மலச்சிக்கலை சரி செய்ய உணவு முறையும் பழக்க வழக்கங்களும்
பெரும்பாலும் 80 சதவீத மக்களுக்கு இந்த ஜீரண கோளாறு பிரச்சனைகள் உள்ளது, ஏனென்றால் நமது உணவில் நார்ச்சத்துக்களை தவிர்த்து சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உண்பதன் மூலம் அது நமது குடல் சுவற்றில் பசை போன்று ஒட்டிக் கொள்வதாலும், குடல் இயக்கத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் நாம் எடுத்துக் கொள்ளாததன் காரணமாக இந்த மலச்சிக்கல் ஏற்படுகிறது.
நாம் ஒரு சில உணவு முறைகளையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்கும் போது இந்த மலச்சிக்கல் பிரச்சனையை முழுமையாக சரி செய்து விடலாம்.
உணவிற்கு இடையே இடைவேளை:
நமது ஜீரண மண்டலம் தன்னைதானே சரி செய்து கொள்ளவும் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை தொடர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பொழுது அது நமது ஜீரண மண்டலத்தை முழுமையாக பாதிப்படைய வைக்கிறது இதனால் கடுமையான மலச்சிக்கலுக்கு காரணம் ஆகிறது. சித்த வைத்தியத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகின்றது, ஆதலால் அடிக்கடி உணவு உண்பதை தவிர்த்து ஒவ்வொரு உணவுக்கு இடைவேளை ஆறு மணி நேரம் என்று சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை குறையும். ஒவ்வொரு உணவிற்கும் இடைவேளை 12 மணி நேரமாக இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சின்ன வெங்காயம்:
மலச்சிக்கல் பிரச்சனைக்கு மிகச் சிறந்த மருந்தாகும் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் பொழுது பத்து சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் பொருள் செல்போரமைன் என்னும் வேதிப்பொருள் குடலில் உள்ள கழிவுகளை உந்தி தள்ளுவதற்கான ஒரு விசையை ஏற்படுத்தும், மேலும் பித்த நீரின் செறிவை அதிகரிப்பதால் ஜீரணம் நடைபெறுகின்றது. உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குடல் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் நன்கு செயல்பட்டு குடல் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.
சிவப்பு கொய்யாப்பழம்:
பழங்களின் ராஜாவாக அறியப்படும் சிவப்பு கொய்யாப்பழம் கிடைக்கும் பொழுதெல்லாம் நாம் வாங்கி சாப்பிட வேண்டும், இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை எளிதில் குணமடைய செய்யும் அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைய அடங்கி உள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் உணவிற்கு முன்பு சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
வெந்தயம்:
மலச்சிக்கலுக்கு நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த முறை இந்த வெந்தயமாகும் இரவில் ஊற வைத்து வெந்தய காலையில் வெறும் வயிற்றில் பருகி விட்டு அந்த வெந்தயத்தை சாப்பிடும் பொழுது அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை உடனடியாக போக்கக்கூடியது. உடல் உஷ்ணத்தால் கூட சில நேரங்களில் மலச்சிக்கல் ஏற்படும் ஆதலால் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வெந்தய நீரை பருகும் பொழுது உடல் உஷ்ணம் குறைகிறது, மேலும் இது உங்களுக்கு டெஸ்டோஸ்டரான் அதிகரிப்பதாக ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்கள் மறக்காமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இரும்பு சத்து:
சில சமயங்களில் இரும்பு சத்து குறைபாடு இருக்கும் பொழுதும் மலச்சிக்கல் உண்டாகிறது ஆதலால் அவ்வபோது முருங்கைக் கீரை மற்றும் அகத்திக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுகளை கீரை உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டும் உதாரணத்திற்கு எலுமிச்சை, தக்காளி போன்றவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள கொக்கி புழுக்கள்:
குடலில் உள்ள புழுக்களால் குடல் சுவர் பாதிக்கப்படும் பொழுது ஜீரண பிரச்சனை உண்டாகிறது, ஆதலால் அவ்வப்போது குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும் பின்பு சுய சுத்தத்தை பின்பற்றும் பொழுது உடலில் உள்ள புழுக்களின் உற்பத்தி குறைகிறது.
சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்து:
சுத்திகரிக்கப்பட்ட மாவுசத்து பொருளான மைதா, சோள மாவு மற்றும் ஐஸ்கிரீம் வெள்ளை சர்க்கரை போன்றவற்றை மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இது நமது குடலில் போஸ்டர் ஓட்டும் பசை போல ஒட்டிக் கொள்வதால் குடல் இயக்கம் நன்றாக இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் மேலும் இது குடல் புழுக்களுக்கு உணவாக அமைவதால் குடல் புழு உற்பத்தி அதிகரிக்கிறது.
விரதம்:
வாரம் ஒரு முறையாவது நமது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுக்கும் பொழுது அது தன்னை தானே சரி செய்து கொள்கிறது, ஆதலால் விரத முறை கடைப்பிடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும்.
உடற்பயிற்சி இல்லாமை:
எந்நேரமும் அமர்ந்து வேலை செய்வது அல்லது பகல் நேரத்தில் உறங்குவது போன்று உடல் இயக்கம் குறைவாக உள்ளபோது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் ஆதலால், தினசரி ஏதேனும் ஒரு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது உடலில் ரத்த ஓட்டம் மேலும் ஜீரணத்திற்கு தேவையான பித்தநீர் சுரப்பு மற்றும் இரைப்பை நீர் சுரப்பு நன்றாக இருக்கும்.
வெந்நீர்:
இரவு உறங்குவதற்கு முன்பு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பருகும் பொழுது காலையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும் மஞ்சள் தூக்கத்தை நன்றாக வைத்துக் கொள்கிறது வெந்நீர் நமது உடலை குளிர்ச்சி அடைய வைக்கிறது மற்றும் நமது வயிற்றில் ஒரு அழுத்தத்தை உண்டாக்குவதால் மலச்சிக்கல் நீங்குகிறது.
துவர்ப்பு சுவை:
நமது ஜீரண மண்டலத்திற்கு தேவையான முக்கியமான சுவைகளில் துவர்ப்பும் ஒன்று நாம் துவர்ப்பு சுவையை பல்வேறு சந்திக்க நேரிடுகிறோம்.
இரவு தூங்கும்பொழுது கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ளும் பொழுது அது சரி செய்கிறது மேலும் கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் குறைகிறது துவர்ப்பு சுவைகளில் இவை இரண்டும் மிகச் சிறந்ததாகும்.