குடல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிடுங்கள் | CURE WHOLE INTESTINAL PROBLEM WITH ONE DRINK

0

அல்சர் முதல் குடல் பகுதி தொற்று வரை உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு மருந்து:

 இரைப்பை தொடங்கி பெருங்குடல் முடிவு வரை உள்ள உணவு பாதையின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விதமான தொற்றுகள் தோன்றுகிறது அல்சர் சிறுகுடல் அலர்ஜி சிறுகுடலில் அதிகப்படியான கிருமி வளர்தல், சிறு குடல் அல்சர், பெருங்குடல் தொற்றுகள், பெருங்குடல் அல்சர், குடலிறக்கம், ஒட்டுக்குடல் வளர்ச்சி, சிறு மூலம் போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்து நாம் இங்கு பார்ப்போம்.

                 உணவு பாதை சம்பந்தமான தொற்றுக்களுக்கு நாம் பெரும்பாலும் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் தான் பயன்படுத்துகிறோம். இந்த ஆன்ட்டிபயாட்டிக்ஸ் இன் வேலை என்னவென்றால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிப்பது தான்.

          ஆனால் நம் உடலுக்கு தேவையான ஒரு சில வைட்டமின்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களையும் இது அழித்து விடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 73 பில்லியன் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை தினந்தோறும் பயன்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது

           நமது குடல் பகுதிகளில் உண்டாகும் கேன்சர் செல்களை கூட இந்த நுண்ணுயிரிகள் அழித்து செல்களை உண்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது, அப்பேர்ப்பட்ட நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை நாம் ஆண்டிபயாட்டிக்ஸ் கொண்டு அழித்து விடுகிறோம்.


முட்டைக்கோஸ் ஜூஸ்:


நமது உணவு பாதைக்கு எவ்வித எரிச்சலையும் , நுண்ணுயிரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், எந்தவித பக்கவிளைவும் இல்லாத ஒரே ஒரு பொருள் முட்டைக்கோஸ் ஆகும்.

பல்வேறு ஆராய்ச்சிகளில் முட்டைகோஸ் ஜூஸ் நமது வயிற்றுப் பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கிறது என்றும், இரைப்பை முதல் பெருங்குடல் முடிவு வரை உள்ள குடல் சுவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர .

மேலும் குடலில் உள்ள கழிவுகளையும், புழுக்களையும் அழிக்கின்றது


வைட்டமின் யு:


இது சாதாரணமாக உணவில் இருந்து பெறப்படும் வைட்டமின் அல்ல வைட்டமின் யு என்பது அல்சர் பாதிப்புக்கு உண்டான வைட்டமின் ஆகும்.

நமது வயிற்றின் மொத்த பகுதிகளிலும் உள்ள புண்களை குணமடைய செய்வதற்கு முட்டைக்கோஸ் ஜூஸ் மிகவும் முக்கியமானது ஆகும் .

நமது குடல் பகுதிகளில் உள்ள சளி படலத்தை அதிகரிக்கிறது இதனால் அங்கே உள்ள கெட்ட வைரஸ்களின் தொற்றுக்களை சரி செய்கிறது.

இந்த வைட்டமின் யூ ஆனது அருகம்புல் ஜூஸ், வெண்ணெய், காய வைக்கப்படாத பால், கொழுப்பு போன்றவற்றில் இருந்தாலும் ஆனால் இது கணிசமான அளவே உள்ளது, முட்டைக்கோஸ் ஜூஸ் இல் தான் அதிகப்படியான வைட்டமின் யூ உள்ளது.


செல்போரமைன்(sulforaphane):


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்த பொருள் முட்டைக்கோஸ் ஜூஸில் அதிகம் உள்ளது. இது குடல் பகுதிகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு விதமான தொற்று கிருமிகளிடமிருந்து குடல் சுவரை பாதுகாக்கிறது.


வைட்டமின் சி:


குடல் பகுதிகளில் ஏற்படும் மலச்சிக்களால் அதில் உள்ள கிருமிகள் ரத்தக்குழாய் வழியாக ரத்தத்தில் கலக்கின்றது, நமது நோய் எதிர்ப்பு சக்தி அதற்கு எதிர்வினை புரியும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது அதாவது ஈறுகளில் ரத்தம் வடிதல், தோல் அலர்ஜி, சிறுநீரக அலர்ஜி போன்றவை ஆகும். இதனை தவிர்க்க வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் முட்டைக்கோஸ் ஜூஸ் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.


L-குளூட்டோமெயின்(L- GLUTAMINE):


அமினோ ஆஷிட்களில் மிகவும் முக்கியமான (L- GLUTAMINE )இதில் அதிகம் உள்ளது, இது குடல் பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.

மேலும் இதில் அதிகப்படியான அம்மோனியா உள்ளதால் நமது உடலில் உள்ள ph அளவை சரிசமமாக்குவதற்கு மிகவும் உதவி புரிகிறது.


சாதாரணமான குடல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் முட்டைக்கோஸ் ஜூஸ் எடுத்துக் கொண்டால் போதுமானது, ஆனால் மலச்சிக்கல், வயிறு உப்பசம், ஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், போன்ற பல்வேறு விதமான உணவுப் பாதை பிரச்சனை உள்ளவர்கள் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு முட்டைக்கோஸ் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை மேலும் எந்த விதமான ப்ரோ பயோடிக்ஸ் மாத்திரைகளும், உணவுகளும் எடுத்துக்கொள்ள தேவையில்லை இதிலேயே அதிகமான ப்ரோ பயோடிக்ஸ் உள்ளது.
கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)