கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது எப்படி how to increase liver health

0

கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது எப்படி how to increase liver health:


நமது உடலில் உள்ள அனைத்து உறுப்பு மண்டலத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுது உடல் நலம் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் உண்டாகிறது.

how to increase liver health tamil
 கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது எப்படி how to increase liver health



கல்லீரல் பாதிக்கப்பட்டால் தைராய்டு உற்பத்தி பாதிக்கப்படும், ஜீரணக் கோளாறுகள் ஏற்படும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், சர்க்கரை வியாதி தோன்றும், மேலும் பல்வேறு விதமான ஹார்மோன் குறைபாடுகள் உண்டாகும்.

மேலும் கல்லீரலில் கொழுப்பு படிதல் மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றால் 80% கல்லீரல் நோய்கள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து கல்லீரல் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிப்பது என்பது பார்ப்போம்.


சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு:


இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது. இதில் உள்ள கரையக்கூடிய கொழுப்பு அமிலங்கள் நமது ரத்த குழாய்களிலும், கல்லீரலிலும் படிந்து கல்லீரலின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. ஆதலால் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து நாம் நல்ல கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உதாரணம்;


சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ,பாமாயில், எண்ணெயில் பொறித்த பலகாரங்கள் மாமிசங்கள் போன்றவற்றை தவிர்த்து சமைக்கப்படாத தேங்காய், மத்தி மீன், பூசணி விதைகள், எள்ளு எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதிகப்படியான மாவுச்சத்து:


how to increase liver health-மாவுச்சத்து என்பது நம் உடலுக்கு தேவையான மேக்ரோ நியூட்ரிஷினில் மிகவும் முக்கியமானது ஆனால் அதிகப்படியான மாவு சத்துக்கள் என்பது நமது குடல் ஆரோக்கியத்திற்கும் இரைப்பை செரிமானத்திற்கும் மிக முக்கியமாக கல்லீரலுக்கும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. சோள மாவு, வெள்ளை சர்க்கரை, மைதா மாவு, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு, மற்றும் பேக்கரியில் கிடைக்கக்கூடிய கிரீம் மற்றும் கேக்குகள் அனைத்தும் நமது உடலில் உள்ள கொழுப்பின் சதவீதத்தையும், கல்லீரலில் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது இதனை தவிர்த்து கரையக்கூடிய நார் சத்துக்கள் நிறைந்த மாவு சத்துக்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.


உதாரணம்:


சாதாரணமான அரிசி உணவை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் காய்கறிகளோ அல்லது கீரை உணவுகளையோ சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனால் அதிலுள்ள நார்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.


பொன்னாங்கண்ணி கீரை:


கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பொன்னாங்கண்ணி கீரை, இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் கல்லீரலில் உள்ள கொழுப்பு நார்த் திவலைகளை கரைக்கக் கூடியது. மற்றும் இதில் உள்ள பிளேவனாய்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்து பகல் நேரத்தில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் தூக்கம் போன்றவற்றை தவிர்த்து உடலை சுறுசுறுப்படையச் செய்கிறது.


கீழாநெல்லி:


how to increase liver health-கீழாநெல்லி மஞ்சகாமாலைக்கு நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த ஒரு உணவு ஆகும். கல்லீரலில் கிருமித் தொற்று காரணமாக உண்டாகும் மஞ்சள் காமாலை காரணமாக சருமத்தில் தோன்றும் சொரி சிரங்கு மற்றும் கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம் உடல் மெலிதல், கல்லீரலில் கற்கள் உண்டாதல், நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு போன்றவை உண்டாகும்.

ஆதலால் மஞ்சள் காமாலை இல்லாவிட்டாலும் கீழாநெல்லி என்பது நமது கல்லீரல்ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது மேலும் எவ்வித நோய் தொற்றுகளிலும் இருந்தும் பாதுகாக்க கூடியது ஆகும். காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பும் வெதுவெதுப்பான நீரில் கீழாநெல்லியை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரலில் உள்ள அனைத்து நச்சுக்களும் கிருமிகளும் நீக்கப்படும் மேலும் மேற்கொண்டு கல்லீரலில் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்.


விரதம்:


வாரம் ஒரு முறை அல்லது தினசரி 12 மணி நேரத்திற்கு ஒருமுறை நாம் உணவு உண்ணும் பொழுது உடலில் உள்ள குரோத் ஹார்மோன் மற்றும் பல்வேறு விதமான ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது இதனால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் கட்டமைக்கப்படுகிறது, மேலும் கல்லீரலில் உள்ள கிளைக்கோஜன் மற்றும் கொழுப்புகள் செரிக்கப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது இதனால் கல்லீரல் கொழுப்பு மற்றும் கல்லீரல் தொற்றுகள் குறைகிறது, பித்த நீரின் செறிவுஅதிகரிக்கிறது.


பீட்ரூட் ஜூஸ்:


பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய என்சைம் ஆகும். தினசரி வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் எடுத்து வரும் பொழுது கல்லீரல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது மேலும் இதனுடன் வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்கனி சேர்க்கும் பொழுது மேலும் பயன் சேர்க்கும்.


மிளகு,இஞ்சி மற்றும் மஞ்சள்:


மிளகு,இஞ்சி மற்றும் மஞ்சள் இந்த மூன்று மூலிகைகளும் கணிசமான அளவு எடுத்துக்கொண்டு நசுக்கி நீரில் கொதிக்க வைக்கப்பட்டு டீ போல எடுத்துக் கொள்ள வேண்டும் இதனால் நரம்புகள் ஆசுவாசப்படுத்தப்பட்டு ரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது, மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


முருங்கை விதை பொடி:


how to increase liver health- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் மிக முக்கியமானது இரும்பு சத்து ஆகும் இந்த இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படும் பொழுது மலச்சிக்கல் தூக்கமின்மை கண்களை சுற்றி கருவளையம் ரத்த சோகை கல்லீரல் ஆரோக்கியம் குறைதல் மற்றும் கல்லீரலில் நச்சுத்தன்மை படிதல் போன்றவை உண்டாகிறது ஆதலால் இரவில் உறங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி முருங்கை விதை பொடி எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறுகிறது. இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது பேதி மற்றும் மயக்கம் தோன்ற வாய்ப்புகள் உள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)