிறது.


அருகம்புல் மற்றும் கோதுமைப்புல் ஜூஸ்

அருகம்புல் மற்றும் கோதுமை புல்லில் உள்ள அதிகப்படியான குளோரோபைல் மற்றும் நார்ச்சத்துகள் ஆனது உடல் அலர்ஜியிலிருந்து விடுபட உதவுகிறது ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த ஜூஸ் எடுத்து வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்


விரத முறை:

வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை விரத முறை மேற்கொள்ளும் பொழுது உடலில் உள்ள அனைத்து விதமான அலர்ஜியிலிருந்தும் விடுபடலாம். முக்கியமாக குடல் அலர்ஜியில் இருந்து விடுபட மிக மிக முக்கியமானது விரதம் ஆகும். இதனால் நமது உடல் செல்கள் அதில் உள்ள கழிவுகளை தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்கிறது.


நல்ல பாக்டீரியாக்கள்:

துரித உணவுகளை தவிர்த்து நல்ல பாக்டீரியாக்கள் அடங்கிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய பழைய சோறு உணவை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான அனைத்து நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும் மேலும் இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆனது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிக முக்கியமானதாகும்.


ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்:

அடிக்கடி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் நமது உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களைஅழித்து விடுவதால் நமது ஜீரண மண்டலத்துக்கு பெரும் தீங்கிழைக்கிறது. மேலும் நமது உடலில் உள்ள இ கொலைபாக்டீரியாக்கள் உடலுக்கு தேவையான விட்டமின் கே ஊட்டச்சத்தை உற்பத்தி செய்வதால் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் எடுக்கும் பொழுது இதை அழிந்து விடுகிறது இதனால் அடிக்கடி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் எடுப்பது தவிர்க்க வேண்டும்.


உடல் கழிவுகள் வெளியேற்றம்:

இன்றைய கலாச்சாரத்தில் நாம் உண்ணும் உணவானது பல நாட்கள் நமது குடலிலேயே தங்கி இருக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் கொண்டு பல நோய்கள் வர வாய்ப்புள்ளது , இதனை சரி செய்ய நிலவரை பொடியை வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும் , இதனால் இயற்கை முறையில் உடற்கழிவுகள் வெளியேற்றும் நடைபெறும்



கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)