இளநரையை போக்க இயற்கை வழிமுறைகள்| how to turn grey hair into black hair

0


இளநரை மற்றும் செம்பட்டை கூந்தல் போன்றவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்


இளம் வயதிலேயே முடி நரைத்து போதல் மற்றும் செம்பட்டை நிறத்தில் கூந்தல் மாறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் இளம் தலைமுறையினர் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் வெகு சிலர் இப்படி இருப்பது தான் ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இது முடி அடர்த்தி குறைவு முடி நரைத்து போதல் போன்ற பல்வேறு பிரச்சனை நேரிடும், இது எதனால் ஏற்படுகிறது என்று பலருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. பல்வேறு விதமான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பழக்கவழக்கங்கள் மாற்றங்களால் இந்த பிரச்சனை இளம் வயதிலேயே உண்டாகிறது.


மெலநோசைட்ஸ் எனப்படும் சுரப்பிகளால் சுரக்கப்படும் மெலனின் எனும் எனும் என்சைம் கூந்தல் நிறம், கண் கருவிழி நிறம் , தோலின் நிறம் போன்ற பல்வேறு நிறங்களுக்கு காரணமாகிறது, வயது ஆக ஆக இந்த என்சைம் சுரப்பது குறைவதால் முடி நரைத்து போதல் தோல் வெளிர்ந்து போதல் போன்ற பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.


ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே முடி நரைத்து போதல் மற்றும் வெளிர்ந்து போதல் போன்ற பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.


காளான்:


தைரோசின் எனப்படும் என்சைம் மெலனின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். காளான் உணவுகளில் அதிகப்படியான தைரோசின் இருப்பதால் மெலனின் உற்பத்திக்கு உதவி செய்கிறது. மேலும் இதில் உள்ள L கார்னெட்டைன் எனும் அமினோ அமிலம் நரைத்துப்போன கூந்தலை மீண்டும் சுத்திகரிக்கவும், கட்டமைக்கவும் பயன்படுகிறது.


காப்பர் அதிகம் உள்ள உணவுகள்:


காப்பர் தாது உப்பு நமது உடலுக்கு மிகவும் கணிசமான அளவு தேவைப்படுகிறது மெலனின் உற்பத்தி இது மிகவும் முக்கியமானதாகும். இந்த தாது உப்பு சப்ளிமெண்ட் அல்லது மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான காப்பர் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் போதுமானது.

  • கடல் சிற்பி உணவுகள்
  • இறால் உணவுகள்
  • ஈரல் உணவுகள்
  • நட்ஸ் வகைகள்

போன்றவற்றில் அதிகப்படியான காப்பர் உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வைட்டமின் E:


நமது சிறுநீரகத்தின் மேல் உள்ள அட்ரினல் சுரப்பியானது நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பொழுது சுரப்பியும் அழுத்தத்திற்கு உண்டாகிறது இதன் காரணமாக H202 எனப்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உற்பத்தி செய்து நமது ரத்தத்தில் கலக்கின்றது, இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் ஆனது நமது உடலில் உள்ள மெலனினை அழிக்க கூடியது.


ஆதலால் வைட்டமின் ஈ ஆனது இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் எனும் வேதிப்பொருளை சமநிலை செய்யக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். அது மட்டுமல்லாமல் இளமையில் தோன்றும் முதுமை, முகச்சுருக்கம், வெளிர்ந்த கூந்தல் போன்றவற்றிற்கும் வைட்டமின் ஈ பயன்படுகிறது.


பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் இந்த வைட்டமின் ஈ அளவு குறைவதால் தோல் சுருக்கம் மற்றும் நரை முடி அதிகாரித்தல் போன்றவை ஏற்படுகிறது ஆதலால் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் பாதாம் மற்றும் முந்திரி, நிலக்கடலை, பிஸ்தா உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ் போன்றவை வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்:


பெரும்பாலும் நாம் சப்ளிமெண்ட் மூலம் எடுத்துக் கொள்ளக்கூடிய வைட்டமின் பி ஆனது பெரும்பாலும் நமது உடல் எடுத்துக் கொள்வதில்லை ஆதலால் நமது சிறு குடலில் வாழ்கின்ற பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யக்கூடிய வைட்டமின் B1, B6, B12 போன்ற ஊட்டச்சத்து பொருட்கள் மிகவும் சிறந்ததாகும் நமது கூந்தலின் அடர்த்திக்கும், நிறத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும் ஆதலால் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க நாம் முட்டைகோஸ் ஜூஸ் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெய்:


நன்கு சுத்தமான எண்ணெயில் காயவைக்கப்பட்ட செம்பருத்தி பூ இதழ்களை ஊற வைக்க வேண்டும் இதனால் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆனது அதிகரிக்கப்படுகிறது , இது நமது கூந்தல் பகுதிகளில் நன்கு மசாஜ் செய்து பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் இழந்த கூந்தல் நிறங்களை மீண்டும் கருமை நிறத்திற்கு கொண்டுவர முடியும்.


பாதாம் எண்ணெய் :


பாதாம் எண்ணெயில் அதிகப்படியான வைட்டமின் ஈ , செலினியம் உள்ளதால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது இதனால் ஐந்து துளி பாதாம் எண்ணெய் நமது கூந்தல் வேர்களில் பயன்படுத்தி மசாஜ் செய்யும் பொழுது கூந்தலின் வேரில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு நடுநிலை செய்கிறது மற்றும் கூந்தல் அடர்த்திக்கு உதவி செய்கிறது.


முளைகட்டிய வெந்தயம்:


முளைகட்டிய வெந்தயத்தை நன்கு அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு பயன்படுத்தி குளித்து வரும் பொழுது செம்பட்டை கூந்தல் மீண்டும் பழைய நிறத்திற்கு வரும். மற்றும் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும்.கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)