வீட்டினுள் உள்ள கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும் |how to control mosquitos in home tamil

0

  கொசு தொந்தரவு அதிகம் இருந்தால் இந்த தாவரத்தை சுற்றி வீட்டைச் சுற்றி வளர்க்க வேண்டும்


 நமது வீட்டைச் சுற்றியும் படுக்கை அறையிலும் இருக்கக்கூடிய கொசுக்களால் நம் உடலுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் உண்டாகிறது இதனை தவிர்க்க ஒரு சில இயற்கை தாவரங்களை நமது வீட்டைச் சுற்றியும் படுக்கை அறையிலும் வளர்க்கும் பொழுது மிகச் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறதுசிட்ரொநெல்லா:


இந்த தாவரத்தை நமது படுக்கை அறையின் அடியில் வைத்துக் கூட வளர்க்கலாம் இது நமது அறைகளில் வேற எந்த பூச்சிகளும் நுழையாமல் பார்த்துக் கொள்ளும் முக்கியமாக கொசுக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய மிகச் சிறந்த தாவரமாகும் அதுமட்டுமல்லாமல் நமது மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றலும் இதில் உண்டு.

இந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை காயங்களில் உண்டாகும் பாக்டீரியா தொற்று மற்றும் பாக்டீரியா இன்பெக்சன் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் மிகச் சிறந்த வழி நிவாரணையாகவும் பயன்படுத்தப்படுகிறது ஒரு சில ஆய்வுகளில் இந்த தாவரத்தை செரிமான கோளாறுக்கும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்


கேட்னிப் தாவரம்(catnip):


இந்த தாவரம் புதினா வகை சார்ந்த ஒரு தாவரமாகும். கொசுக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரு தாவரமாகும். இந்த தாவரத்தில் உள்ள இலையை நேரடியாக எடுத்து நமது தோல் பகுதியில் தேய்க்கும் பொழுது அந்த இடத்தில் கொசு கடிக்காமல் தவிர்க்கப்படுகிறது.

இந்த தாவரத்தில் இங்கிருந்து தயாரிக்கப்படும் டீ குடிக்கும் பொழுது அது நமது தோல் வழியாக சில வேதிப்பொருளை வெளியேற்றுவதால் கொசு கடிப்பதில் இருந்து தவிர்க்கப்படுகிறது.

மேலும் தாவரத்தின் நிலையை கொதி நீரில் கொதிக்க வைக்கப்பட்டு அரை முழுதும் தெளிக்கும் பொழுது கொசு அறையில் நுழையவே நுழையாது.


லாவண்டர் பிளான்ட்:


நமது வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற மிகச்சிறந்த தாவரமாகும் இதிலிருந்து வரக்கூடிய மனம் நமது மன அழுத்தத்தை குறைக்க கூடியது மேலும் இதில் பூச்சிகளை விரட்டக்கூடிய ஒரு வேதிப்பொருள் உள்ளதால் கொசுக்களை அறையில் நுழைய விடவே விடாது.

இதிலிருந்து தயாரிக்கப்படும் என்னை நமது உடலில் பயன்படுத்தும் பொழுது மிகச் சிறந்த மனம் ஊட்டியாக செயல்படுகிறது மற்றும் கொசுக்களை விரட்டியடிக்கிறது.


சாமந்திப்பூ தாவரம்:


இந்தப் பூ தாவரத்தை நமது வீட்டைச் சுற்றி அடிக்கடி பார்த்திருப்பீர்கள் இது கொசுக்களை விரட்ட மிகச்சிறந்த தாவரமாகும் இதில் உள்ள pyrethrum எனும் வேதிப்பொருள் பூச்சிகளுக்கு விஷத்தன்மை வாய்ந்ததாகும் இது சிறு தொட்டிகளில் வைத்து நமது ஜன்னல் ஓரங்களில் வைத்து வளர்க்கலாம் நமது படுக்கை அறையில் கூட வைக்கலாம்.


துளசி இலை:


நாம் துளசிய இலையை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது நமது ரத்த ஓட்டத்தில் கலந்து துளசி மனத்தை வியர்வை சுரப்பிகள் மூலம் வெளியேற்றுகிறது. இதனால் கொசுக்கடியில் இருந்து நிவாரணம் நமக்கு கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசி இலைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம்.


ரோஸ் மேரி தாவரம்:


இத்தாவரத்தை நாம் வீட்டில் வளர்க்கும் பொழுது எவ்வித பூச்சிகளும் கொசுக்களும் நமது வீட்டினுள் நுழைவதில்லை. இதிலிருந்து கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த வாசனை மனதை அமைதிப்படுத்தும்.

இந்த தாவரத்திலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயை உடலுக்கு பயன்படுத்தும் பொழுது அனைத்து விதமான பூச்சிக்கடியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் கொசுக்கடியாள் ஏற்பட்ட அரிப்பு குறைகிறது.


புதினா இலை:


அடர்ந்த வாசனை கொண்ட புதினா இலையை கொசுக்கள் ஒருபோதும் நெருங்குவதில்லை உணவாகவோ அல்லது வீட்டை சுற்றிய வளர்க்கும் பொழுது கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். அடிக்கடி புதினா டீ வைத்து குடிக்கும் பொழுது அதில் உள்ள வேதிப்பொருள் காரணமாக கொசு நம்மை நெருங்குவதில்லை.

         மேற்கண்ட தாவரங்களை நமது வீட்டை சுற்றி வளர்க்கும் பொழுது கொசு தொந்தரவிலிருந்து விடுபடலாம்.

        வேப்ப எண்ணையில் கற்பூரத்தை கலந்து நமது உடல் பகுதியில் தேய்த்து வரும் பொழுது கொசுக்கள் நமது அருகில் நெருங்கவே நெருங்காது.

         மேலும் நமது அறையில் நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் பயன்படுத்தி விளக்கு வைப்பது மற்றும் சாம்பிராணி பற்ற வைப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்து வரும் பொழுது கொசு நமது அறையில் நுழையாது.

         பட்டை , கிராம்பு, லவங்கம், மூன்றையும் அரைத்து பருத்தி ஆடையில் கட்டி நமது அறையில் ஆங்காங்கே கட்டி வைக்க வேண்டும். இதிலிருந்து வெளிப்படும் வாசனை கொசுக்களை மயக்கமடைய செய்கிறது.
கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)