விரதம் இருக்கும் பொழுது நமது உடலில் நிகழும் மாற்றங்கள் |what happen when body in fasting

0

 விரதம் இருக்கும் பொழுது நமது உடலில் நிகழும் மாற்றங்கள்:

                நமது முன்னோர்கள் கடவுள் வழிபாட்டில் பயன்படுத்திய ஒரு முறை தான் விரதம் ஆகும். விரதம் இருப்பதினால் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது இன்றைய மருத்துவம் கூட விரதம் முறையை பல பேருக்கு பரிந்துரைக்கின்றனர்.

விரதம் முறையை கடைபிடிக்கும் பொழுது உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகிறது மற்றும் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கிளைக்கோஜன் கேட்டோன்களாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியை அளிக்கிறது

ஆயுர்வேதத்தில் கூட விரதம் இருக்கும் பொழுது நமது உடல் தூய்மை அடைவதை கூறுகிறது.

சிலர் ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பார்கள் ஒரு சிலர் மூன்று நாள் வரை விரதம் இருப்பார்கள்.

அப்படி விரதம் இருக்கும் காலகட்டங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.


முதல் நாள்1-12 மணி நேரம்:


           நமது உடலில் மிகவும் முக்கியமான குரோத் ஹார்மோன் எனப்படும் வளர்ச்சி ஹார்மோன் நமது பிட்யூட்டரி சுரப்பி உற்பத்தி செய்கிறது.

இது நமது உடலில் உள்ள சேதமடைந்த செல்களையும், மூட்டுகளில் உள்ள இணைப்புகளையும் சரி செய்கிறது.

இது நம் உண்ணும் உணவில் உள்ள புரோட்டீன்களை அதிகமாக கிரகித்துக் கொள்ளக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும்.

ஆனால் சிலர் செயற்கையாக ஊசி மூலம் இதனை எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அது மிகவும் ஆபத்தானது.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விரதத்தில் இருந்தாலே நமது உடல் அதனை உற்பத்தி செய்து கொள்கிறது.

நமது உடலில் உள்ள தேவையற்ற செல்கள் மற்றும் கொழுப்புகளை பயன்படுத்தி புரதத்தை உற்பத்தி செய்கிறது.


12 மணி முதல் -18 மணி வரை:


       நமது உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ள ஆரம்பிக்கும் கால நேரம் ஆகும்

இந்த காலகட்டத்தில் நமது தசைகளிலும் உறுப்புகளிலும் உள்ள சிதைவடைந்த புரதங்களை சிதைத்து புதிய புரதங்களாக உருவாக்குகிறது.

நமது ரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க ஆரம்பிக்கின்றது.

மேலும் நமது மூலையில் உள்ள நரம்பு செல்களில் கழிவுகளை வெளியேற்றுகிறது மற்றும் சிதைவடைந்த நரம்பு செல்களை புதுப்பிக்கிறது.


18 மணி முதல்- 24 மணி வரை:


நமது உடலின் உட்புறத்தில் உள்ள உறுப்புகளிலும் தசைகளிலும் இணைப்பு மூட்டுகளிலும் ஏற்பட்டுள்ள தொற்றுக்களையும், சிதைவுகளையும் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது.

கல்லீரல் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜனை முழுவதுமாக பயன்படுத்தி விடுகிறது இதனால் fatty liver இருந்து நமது கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது.

நமது கல்லீரல் கீட்டோன்ஸ் எனப்படும் புதுவிதமான சக்தியை நமது உடலுக்கு தருகிறது இது மாவு சத்தில் இருந்து கிடைக்கும் சக்தியை விட பல மடங்கு அதிக சக்தியை நமது உடலுக்கு தருகிறது.

தைராய்டு சுரப்பி சுரக்கும் T3 ஹார்மோன் அதிகரிக்கப்படுகிறது இதனால் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகளை உடல் செல் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

நமது உடலுக்கு புதுவிதமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறது இதனால் நம் உடலில் உள்ள அனைத்து தொற்று கிருமிகளும் அழிக்கப்படுகிறது முக்கியமாக நமது குடல் பகுதியில் உள்ள பூஞ்சைத் தொற்று, பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களால் ஏற்படும் தொற்று, குடல் புழுக்கள் போன்றவற்றை அழிக்க ஆரம்பிக்கின்றது. இதனால் விரதத்திற்கு பிறகு நமது ஜீரண மண்டலம் புத்துயிர் பெறுகிறது.

இதய ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுவதால் இதயத்துடிப்பு சீராகிறது.

நமது மூளையில் உள்ள நியூரான் செல்களை புதுப்பித்து புதிய நரம்பு செல்கள் கட்டமைக்கப்படுகிறது.

(stem cells) மூல செல்களின் உற்பத்தி இங்கு ஆரம்பிக்கின்றது.


24 மணி முதல்-48 மணி வரை:


நமது உடலில் உள்ள மூல செல்களின் அளவு 50% வரை அதிகரிக்கிறது இதனால் நமது உடலில் உள்ள சுத்திகரிப்பு பணி இன்னும் விரைவாக செயல்படுகிறது ஒவ்வொரு உறுப்புகளும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள ஆரம்பிக்கின்றது முக்கியமாக ஜீரண மண்டலம்.

கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகளை கரைக்க மூல செல்கள் முயற்சி செய்கிறது.

நமது ஒவ்வொரு செல்களுக்கும் சக்தி அளிக்கக்கூடிய மைட்டோகாண்ட்ரியாவின் அளவு அதிகரிக்கப்படுகிறது.


48 மணி முதல்-72 மணி வரை:


நமது உடலில் உள்ள மூல செல்களின் அளவு 100% அதிகரிக்கிறது,

இதனால் நமது செல்கள் புதுப்பிக்கப்பட்டு வயதாவது தடுக்கப்படுகிறது.

நமது தைமஸ் சுரப்பி புதுப்பிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலமானது 300% வரை அதிக வீரியத்துடன் செயல்பட ஆரம்பிக்கிறது.

auto immune disorder இல் இருந்து நமது உடல் முற்றிலும் குணமடைகிறது


ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் 72 மணி நேரம் விரதம் முறை எடுப்பது கடினமாகும், பல முனிவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் தியான முறையில் மன அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்ததால் விரதங்களை கடைபிடிக்க முடிந்தது.

72 மணி நேரம் விரதங்கள் எடுக்க முடியாவிட்டாலும் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் இடைவேளை ஒவ்வொரு உணவிற்கிடையிலும் இருக்கும் பொழுது சிறு சிறிதாக நமது உடல் விரதத்திற்கு பழகிக் கொள்ளும்.

விரதம் இருப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும் ஆதலால் தனது உடல் நலத்திற்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் விரதமுறையை மேற்கொள்ளலாம்.

 கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)