ஆண் பெண் உடலுறவுக்கான மூலிகைகள்| Herbs for infertility

0

  ஆண் பெண் உடலுறவுக்கான 9 மூலிகைகள் Herbs for infertility

இல்லற வாழ்வில் காதல் காமம் இரண்டும் கலந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள் மறைந்து போய்விட்டது, காரணம் நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய ஒரு சில மூலிகைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை நாம் மறுத்து இன்றைய நவீன யுகத்தில் கிடைக்கக்கூடிய குப்பை உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை, குறிப்பாக ஆண் பெண் இருபாலருக்கும் உடலுறவு நாட்டம் முதலில் இருந்ததை விட80 சதவீதம் குறைந்தே போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் குழந்தையின்மை ஆண் பெண் மலட்டுத்தன்மை, விரைப்புத்தன்மை குறைவு, அதிக உடல் எடை, பெண் கருப்பை கட்டிகள், பல பாலியல் குறைபாடுகள் இன்றைய காலகட்டத்தில் பெருகிவிட்டது.

உணவு பழக்க வழக்கங்களை சரி செய்தாலும் கூட நமது உடல் வீரியத்திற்கு உரமூட்ட ஒரு சில மூலிகைகளை நாம் எடுத்தே ஆக வேண்டும். அவ்வாறு நமது ஆயுர்வேதத்தாலும் நமது முன்னோர்களாலும் கூறப்பட்ட ஒரு சில மூலிகைகளை இங்கு பார்ப்போம்.


பூனைக்காலி:

ஆண் பெண் உடலுறவில் மிக உச்சநிலையில் உள்ள ஒரு மூலிகை பொருள் என்றால் அது பூனைக்காலி ஆகும். ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கக்கூடிய நரம்பு சம்பந்தமான பாலியல் குறைபாடுகளை சரி செய்ய பூனைக்காலியை நம் உணவிலோ அல்லது தனி மருந்தாகவோ எடுக்கும் பொழுது விரைவில் குணமடையும்.

பார்க்கின்சன் எனப்படும் நடக்குவாதம் குணமடைய பூனைக்காலி மிக அற்புதமான மருந்து ஆகும்.

இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டீஸ் உடலில் நைட்ரஜன் சத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம் உடல் நரம்புகள் முறுக்கு ஏற உதவும். நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் நம் பூனைக்காலி விதையை ஆறு மாதங்கள் பொழுது பூரண குணமடையும்

சாப்பிடும் முறை: பூனைக்காலி விதையை தோலை நீக்கி அதில் உள்ள பருப்பை எடுத்து பாலில் வேகவைத்து நிழலில் உலர்த்தி பின்பு பொடியாக்கி தினமும் மூன்று வேளை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது தேன் கலந்து உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


அஸ்வகந்தா:

மன அழுத்தத்தால் உண்டாக கூடிய ஆண்மை குறைவுக்கு இந்த ஒரு முழு தீர்வாக அமையும் இதில் இயற்கையாகவே ஸ்டீராய்டு மற்றும் அல்ஹலாயுடு மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதால் நமது பிட்யூட்டரி சுரப்பிகளையும் , டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது.

இதில் உள்ள நைட்ரஜன் சத்துகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விரைப்புத்தன்மை குறைபாடுகளை சரி செய்கிறது.

மன அழுத்தத்தால் உடலில் உண்டாகக்கூடிய அனைத்து வியாதிகளுக்கும் அஸ்வகந்தா எடுக்கும் பொழுது விரைவில் குணமடையலாம்

சாப்பிடும் முறை:

நேரடியாக அஸ்வகந்தா கிழங்குகளை காய வைத்து பொடி செய்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

மேலும் அஸ்வகந்தா வை பாலில் வேக வைத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தலாம்.

தினமும் காலை மற்றும் இரவு வெறும் வயிற்றில் நெய்யுடன் அஸ்வகந்தாமற்றும் பூனைக்காலி விதையை சாப்பிட்டு வரும் பொழுது பாலியல் ரீதியான அனைத்து நோய்களும் குணமாகும்.


அமுக்கிரா கிழங்கு:

புற நரம்பு கோளாறுகளுக்கு அமுக்குரா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது அதாவது தசைபிடிப்புகள், தசை வலி, தசை பலவீனம், உணர்ச்சிகளை உணர்தலுக்கான திறன் இல்லாமல் போதல் .

பெண்களுக்கு மலட்டுத்தன்மையை போக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு கருப்பை வலுப்படுத்த பயன்படுகிறது.

சாப்பிடும் முறை :

வெதுவெதுப்பான நீரிலும் பால் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் குல்கந்து உடன் கலந்து சாப்பிடலாம்.


நிலவரி கிழங்கு (தண்ணீர்விட்டான் கிழங்கு)

இவை ஆன்ட்டி இன்ஃப்ளமேசன் ஆக பயன்படுகிறது அதாவது உள் உறுப்புகளில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் குணமடைய செய்ய பயன்படுகிறது. அதிகமான கைப்பழக்கத்தால் ஏற்படும் நரம்புச் சேதம் மற்றும் விதைப்பை நரம்பு சுருள், கருப்பை கட்டிகள், சிறுநீர் குழாயில் ஏற்படும் தொற்று, பால்வினை நோய்களுக்கு மிக முக்கியமாக பயன்படுகிறது.

இது தைமஸ் சுரப்பிகளை தூண்டி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

இருமலுக்கு மிக முக்கியமான மருந்தாக பயன்படுகிறது இதில் உள்ள பொருள் இருமல் மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது

அதீதமான வயிற்றுப்போக்கை குணப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கு பயன்படுகிறது

சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற பயன்படுகிறது

வயதாவது தாமதப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்க பயன்படுகிறது.


நெருஞ்சில்:

நாம் பொதுவாக சாலை ஓரங்களில் பார்க்கும் ஒரு மூலிகை பொருள் நெருஞ்சில் ஆகும் பெண்களை விட ஆண்களுக்கு இது மிக முக்கியமான பயன் அளிக்கிறது.

ஆண்கள் விந்தணுக்களின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் விந்துவின் தரத்தை மேம்படுத்துகிறது,

ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை அதிகப்படுத்துகிறது.

சிறுநீரக கற்களை அகற்றுவதில் நெருஞ்சில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து மூன்று மாதங்கள் நெருஞ்சில் கசாயம் எடுக்கும் பொழுது ஆண்மை குறைவு முற்றிலும் நீங்கும்.


ஓரிதழ் தாமரை:

மலட்டுதன்மைக்கு முக்கிய காரணமான உஷ்ணத்தை குணமாக்க ஓரிதழ்தாமரை பயன்படுகிறது.

இதில் உள்ள வழவழப்புத் தன்மை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

இரவில் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இரவு உணவிற்கு பின்பு வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


நீர்முள்ளி விதை:

நீர்முள்ளி விதை பொதுவாக எலும்பு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது.

நீர்முள்ளி விதை மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் இருக்கும் பித்தத்தை வெளியேற்றுவதால் உடல் சுறுசுறுப்பு அடையும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது.

நீண்டநேரம் உடலுறவுக்கு நீர்முள்ளி விதையை பயன்படுத்தலாம்.


ஜாதிக்காய்:

முகம் மற்றும் உடல் வசீகரத்திற்கு பெயர் போன ஜாதிக்காய் குறைந்த அளவு பயன்படுத்தும் போது நன்மை தருகிறது.
நாம் உணவு மசாலாவாக பயன்படுத்தும் சாதிக்காய் முக வசீகரத்தை அதிகரித்து தம்பதிகளின் ஈர்ப்பை அதிகரிக்கிறது.
ஆனால் அதிக அளவு ஜாதிக்காயை எடுக்கும் பொழுது உடலுக்கு பெரும் தீங்கு அளிப்பதால் மிகக் குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது.


பாதாம் பிசின்:

உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட மிக முக்கியமான பொருட்களில் ஒன்று பாதாம் பிசின் ஆகும்.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்கவும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுகிறது.

மலட்டுத்தன்மையை போக்கும் மிக முக்கியமான மருந்துகளில் பயன்படுகிறது.

வயோதிகர்கள் கூட இளமையை உணர வைக்கும் பாதாம் பிசின் உடல் வெப்பத்தை தணிக்கிறது.

சிறிதளவு பாதாம் பிசினை பொடியாக்கி இரவில் நீரில் ஊற வைத்து பாதாம் பிஸ்தா மற்றும் காய்ந்த அத்திப்பழத்தை சேர்த்து ஒரு பானமாக தயாரித்து வெறும் வயிற்றில் அருந்தலாம்.

கிராமங்களில் இதனை புது மாப்பிள்ளை பானம் என்று அழைக்கிறார்கள்.----------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்மை அதிகரிக்க ஆண்மை அதிகரிக்க உணவுகள் ஆண்மை அதிகரிக்கும் உணவுகள் ஆண்மை அதிகரிக்கும் பழங்கள் விந்துவை அதிகரிக்கும் உணவுகள் ஆண்மை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள் aanmai athikarikka food aanmai athikarikka foods vinthu increase food in tamil aanmai athikarikka food tamil

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)