பல்வேறு வகையான டீ மற்றும் அதன் நன்மைகள் | various types of tea and its benifts

0

 பல்வேறு வகையான டீ மற்றும் அதன் நன்மைகள்நமது கலாச்சாரத்தில் டீ குடிப்பது என்பது மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகவே உள்ளது ஒரு நாளைக்கு ஐந்து கப் வரை டீ குடிக்கும் மனிதர்களும் உண்டு, ஆனால் நமக்கு ஆங்கிலேயர் கால கட்டத்தில் காப்பி அறிமுகம் செய்து அதனை பருக ஆரம்பித்தனர் இதனால் இரும்பு சத்து குறைவு மற்றும் அதிக ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்தித்தது உண்டு, ஆனால் நமது பாரம்பரியத்தில் பலவிதமான டீ பயன்படுத்தி புத்துணர்ச்சிக்காகவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தி உள்ளனர், பொதுவாக உடல் புத்துணர்ச்சிக்காகவே நாம் டீ பருகிறோம் அதே நேரத்தில் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு விதமான டீ இங்கு பார்ப்போம்.


கொத்தமல்லி டீ:


தைராய்டு சுரப்பிக்கு நன்மை பயக்கும் மிகச் சிறந்த அற்புதமான ஒரு டீ ஆகும். அதிகப்படியான வெயில் தாக்கம் உள்ள பகுதிகளில் இந்த டீ மிகவும் பிரபலமானது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது தொடர்ந்து மதிய வேளையில் பனைவெல்லத்துடன் சேர்த்து கொத்தமல்லி டீ பருகி வரும் பொழுது தைராய்டு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் மேலும் உடலின் கால்சியம் கூட்டு சேர்க்கை அதிகரிக்கும். அடிக்கடி ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் உணவு உண்டு ஒரு மணி நேரம் கழித்து இந்த டீயை பருகி வரலாம்.


பட்டை மற்றும் கிராம்பு டீ:


உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கக் கூடிய பட்டை மற்றும் கிராம பட்டியை குடித்து வரலாம் இதனால் உடலில் கொழுப்பு எரிக்கும் தன்மை அதிகரிக்கிறது குடல் பகுதியில் உள்ள தொற்றுக்கிருமிகளான வைரஸ், பாக்டீரியா மற்றும் தொற்றுப் புழுக்களை அளிக்கிறது.

அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மேலும் உடனடியாக உடலுக்கு சுறுசுறுப்பை தருவதால் கடினமான வேலைகளுக்கு நடுவே குடிப்பதற்கு மிகவும் நல்லது.


செம்பருத்தி டீ:


செம்பருத்தி இதழ்களை காயவைத்து உலர வைத்து பின்பு அதில் போடப்படும் டீ மிகவும் அற்புதமான மனம் உடையதாகும் இது உடலின் ரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கிறது. அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட இந்த டீ பல்வேறு விதமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்ததால் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.


லெமன் டீ:


உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க கூடிய லெமன் டீ இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நமது தோளில் உள்ள பாதிப்புகளை சரி செய்கிறது, உடல் எடையை குறைப்போம் தனது உணவில் லெமன் டீ சேர்த்துக் கொள்ளலாம், உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்காமல் பறந்து கொள்கிறது, லெமன் டீயில் இருக்கும் மனம் மற்றும் சுவை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது, மலச்சிக்கலை சரி செய்கிறது மற்றும் உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது,


ரோஜா இதழ் டீ:


பன்னீர் ரோஜா இதழில் போடப்படும் ஒரு வகையான டீ .

பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு டீ வகை என்றால் அது ரோஜா இதழ் டீ தான் ஏனென்றால் மாதவிடாய் காலங்களில் வரும் அடிவயிற்று இருக்கங்களை சரி செய்ய மிகச் சிறந்த ஒரு மருந்தாகும், மேலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் கேன்சரை தடுக்க கூடியது, சிறந்த நறுமணமும் சுவையும் கொண்ட இந்த டீ அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


புதினா டீ:


உடனடியாக உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க கூடிய இந்த டீ கணையத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது, கணையத்தில் சுரக்கக்கூடிய கணைய நீரின் செறிவு அதிகரிக்கக் கூடியது இதனால் ஜீரண கோளாறுகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது குடலில் உள்ள கிருமிகளை அழிக்க உதவி செய்கிறது.


ஆவாரம்பூ டீ:


அழகு மற்றும் வசீகரத்திற்கு மிகச்சிறந்த மூலிகை பொருள் என்றால் ஆவாரம்பூ ஆகும். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி இருப்பதால் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.


லாவண்டர் டீ:


உறங்குவதற்கு முன்பு லாவண்டர் டீ குடித்துவிட்டு உறங்கும் பொழுது நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

நாள்பட்ட தலைவலி உள்ளவர்கள் லாவண்டர் டீ குடிக்கும் பொழுது விரைவில் குணமடையது. உடலில் உள்ள நிணநீர் கழிவுகளை வெளியேற்றுவதால் சருமம் பளபளகிறது.


ஏலக்காய் டீ:


நீலகிரி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் அதிகம் விரும்பி பருகும் இந்த டீ நுரையீரல் ஏற்படும் தொற்றுக்களுக்கு மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கும்.

உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும் மற்றும் மன மன அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


கிரீன் டீ:


உடல் எடை குறைப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய இந்த கிரீன் டீயில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.


மிளகு டீ:


பண்டைய காலத்தில் மிக நீண்ட போர்களுக்கு நடுவே உடல் சக்தி அதிகரிப்பதற்கு வெந்நீரில் உடைக்கப்பட்ட மிளகு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டப்பட்ட நீரை பருகி வந்தனர் இதனால் களைப்படையாமல் போரில் ஈடுபடுவதற்கு உதவி செய்தது, அப்பேர்ப்பட்ட ஒரு டீ வகையை நாம் மறந்தே போய் விட்டோம் ஆதலால் அவ்வப்போது மிளகு டீ வைத்து பருகி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)