வைட்டமின் ஏ குறைபாடு வருவதற்கான காரணங்களும் தீர்வும் how to cure vitamin A deficiency
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் வைட்டமின் ஏ குறைபாடு எதனால் வருகிறது மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை கட்டுரையில் பார்ப்போம்.
வைட்டமின் ஏ ஆனது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஒன்று.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K ஆகும்
வைட்டமின் ஏ ஆனது நம் செல்களில் உள்ள கொழுப்பால் ஆன வெளிப்பரப்பை ஊடுருவி உட்கரு வரை செல்லக்கூடிய சக்தி மிகுந்தது ஆகும் இது நமதுDNA அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
அதனால்தான் விட்டமின் ஏ குறைபாடு என்பது மிகவும் முக்கியமானதாகும்.
வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்:
வைட்டமின் ஏ குறைபாட்டால் பல்வேறு விதமான தோல் நோய்கள் உண்டாகிறது. சருமத்தில் வெண்புள்ளிகள், மீன் செதில் போன்ற தோல், முகத்தில் மங்கு மற்றும் முகப்பருக்கள் போன்றவை தோன்றுதல். கண் பார்வை பிரச்சனை போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு காரணம் வைட்டமின் A ஆகும்.
சைனஸ் அலர்ஜி மற்றும் காது வலி, நுரையீரல் அலர்ஜி போன்ற பல்வேறு விதமான அலர்ஜி நோய்கள் தோன்றுகின்றனர் ஏன் என்றால் நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு மிக முக்கியமானது வைட்டமின் A ஆகும்.
வைட்டமின் ஏ குறைபாடு எதனால் வருகிறது:
வைட்டமின் ஏ ஆனது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு ஊட்டச்சத்து என்பதால் நமது உடலில் கொழுப்புகளை உடைத்து ஜீரணம் செய்யக்கூடிய ஒரு வேதிப்பொருள் குறைவாக இருந்தால் வைட்டமின் ஏ குறைபாடு உண்டாகும்.
அது என்னவென்றால் நமது பித்தப்பை சுரக்கப்படும் பித்த நீர் ஆகும். இது கொழுப்பு செல்களை உடைத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பிரித்து நமது உடலுக்கு கொடுக்கக் கூடியதாகும் இந்த பித்த நீர் குறைபாடு ஏற்படும் பொழுது மொத்த ஜீரண மண்டலமும் பாதிக்கின்றது.
பெரும்பாலும் ஜீரண மண்டல குறைபாடு இருப்பவர்கள் அதிகப்படியான வைட்டமின் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆதலால் பித்தப்பை செயல்பாட்டை அதிகரிக்கும் பொழுது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு சில வைட்டமின் குறைபாடுகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
வைட்டமின் ஏ உள்ள உணவுகள்:
காய்கறிகளில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ ஆனது நமது உடல் எடுத்துக் கொள்ளாது, ஏனென்றால் காய்கறிகளில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ ஆனது inactive form இல் இருக்கும், ஒருவேளை நல்ல ஜீரண மண்டலம் இருந்தால் 5-6 சதவிகிதம் வைட்டமின் ஏ ஆனது active form க்கு மாற்றம் அடையும்.
ஆதலால் வைட்டமின் ஏ பொருத்தவரை கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள வைட்டமின் ஏ ஆனது நம் உடல் எளிதில் எடுத்துக் கொள்ளும்.
முட்டை:
முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது ஆனால் வெகு சிலர் முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது எனக் கருதி அதனை தவிர்த்து விடுகின்றனர். முட்டையின் மஞ்சள் கருவானது ஒரு மல்டி விட்டமின் மாத்திரைக்கு சமமானது. நமது உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும் அதில் அடங்கியுள்ளது. மேலும் நமது பித்தப்பை சுரப்புக்கு கொலஸ்ட்ரால் தான் அதிகமாக தேவைப்படுகின்றன.
கல்லீரல் உணவுகள்:
ஈரல் உணவுகளில் அதிகப்படியான வைட்டமின் ஏ உள்ளது மேலும் இதில் கணையத்தின் சுரப்புக்கு தேவையான தாது உப்புகளும் உள்ளதால் ஜீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது மேலும் அதில் உள்ள வைட்டமின்களை உடல் எளிதாக எடுத்துக் கொள்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ஈரல் உணவுகளை சேர்த்துக் கொள்ளும் பொழுது எவ்வித ஜீரண குறைபாடும் வைட்டமின் குறைபாடும் வருவதில்லை.
மீன்:
மத்தி மீன் மற்றும் சால்மன் போன்ற மீன் வகைகளில் அதிகமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் cod liver oil போன்ற சப்ளிமெண்ட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
சீஸ்:
மற்றொரு பால் பொருட்களான சீஸில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளதால் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சீஸ் சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் வைட்டமின்A, D, E, K கரைவதற்கு துணை புரிகின்றனர்.
பன்றி இறைச்சி:
பன்றி இறைச்சியில் அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அதிலிருந்து கொடுக்கக்கூடிய வைட்டமின் ஏ ஆனது நமது உடல் எளிதாக எடுத்துக் கொள்கிறது மேலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்சைம் பன்றி கொழுப்பில் உள்ளது. ஆதலால் வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் பன்றி இறைச்சியை வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.