நமது குடல் பகுதிகளில் அதிகப்படியான புழுக்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:
நமது குடலில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் நிறைய உள்ளன நமது உடலுக்கு தேவையான ஒரு சில வைட்டமின்கள் உற்பத்திக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்குகின்றது.
ஆனால் இந்த புழுக்கள் நமது உடலுக்கு எவ்வித நன்மையும் அளிப்பதில்லை மாறாக உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை நமது உடலுக்கு கிடைப்பதற்கு பதிலாக இந்தப் புழுக்கள் எடுத்துக்கொண்டு உயிர் வாழ்கிறது.
இதனால் நமது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை, நாட்கள் கடந்து செல்லும்போது இந்தப் புழுக்களின் எண்ணிக்கைஅதிகரித்து பல்வேறு விதமான உடல் உபாதைகளை உண்டாக்குகின்றது.
- கொக்கி புழு
- நாடா புழு
- உருண்டை புழு
- பட்டைப்புழு
இதில் பெரும்பாலும் கொக்கி புழுக்கள் தான் அதிகம் நமது உடலில் காணப்படுகிறது .
கீழ்க்கண்ட அறிகுறிகள் நமது உடலில் தென்படும் பொழுது நமது குடல் பகுதியில் அதிகப்படியான புழுக்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்:
ஜீரண மண்டலம்:
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாக இருக்கும் பொழுது, வயிற்றில் உள்ள புழுக்களை வயிற்றுப்போக்கு மூலம் தானாகவே வெளியேற்றி விடும்.
ஆனால் வயிற்றில் அதிகப்படியான புழுக்கள் இருப்பதால் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை அதிகப்படியான ரத்தப்போக்கு இந்த புழுக்களால் ஏற்படுகிறது இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதன் காரணமாக நமது குடல் பாதைகளில் புழுக்கள் அதிகம் இருந்தும் நமது நோய் எதிர்ப்பு சக்திகளால் அதனை வெளியேற்ற முடிவதில்லை.
அடிக்கடி வாந்தி,வயிறு உப்புசம், வயிற்று வலி, எப்பொழுதும் வயிறு உப்பியே இருப்பது, வாயு தொல்லை, அசவுகரியம் , மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும்.
உடல் சோர்வு:
நமது சிறு குடல் பகுதிகளில் ஜீரணத் தன்மைக்காக இருக்கும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்தை இந்தப் புழுக்கள் திருடி சாப்பிட்டு விடுவதால் எந்நேரமும் உடல் சோர்வாகவே இருக்கும், ஒரு சிறு செயலை செய்வதற்கு கூட உடல் ஒத்துழைப்பதில்லை, அமரும் பொழுது கூன் விழுந்த நிலையில் அமருதல், கண்களைச் சுற்றி கருவளையம் போன்ற பல்வேறு உடல் சோர்வு பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
தோல் அரிப்புகள்:
நமது ஆசனவாய் சுற்றியும் அரிப்புகள் மற்றும் தொடை இடுக்குகளில் பூஞ்சை தொற்று, உடல் முழுவதும் சிறு சிறு கொப்புளங்களுடன் கூடிய அரிப்பு போன்ற பல்வேறு விதமான தோல் நோய்களை உண்டாக்குகிறது இந்த விதமான அறிகுறிகள் நமது உடலில் தென்படும் பொழுது உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி குடல் புழு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான இனிப்பு மற்றும் பால் பொருட்களை சாப்பிட தூண்டுதல்:
அதிகப்படியாக இனிப்பு பொருட்களை நமது உடல் அடிக்கடி சாப்பிட தூண்டுவது நமது குடல் பகுதிகளில் புழுக்கள் இருப்பதற்கான அறிகுறியாகும், ஏனென்றால் இந்தப் புழுக்களுக்கு சர்க்கரை பொருள் மிகச் சிறந்த உணவாகும், என்னை சாப்பிட்டு குடல் புழுக்கள் உற்பத்தி அதிகமாகிறது, ஆனால் நமது ரத்தத்திற்கு தேவையான சர்க்கரை அளவு கிடைக்காததால் நமது மூளையானது இன்னும் அதிகமாக சர்க்கரை மற்றும் பால் பொருட்களை சாப்பிட தூண்டுகிறது.
மூளை செயல்பாடு குறைவு:
brain fog என்று சொல்லக்கூடிய மூல செயல்பாடு குறைவு தோன்றுவது அதாவது நாம் ஒரு செயலுக்கு உண்டான தீர்வை யோசிக்கும் பொழுது நமது மூளையானது அதற்கு ஏற்றார் போல் செயல்படாமல் மந்தமான நிலைமையில் இருக்கும் இதனைbrain fog என்று அழைக்கலாம், அதிகமான குடல் புழு தொற்றுகள் தோன்றும் பொழுது இந்த மூளை செயல்பாடு குறைவு நோய் ஏற்படுகிறது.
இன்டர்மிட்டன் பாஸ்டிங் (intermitten fasting) போன்ற உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மூளை செயல்பாடு குறைவு நோய்களை தவிர்க்கலாம்.
அலர்ஜி:
சைனஸ் அலர்ஜி, தோல் அலர்ஜி, நுரையீரல் அலர்ஜி போன்ற பல்வேறு விதமான அலர்ஜிக்கு இந்த குடல் புழுக்கள் காரணம் ஆகிறது. பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுகள் இந்த குடல் புழுக்களால் தான் உண்டாகிறது முக்கியமாக பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று மிகவும் அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் ஒட்டுண்ணிகள் தான்.
ரத்த சோகை:
இரத்த இழப்பால் வரக்கூடிய இரத்த சோகைக்கு மிக முக்கியமாக காரணம் குடல் புழுக்கள் தான், எவ்வாறு என்றால் அதிகப்படியான கொக்கி புழுக்கள் நமது குடல் சுவரை காயமடையச் செய்து ரத்தப்போக்கு ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இவ்வாறு ஏற்படும் பொழுது அதீத ரத்த இழப்பு ஏற்பட்டு ரத்த சோகைக்கு காரணம் ஆகிறது, இதனால் இன்சொமேனியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது
மேலும் இந்த குடல் புழுக்களை நாம் கவனிக்காமல் விடும்பொழுது இது நமது குடல் பகுதிகளில் உள்ள உணவு உறிஞ்சும் பகுதிகளை சிதைக்கிறது.
மேலும் இது உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ஊர்ந்து சென்று அங்கு உள்ள செல்களை சாப்பிட்டு சிதைக்கிறது முக்கியமாக கல்லீரல் , சிறுநீரகம் நுரையீரல் , போன்ற முக்கியமான உறுப்புகளை தாக்குகிறது.
நாடாப்புழு போன்ற மிகப்பெரிய ஓட்டுண்ணிகள் நமது மூளை வரை ஊடுருவி செல்லக்கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானதாகும்.
ஆதலால் குடல் புழுக்களுக்கு எதிராக தகுந்த விழிப்புணர்வு எடுத்துக்கொண்டு நமது குழந்தைகளுக்கு தகுந்த குடல் புழு எதிர்ப்பு மருந்துகளை அளித்து பாதுகாக்க வேண்டும்.