மூட்டுகளை பாதுகாக்கும் முடக்கத்தான் கீரை

0

முடக்கத்தான் கீரையின் பயன்கள் mudakathan keerai benifits tamil 

mudakathan keerai benifits tamil
mudakathan keerai benifits tamil


நமது கிராமங்களில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இந்த முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இது சீனா இந்தியா மற்றும் ஐரோப்பாவில் காலம் காலமாக பயன்படுத்திவந்த மூலிகையாகும் இதனை பெரும்பாலும் மலச்சிக்கல், மூட்டுவலி, அலர்ஜி வரட்டு இருமல் போன்றவைக்கு பயன்படுத்தி வந்தனர்.

நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு இதில் அதிகம் உள்ளதால் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உணவாகும்.


மூட்டு வலிகளுக்கு பயன்படுத்தும் முறை:


mudakathan keerai benifits tamil -முடக்கத்தான் கீரையை தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைக்கக்கூடாது இதனை சிறிய வெங்காயம் தக்காளி மற்றும் சிறிதளவு பெருங்காயம் பயன்படுத்தி கீரையை கடைந்து உண்ண வேண்டும்.

இதனால் காலம் காலமாக இருந்த மூட்டுவலி நிச்சயமாக குறையும் மேலும் மூட்டு வலி காரணமாக எடுக்கப்பட்ட மாத்திரை மருந்துகளால் ஏற்பட்ட உடல் உபாதைகளையும் சரிசெய்யும்.

வாரத்திற்கு மூன்று முறை என ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இதில் ஆக்சலேட் அதிகம் இருப்பதால் வைட்டமின் சி உள்ள நெல்லி, தக்காளி, மற்றும் மிளகாய் உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


உடல் அரிப்பு மற்றும் சொரிசிரங்கு:


mudakathan keerai benifits tamil- சொரி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் முடக்கத்தான் கீரை சிறந்த மூலிகையாகும் சிறிதளவு விரலி மஞ்சள், சிறிதளவு உப்பு, குப்பைமேனி இலைகள், மற்றும் முடக்கத்தான் கீரை இலைகள் இதனை நன்கு அரைத்து உடலில் பூசி குளித்து வர வேண்டும், இந்த மூலிகைகளை பயன்படுத்தும் பொழுது ரசாயன சோப்புகள் பயன்படுத்தி குளிக்கக்கூடாது.

மேலும் 50 கிராம் முடக்கத்தான் கீரையை நன்கு அலசி அரைத்து சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும் இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் நீங்கும், கொக்கி புழுக்கள், பாக்டீரியாக்கள் போன்றவை அழிந்து வெளியேறும் இதனால் தோல் நோய்கள் நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.


மாதவிடாய் வலி:


பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் அடி வயிற்று வலி காரணமாக கஷ்டப்படுகின்றனர் அக்காலங்களில் முடக்கத்தான் கீரையை சூப் மற்றும் பொரியலாக சாப்பிடும் பொழுது வலி நிவாரணியாகவும் செயல்படும் மற்றும் உடலுக்கு தேவையான தாது உப்புக்களும் கிடைப்பதால் உடல் சோர்வு மற்றும் அடி வயிற்று வலி நீங்கும்.


குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி அதிகரிக்க:


குழந்தை பருவத்தில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கும் எலும்பு ஆரோக்கியமும், வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை கடைந்து சூடாக்கப்பட்ட நல்லெண்ணெயில் சீரகம் கடுகு போட்டு தாளித்து கொடுக்கும் பொழுது எலும்பு அடர்த்தி அபரிமிதமாக இருக்கும் மேலும் ரிக்கெட்ஸ் போன்ற எந்த ஒரு குறைபாடும் குழந்தைகளுக்கு ஏற்படாது.


கை மற்றும் கால் வீக்கம்:


பாதங்களிலும் மூட்டுப் பகுதிகளிலும் ஏற்படும் யூரிக் ஆசிட் வீக்கத்தை குறைகின்றது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி ஹிஸ்டமைன் யூரிக் ஆசிட் அளவை குறைக்கிறது மற்றும் அதனால் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.


வயதாவதால் தோன்றும் மூட்டுத்தேய்மானம்:


வயதாவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவங்களில் குறைபாடு ஏற்பட்டு மூட்டு இணைப்புகளில் சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவதால் தொற்றுக்கள் உண்டாகிறது. இதனால் படியேற மற்றும் நடக்கக்கூட முடியாத நிலைமைக்கு செல்கிறது இதனை தவிர்க்க உணவாக முடக்கத்தான் கீரை மற்றும் கம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மேல் வைத்தியமாக ஒரு பருத்தி துணியில் நல்லெண்ணெய் மற்றும் கற்பூரம், சிறிதளவு முடக்கத்தான் கீரை சாறு நனைத்து காயவைத்து கட்டி வர வேண்டும் இந்த நாள் விரைவில் குணமடையும்.


மூல நோய்:


mudakathan keerai benifits tamil-நமது சித்த மருத்துவத்தில் முடக்கத்தான் கீரையை மூல நோய்க்கு அடிக்கடி பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மூலநோய் உள்ளவர்கள் மலம் கழிப்பது மிகப்பெரிய சிரமமாக இருக்கும் அதனை தவிர்க்க முடக்கத்தான் கீரை மைய அரைத்து வெறும்வயிற்றில் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள வழவழப்புத் தன்மை மிகச் சிறந்த மலமிளக்கியாக செயல்படும் மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் மூலநோய்கள் நாளடைவில் குறையும் மேலும் இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் தன்மை குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.


பல்வேறு இடங்களில் வேலிகளில் காணப்படும் இந்த முடக்கத்தான் கீரையை பலரும் அறிவதில்லை இதன் மருத்துவ குணத்தை அறியாமல் பலரும் மூட்டு வலியால் துன்பப்படுகின்றனர், சிறுவயதிலிருந்தே முடக்கத்தான் கீரை மற்றும் பிரண்டை போன்றவற்றை உணவில் சேர்த்து வரும் பொழுது வயதாகும் போது தோன்றும் மூட்டு வலி பிரச்சனை, எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)