இரும்பு சத்து குறைபாடுகளால் வரும் ரத்த சோகை தவிர்ப்பது எப்படி iron deficient anemia:
இரும்பு என்ற தனிமம் ஆனது மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு நிறத்தையும், ஆக்சிஜனை கடத்திச் செல்லும் தன்மையும் இரும்புச் சத்தால் கிடைக்கிறது.
இந்த இரும்பு சத்துக்கள் குறையும் பொழுது ரத்த சோகை எனப்படும் அனிமியா உருவாகிறது.
ரத்தசோகை மூன்று விதங்களில் உருவாகிறது
ரத்த சிவப்பணுக்கள் குறைதல், ஹீமோகுளோபின் அளவு குறைதல், ரத்த சிவப்பு அணுக்களின் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் அளவு குறைதல்.
இரும்புசத்து குறைபாடு அறிகுறிகள்:
- எந்நேரமும் சோம்பலாகவே இருத்தல்.
- குளிர்ச்சியான பானங்கள் மற்றும் குளிர்ச்சியான ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை சாப்பிட தூண்டுதல்.
- பலவீனமாக இருப்பது போல் தோன்றுதல்.
- அன்றாட வேலைகளை செய்யும் பொழுது ஏற்படும் மூச்சு திணறல்.
- கண்கள் மற்றும் முகத்தோல் வெளுத்து போனது போல தோன்றுவது.
- அதிகப்படியான முடி உதிர்தல்
- கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றுதல்.
ரத்த சோகைகாண காரணங்கள்:
உடலின் உட்பகுதியில் ஏற்படும் பல்வேறு இரத்த இழப்புகளால் பெரும்பாலும் ரத்த சோகை ஏற்படுகிறது அவை.
- அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு.
- இரைப்பையில் அல்சர் இருக்கும் பொழுது இரும்பு சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது மற்றும் அல்சரால் உண்டாகும் ரத்த இழப்பு.
- கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளில் ஒட்டுண்ணிகளால் ரத்தம் உறிஞ்சப்படுவது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதால் ஏற்படும் ரத்த சோகை.
- வெளிப்புற காரணிகளால் ஏற்படும் காயம் மற்றும் எலும்பு முறிவு.
- கருப்பை மற்றும் பெருங்குடல் பகுதிகளில் தோன்றும் கட்டிகளால் ஏற்படும் ரத்தக்கசிவு.
- பெருங்குடல் கேன்சர் கட்டிகளால் உண்டாகும் ரத்த இழப்பு.
- தொற்று கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல்( மலேரியா போன்ற தீவிர ரத்த சோகை உண்டாக்கும் காய்ச்சல்)
போன்ற பல்வேறு காரணிகள் ரத்த இழப்புக்கு காரணமாக உள்ளது ஒரு சில உடல் ரீதியான மாற்றங்களையும் உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.
இரும்புச்சத்து உறிஞ்சுவதை அதிகப்படுத்துவது எப்படி:
' நமது உடல் மற்ற ஊட்டச்சத்துகளைப் போல் அல்லாமல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வது சற்று குறைவாகவே இருக்கின்றது.
ஆப்பிள் சீடர் வினர்:
நமது இரைப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் அளவு குறைவாக இருப்பதினால் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்பட்டு உறிஞ்சுவது குறைகிறது.
இரைப்பையில் உள்ள ஆசிட் சுரப்பை அதிக படுத்த வேண்டும் அதற்கு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீர் கலந்த கலவையை1:3 இன்று விகிதத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது இரைப்பையில் உள்ள ஆசிட் சுரப்பை அதிகரிக்கலாம்.
பெருங்குடல் அலர்ஜி குணப்படுத்த ஒரு சில வழிமுறைகள்
ஆன்டாசிட்(anti-acid):
ஆன்டாசிட் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் இதனால் இரைப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் அது சுரக்கக்கூடிய சுரப்பிகள் பாதிப்படுகிறது.
மேலும் சமையல் சோடா கலக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆக்சலேட்ஸ்:
நமது தாவர உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை நமது உடல் எளிதில் எடுத்துக் கொள்ளாது ஏனென்றால் தாவர உணவுகளில் உள்ள இரும்பு சத்தானது ஆக்சலேட் உடன் பிணைக்கப்பட்டு இருப்பதால், அந்தப் பிணைப்பை உடைப்பது நமது இரைப்பைக்கு கடினமாகிறது இதனை சரி செய்ய, ஒவ்வொரு முறை இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளான முளைக்கட்டிய தானியங்கள், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்ற உணவுகளுடன் விட்டமின் சி உள்ள உணவுகளான நெல்லிக்காய் , எலுமிச்சை, அன்னாசிப்பழம் , ஆரஞ்சு போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் இரும்புச்சத்து உறிஞ்சுவது அதிகரிக்கிறது
குடல் பகுதிகளில் அதிகப்படியான ஒட்டுண்ணிகள் வளர்ச்சி:
நமது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் வசிக்கும் ஒட்டுண்ணிகளின் காரணமாக சுவர்கள் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தவிர்க்கப்படுகிறது மேலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் ஒட்டுண்ணிகள் எடுத்துக் கொள்வதால் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது, ஆதலால் ஒட்டுண்ணிகளுக்கு எதிரான மருந்துகளை நம் எடுத்துக் கொள்ள வேண்டும்(வசம்பு, நிலவரை சூரணம், கடுக்காய் சூரணம்)
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்:
சிப்பி உணவுகள்:
பெரும்பாலான கடல் உணவுகளில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் உள்ளது.
அதிலும் முக்கியமாக சிற்பிகள் மற்றும் நத்தைகளில் அதிகப்படியான இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், செம்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
அலர்ஜி உள்ளவர்கள் பெரும்பாலான கடல் உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.
நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகள் மற்றும் அதன் நன்மைகள்
இறைச்சி உணவுகள்:
அனைத்து வகையான இறைச்சிகளிலும் பல்வேறு விதமான தாது உப்புகளும் , புரதங்களும், உள்ளது.
இதில் இரும்பு சத்து அதிகப்படியாக உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி அசைவ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கோழி இறைச்சி
ஆட்டு இறைச்சி
பன்றி இறைச்சி
மாட்டிறைச்சி
முட்டை:
முட்டையில் ஒரு நாளுக்கு தேவையான 25 சதவிகிதம் இரும்பு சத்து கிடைப்பதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முறையாக அவித்து சாப்பிடக்கூடிய முட்டையில்தான் அனைத்து விதமான சத்துக்களும் இருக்கும் வேறு எந்த விதத்திலும் முட்டை எடுத்துக் கொண்டாலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 65 சதவீதம் நமது உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றது முக்கியமாக அதில் உள்ள கோலீன் எனப்படும் ஊட்டச்சத்து வேக வைக்கப்பட்ட முட்டையில் தான் முழுமையாக கிடைக்கின்றது
ஈரல் மற்றும் இரத்த உணவுகள்:
ஈரல் மற்றும் ஆட்டு ரத்தம் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் மிக முக்கியமானது.
இதில் 75 சதவீதம் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
வாரம் இரண்டு முறை இந்த உணவுகளை எடுத்து வரும் பொழுது ரத்த சோகை விரைவில் குணமடையும் முக்கியமாக இத்துடன் அண்ணாச்சி பழம் மற்றும் விட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால்ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் அதனை சரி செய்ய விட்டமின் சி பயன்படுகிறது மற்றும் இரும்பு சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது.
கணவாய் மீன்:
மீன் வகைகளில் கணவாய் மீன் தான் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ள உணவு பொருளாகும்.
இதில் உள்ள அதிகப்படியான இரும்பு மற்றும் ஜிங்க் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், ரத்த சோகையை குணப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
அகத்திக்கீரை:
ஒரு நாளுக்கு தேவையான முழு இரும்பு சத்தத்தையும் கொடுக்கக்கூடிய அகத்திக்கீரை வாரம் ஒரு முறை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட வேண்டும். தினசரி அகத்திக் கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது இது கல்லீரலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.
கீரைகளில் உள்ள ஆக்ஸிலேட்டை நீக்க இதனுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிட வேண்டும்.
முருங்கை மரம்:
முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது( முருங்கைப்பூ , முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கை விதை, முருங்கை பிசின், ) அன்றாடம் உணவுகளில் இதில் ஏதேனும் ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சத்து குறைபாடு நமது வாழ்நாளில் வரவே வராது.
தவிர்க்க வேண்டியவைகள்:
- உணவு உண்ட பின்பு அதிகப்படியான காப்பியின் உள்ள பொருட்களை நம் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது ( டீ, காபி).
- அதிகப்படியான வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்து நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- அதிகப்படியானபுகைப்பழக்கம் உடலில் தீவிர ரத்த சோகையை உண்டாக்குகிறது.