வறட்சியான சருமத்தை பாதுகாக்க இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க

0

சருமத்தில் வறட்சியை குறைப்பது எப்படிHow do I get rid of dry skin :


How do I get rid of dry skin

சருமமானது எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஒரு பகுதி இதனை பேணி பாதுகாக்க வேண்டும், சருமமானது நன்கு மிருதுவாகவும் பளபளப்புடன் இருக்கும் போதுதான் ஆரோக்கியமாக இருக்கும் .

சரும வறட்சி அதிகம் உள்ளவர்களுக்கு எளிதாக சூரிய ஒளியால் உண்டாகும் அனைத்து பாதிப்புகளும் ஏற்படுகிறது, மேலும் சரும வெடிப்புகள் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் அதிகம் ஏற்படுகிறது.

நம் சருமத்தை தொட்டுப் பார்க்கும் பொழுது சொரசொரப்பு டன் பொலிவிழந்து காணப்படும்போது அதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

பெரும்பாலும் சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்னவென்றால் வைட்டமின் சி , வைட்டமின் ஈ, மற்றும் ஒமேகா 3 ஆகும்

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் பற்றாக்குறை அதிகரிக்கும் போது தான் நமது சருமத்தில் வரட்சி அதிகரிக்கிறது, மேலும் நமது உணவில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் அளவு அதிகரிக்கும் பொழுது கூட சரும வறட்சிக்கு வழிவகுக்கிறது.

ஆகவே அதிக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சரும வறட்சி உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகம் ஒமேகா 3 உள்ள உணவுகள்:

  • மத்தி மீன்
  • டூனா மீன்
  • algae பாசி
  • முட்டை
  • cod liver oil

ஆகிய உணவுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.


மேலும் முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பேஸ் பேக் உடனடியாக சரும வறட்சிக்கு பலனளிக்கக் கூடியதாகும்.

தேவையான பொருட்கள்:

  • சியா விதைகள் 2 ஸ்பூன்
  • கடல்பாசி 1 ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்
  • தண்ணீர் 25 மில்லி லிட்டர்

போன்றவற்றை நன்கு அரைத்து முகத்திற்கு பூச வேண்டும் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரும்பொழுது சருமத்திற்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும் , சரும வறட்சியினால் உண்டான வெடிப்புகள் நீங்கும் முகம் பளபளப்புடன் தோன்றும்.

மேலும் ஒரு சில துளி தேங்காய் எண்ணெய் அடிக்கடி முகத்தில் தடவி மேல்புறமாக மசாஜ் செய்து வரும் பொழுது சரும வறட்சி மற்றும் சூரிய கதிர்களால் உண்டாகும் பாதிப்பு நீங்கும்.


சரும வறட்சியும் உண்டாக மற்ற காரணங்கள்:


புகைப்பிடித்தல்:


புகைப்பிடித்தல் காரணமாக கால்சியம் பற்றாக்குறை அதிகரிக்கும் பொழுது வைட்டமின் டி, ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஏற்றுக் கொள்வதை தடுக்கிறது ஆகவே புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.


மது அருந்துதல்:


அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் நச்சுத்தன்மையை அதிகரிப்பதோடு நமது சிறுகுடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் நீட்சிகள் மற்றும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைகிறது ஆகவே மது அருந்துதல் குறைக்கும் பொழுது சரும வறட்சி தடுக்கப்படுகிறது.


சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து:


சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் குளிர்பானங்களை நாம் அதிகம் பயன்படுத்துவதால் சர்மத்திற்கு பல பாதிப்புகள் உண்டாகிறது நாம் பெரும்பாலும் மாவுச்சத்துகளை குறைக்கும் பொழுது சருமப் பளபளப்பு மற்றும் சரும வறட்சி நீங்கும்.


தவிர்க்கவேண்டிய மாவுச் சத்துக்கள்:


  • சுத்திகரிக்கப்பட்ட corn flour
  • மைதா
  • வெள்ளைச் சர்க்கரை
  • corn syrup


ஒமேகா-6 :


அதிகப்படியாக ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் உணவுகளை எடுக்கும்பொழுது ஒமேகா 3 பற்றாக்குறை அதிகரிக்கிறது ஆகவே அதிகப்படியான ஒமேகா 6 உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்;

சோப்புகள்:


PH அளவு அதிகமாக உள்ள சோப்புகளை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது , சரும வெடிப்பு மற்றும் சருமத்தில் உள்ள செல்கள் சுருங்குவது போன்ற பல பாதிப்புகள் உண்டாகிறது ஆதலால் முகத்திற்கு ஏற்ற குறைவான PH உள்ள இயற்கை சோப்புகள் மற்றும்FACE WASH பயன்படுத்த வேண்டும்.


தண்ணீர் பற்றாக்குறை:


நன்கு சுத்திகரிக்கப்பட்ட RO WATER பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான தாதுஉப்புக்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை ஆகவே கிருமி நீக்கம் செய்யப்பட்ட தண்ணீர் நம் உடலுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3-6 லிட்டர் வரை தவறாமல் பருக வேண்டும்.


அடிக்கடி FACE PEEL செய்வது:


அடிக்கடி FACE PEEL செய்யும்பொழுது சருமத்திலுள்ள சிறு சிறு துளைகளின் வாய்ப் பகுதிகள் திறந்த வண்ணமே உள்ளது ஆகவே எளிதில் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, வாரம் ஒருமுறை மட்டுமே FACE PEEL செய்ய வேண்டும்.


நச்சுத்தன்மை வாய்ந்த கல்லீரல்:


How do I get rid of dry skin  - கல்லீரலில் அதிக நச்சுக்கள் இருக்கும்பொழுது சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது ஆதலால் கல்லீரலை உடனடியாக கழிவு நீக்கம் செய்ய வேண்டும், இதற்கு காலையில் வெறும் வயிற்றில், ஆப்பிள் சைடர் வினிகர், எலுமிச்சை பழம் ஜூஸ், முட்டைக்கோஸ் ஜூஸ் இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)