உடல் எடையை கூட்டணுமா இதை மட்டும் குடிங்க | best mass gainer in tamil

0


உடல் எடையை அதிகரிக்க தேவையான இயற்கை உணவுகள் |best mass gainer in tamil


இன்றைய தலைமுறையினர் மிகவும் ஒல்லியாக இருப்பதே அழகு மற்றும் ஆரோக்கியம் என்று கூறுகின்றனர் ஆனால் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானது ஆகும். திடீர் என்று ஏற்படக்கூடிய உடல் நலக்குறைவால் நமது உடல் தாக்குப் பிடிக்கும் திறனை இழக்கக்கூடும், மேலும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட நாள் ஆகியும் தன் உடல் எடை போடவில்லையே என்று வருத்தப்படுபவர்களும் உண்டு ஆதலால் போதிய அளவு உடல் எடையை கூட்ட இயற்கையான முறையில் அதிக கலோரிகள் உடைய ஒரு பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:


நன்கு வருக்கப்பட்ட கருப்பு எள்ளு:

அதிகப்படியான கலோரிகள் உடைய இந்த பொருள் அதிகப்படியான கால்சியம் , மக்னீசியம், பாஸ்பரஸ்மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மேலும் பல்வேறு விதமான வைட்டமின்கள் நிறைந்தது. இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளில் 103 கலோரிகள் உள்ளது.


சுத்திகரிக்கப்படாத பசு நெய்:

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய சுத்தமான நெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்ததாகும். ஒரு ஸ்பூன் நெய்யில் 60 கலோரிகள் உள்ளது.


இரவில் ஊற வைக்கப்பட்ட நிலக்கடலை:

வருக்கப்பட்ட நிலக்கடலையை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது , ஏனென்றால் அதனை நமது கணைய நீரால் ஜீரணம் செய்து சத்துக்களை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். இரவில் ஊற வைக்கப்பட்ட நிலக்கடலையை வேக வைக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் உடலுக்கு தேவையான நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது உடல் தசைகளுக்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரதம் அதிகம் உள்ளதால் இதனை உடல் எடை கூட்ட நினைப்பவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் 100 கிராம் நிலக்கடலையில் 650 கலோரிகள் உள்ளது.


இரவில் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ்(over night oats):


குளூட்டன் இல்லாத ஓட்ஸ் தேர்ந்தெடுத்து அதனை இரவில் ஊற வைத்து விட வேண்டும் இதனால் இதில் உள்ள beta glucan அளவு அதிகரிக்கிறது இதனால் மூளை செயல் திறன் கூடுகிறது மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த உணவாகும். மேலும் பாலில் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ் உடல் எடையை கூட்ட மிகவும் சிறந்த உணவாகும். 100 கிராம் பாலில் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் 450 கலோரிகள் உள்ளது


வாழைப்பழம்:


எளிதில் ஜீரணம் அடையக்கூடிய வாழைப்பழம் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மிகவும் சிறந்தது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்ட விரும்புவர்கள் வாழைப்பழத்தை தனது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கனிந்த வாழைப்பழத்தை பயன்படுத்தக் கூடாது தெளிவான மஞ்சள் நிறமுடைய வாழைப்பழங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு சராசரி வாழைப்பழத்தில் 120 கலோரிகள் உள்ளது.


கருப்பு பேரிச்சம் பழம்:


நாம் கடைகளில் கிடைக்கக்கூடிய மலிவான பேரிச்சம் பழத்தை பயன்படுத்தக் கூடாது அதில் சர்க்கரை பாகு மற்றும் எண்ணையை தடவி பதப்படுத்தி வைத்திருப்பார்கள். சுத்தமான கருப்பு பேரிச்சம்பழம் பயன்படுத்த வேண்டும் இதில் உள்ள போலிக் ஆசிட் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும், உள்ள fluorine பற்சிதைவு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய செலினியம் அதிகம் உள்ளது அதிகம் உள்ளது.

ஒரு கருப்பு பேரிச்சம் பழத்தில் 20 கலோரிகள் உள்ளது.


தூய பசும்பால்:


காய்ச்சி வடிகட்டப்பட்ட தூய்மையான பசும்பாலில் அதிக கலோரிகளும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது 100 ml கொழுப்பு நிறைந்த பசும்பாலில் 75 கலோரிகள் உள்ளது


ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் தனது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வே புரதத்தை உடன் சேர்த்துக் கொள்ளலாம்


அதிக கலோரிகள் நிறைந்த ட்ரிங்க் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்


பால் 250 ml = 200 கலோரிகள்.

ஊறவைக்கப்பட்ட நிலக்கடலை50 gram = 330 கலோரிகள்

வருக்கப்பட்ட கருப்பு எள்ளு 4 ஸ்பூன் = 206 கலோரிகள்

இரவில் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ் 100 கிராம் =450 கலோரிகள்

வாழைப்பழம் இரண்டு = 220 கலோரிகள்

தூய பசும்பால்250ml = 200 கலோரிகள்

கருப்பு பேரிச்சம்பழம் 5 = 100 கலோரிகள்

தூய பசு நெய் 2 ஸ்பூன்= 120கலோரிகள்

மொத்தமாக இதில் 1826 கலோரிகள் இருப்பதால் உடல் எடையை கூட்ட மிகவும் உதவி செய்யும்.

இவை அனைத்தையும் கூலாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும் தொடர்ந்து 50 நாட்கள் இவ்வாறு சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயமாக உடல் எடை கூடுவதை நீங்களே பார்ப்பீர்கள்


மேலும் உடல் எடையை கூட்ட கலோரிகள் மிகவும் முக்கியமானது . தனது உடல் எடையுடன் 24 என்று என்னை பெருக்கிக் கொள்ளும் போது நாம் தினசரி பயன்படுத்தும் கலோரிகள் கிடைத்து இதிலிருந்து 500 கலோரிகளை அதிகமாக எடுக்கும் பொழுது உடல் எடை கூடும் 500 கலோரிகள் குறைவாக எடுக்கும் பொழுது உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)