வயிற்றுப்புழுக்களை அழிக்க இயற்கையான மருந்துகள் | herbs for stomach parasites

0


 வயிற்றுப்புழுக்களை  அழிக்க இயற்கையான மருந்துகள் herbs for stomach parasites

ஒருமுறை நமது வயிற்றில் குடல் புழுக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால்

அதனை வெளியேற்ற என்னதான் நாம் மருந்துகள் உண்டாலும் அதன் முட்டைகள் இன்னும் நமது குடல் பகுதிகளில் தங்கி இருக்கும், ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த முட்டைகள் பொரிந்து குடல் புழுக்கள் பெருகும்.

அதனால் குடல் புழு வெளியேற்ற சிகிச்ச நாம் இரண்டு வாரங்கள் வரை தொடர வேண்டும் அதன் பிறகு ஒரு மாதம் வரை தகுந்த உணவு கட்டுப்பாடு எடுத்துக் கொள்ளும் பொழுது குடல் புழு தொற்றில் இருந்து முழுமையாக தவிர்க்கலாம்.


குடல் புழுவை வெளியேற்ற இயற்கையான வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்;


கிராம்பு:

குடல் புழுக்களை வெளியேற்ற நாம் இயற்கையாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாசனை பொருள் கிராம்பு ஆகும். காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு நீரை எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் உள்ள அனைத்து வகையான புழுக்களும் வெளியேறுகிறது. இது காலம் காலமாக நாம் பயன்படுத்திவந்த வைத்திய முறையாகும். பல் இடுக்குகள் மற்றும் பல் சொத்தைகளில் உள்ள சிறு சிறு புழுக்களை அழிக்க கிராம்புகளை பயன்படுத்தி வந்தனர்.


கருப்பு வால்நட் பட்டை:


இது பிரேசில் மற்றும் கனடா போன்ற பகுதிகளில் கிடைக்கக்கூடிய ஒரு கனி வகையை சார்ந்தது இதில் உள்ள பட்டை மிகவும் சிறந்த ஒரு வயிற்று புழுகொல்லியாகும், இதன் பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடும் போது குடலில் உள்ள அனைத்து இறந்து விடுகிறது மேலும் துவர்ப்பு தீவிரம் மலமிளக்கியாக செயல்படுவதால் குடல் புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடுகிறது.

ஆல்கஹால் மற்றும் நீரை 1:1 என்று விகிதத்தில் எடுத்துக்கொண்டு அதில் இந்த கருப்பு வண்ண பட்டையை ஊற வைக்க வேண்டும் மூன்றிலிருந்து ஐந்து வாரம் ஊறிய பிறகு அதிலிருந்து கிடைக்கும் நீரை, ஒரு டம்ளர் நீருக்கு அரை ஸ்பூன் இந்த பட்டை நீரை பயன்படுத்தி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது, தீவிரமான வயிற்றுப் பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது இது கருப்பு வால்நட் டிஞ்சர் என்று அழைக்கப்படுகிறது


மாசிபத்திரி(wormwood):


மாசிபத்திரி என்று அழைக்கக்கூடிய தாவரத்தை நாம் காலம் காலமாக வயிற்று பூச்சிகளை அழிக்க பயன்படுத்தி வருகிறோம், இதனை நாம் கோயில் தீர்த்தத்துடன் கலந்து கொடுப்பதை பார்த்திருப்போம், இது மிகச் சிறந்த வாசனை திரவியமாக செயல்படுகிறது. இதிலிருந்து கிடைக்கக்கூடிய வாசனையானது வயிற்றுப் புழுக்களுக்கு மிகவும் அபாயகரமானதாகும்.

ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது குறிப்பிட்ட அளவு பயன்படுத்தும் பொழுது இது ஆண்மை பெருக்கியாகவும் மலம் இலக்கியாகவும் வயிற்றுப் பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் அழிக்க கூடியதாகும்.


பூண்டு:


பூண்டில் காணப்படும் allicin எனப்படும் ஒரு வேதியல் பொருள் குடல் புழுவுக்கு எதிராக செயல்படக் கூடியதாகும், பூண்டை நசுக்கும் பொழுது அதிலிருந்து இந்த வேதிப்பொருள் வெளியாகும் ஆதலால் நசுக்கிய இரண்டு பூண்டை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது அது வயிற்று புழுக்களை முழுமையாக அளிக்கக்கூடும்.


இஞ்சி:


இஞ்சியில் இருக்கக்கூடிய ஜிஞ்சரால் மற்றும் shagaols எனப்படும் வேதியல் பொருள் புழுவுக்கு எதிராக செயல்படும் பொருளாகும்,

கொதிக்க வைக்கப்படாத நீரில் இஞ்சி கலந்து காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் பொழுது நல்ல பலன் அளிக்கிறது மேலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலில் புழுக்களால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பாதிப்புகளை சரி செய்கிறது.


நிலாவரை சூரணம்:


நிலாவரை பெயரிடப்பட்ட என்று அழைக்கப்படும் தாவரத்தில் இருந்து பெறப்படும் சூரணம் வயிற்று புழுக்களையும் கிருமிகளையும் அழிக்க மிகச் சிறந்த மருந்தாகும்.

இரவு உறங்கும் பொழுது இரண்டிலிருந்து நான்கு ஸ்பூன் நிலாவரை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகும் பொழுது காலையில் வயிற்றில் உள்ள கழிவுகளையும் , முட்டைகளும் , புழுக்களுடன் சேர்ந்து வெளியேறுகிறது.


சுண்டைக்காய்:


வயிறு ஆரோக்கியத்திற்கு நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுண்டைக்காய் வயிற்றுப்புழுக்கு மிகச் சிறந்த நிவாரணையாகும்.

இதில் உள்ளsolasonine , solamargine எனப்படும் இரண்டு வேதிப்பொருள் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அளிக்க மிகச்சிறந்த மருந்தாகும், ஆதலால் வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


விளக்கெண்ணெய்:


நாம் மலச்சிக்கலுக்கு பயன்படுத்தி வந்த விளக்கு எண்ணெய் வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லும் தன்மை வாய்ந்த recinolic acid எனும் வேதியல் பொருளை கொண்டுள்ளது.

30 ml விளக்கெண்ணெயுடன் சிறிதளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகும் பொழுது வயிற்றுப் பூச்சிகள் விரைவில் வெளியேறுகிறது மற்றும் உடல் கழிவுகளும் வெளியேறுகிறது.


பப்பாளி விதை:


பொதுவாக நாம் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியும் பப்பாளி விதை தான் மிகச்சிறந்த பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது, இது வயிற்றில் உள்ள இது வயிற்றில் உள்ள புழுக்களின் மேல் உள்ள புரதத்தை சிதைத்து வயிற்றுப் புழுக்களைஅடியோடு அழிக்கிறது.

பப்பாளி விதையை நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் அதனை காலையில் வெறும் வயிற்றில் போன நீரில் கலந்து குடிக்கும் பொழுது வயிற்றில் உள்ள புழுக்கள் முழுதும் இறந்து விடுகிறது.



கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)