உணவுகள் மூலம் மலட்டுத் தன்மையை சரி செய்வது எப்படி:

0

 மலட்டுத்தன்மையை போக்க கூடிய 9 உணவுகள் What are the foods against infertility:


What are the foods against infertility


இன்றைய காலத்தில் உள்ள உணவு பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகளினால் மலட்டுத்தன்மை அதிகரிப்பு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது ஆனால் மக்கள் நிலைமைகளைப் புரிந்து கொண்டு மீண்டும் பழைய உணவுகளுக்கு திரும்பிச் செல்வது சந்தோஷம் அளிக்கிறது ஆனால் பழைய உணவுகளை புதிய நடைமுறையின் படி சாப்பிடுவது மிகப்பெரும் ஆபத்தாக உண்டாகிறது உதாரணத்திற்கு.

கம்பு உணவானது உடல் ஆரோக்கியத்திற்கும், மலட்டுத்தன்மை சரி செய்ய மிகச் சிறந்த உணவாகும் ஆனால் அதனை வேகவைத்து உண்ணாமல் அதில் தோசை சுடுவது இட்லி சுடுவது,  சர்க்கரையை பயன்படுத்தி உண்ணுவது போன்ற காரணங்களால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக ஜீரணம் அடையாமல் வயிற்று வலி,குடல் உபாதைகள், அலர்ஜி, உடல் வெப்பம் அதிகரிப்பு, போன்றவை தோன்றுகின்றது. ஆதலால் உன்ன கூடிய முறைகளுக்கு ஏற்றவாறு உணவுகளை உண்ணும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கும் உயிர் செல் உற்பத்திக்கு மிகவும் நல்லது.


நிலக்கடலை:


நிலக்கடலை என்பது மலட்டுத்தன்மைக்கு மிகவும் சிறந்த உணவாகும்.

இதனை வறுத்து சாப்பிடுவது மற்றும் பச்சையாக அப்படியே சாப்பிடுவது என்பது மிக தவறானது வறுத்து சாப்பிடும் பொழுது பித்தத்தை அதிகரிக்கும், பச்சையாக சாப்பிடும் பொழுது  அதில் உள்ள anti-nutrient அதில் உள்ள சத்துக்களை உடல் எடுத்துக்கொள்ள தடை செய்யப்படுகிறது ஆதலால் , இரவு ஊற வைக்கப்பட்ட நிலக்கடலை காலையில் வேகவைத்து அதில் சிறிதளவு பனை வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் ஜீரணத் தன்மை சீராக இருக்கும் மற்றும் அதிலுள்ள சத்துக்கள் உடல் எளிதில் எடுத்துக் கொள்ளும், இதில் உள்ள வைட்டமின்E ஆனது மலட்டுத்தன்மையை போக்கும் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகும் ஆதலால் தினமும் 50-100 கிராம் நிலக்கடலையை சாப்பிட்டு வர வேண்டும்.


மொச்சைக்கொட்டை:


What are the foods against infertility- பெரும்பாலும் மறந்துபோன உணவுகளில் மிகவும் முக்கியமானது மொச்சை பயிறு வகை உணவாகும். ஆனால் பெரும்பாலான மளிகை கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கிறது இச்சை தரும் மொச்சை பயிர் என்ற ஒரு பழமொழி உள்ளது,  ஆதலால் மலட்டுத்தன்மை மற்றும் விந்து பற்றாக்குறை கருமுட்டை கோளாறு உள்ளவர்கள் மொச்சை பயிரை வேகவைத்து தேங்காய் பயன்படுத்தி தாளித்து சாப்பிட்டு வரும்பொழுது நாளடைவில் மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும்.


முருங்கைக்காய்:


பெரும்பாலும் மலட்டுத்தன்மைக்கு பயன்படுத்தக்கூடிய முக்கியமான பொருள் முருங்கைக்காய் ஆகும், மேலும் முருங்கை மரத்தில் உள்ள முருங்கை பிசின், முருங்கைப்பூ,  முருங்கை இலை,  ஆகிய அனைத்துமே மலட்டுத் தன்மைக்கு மிக முக்கியமான உணவாகும். அடிக்கடி உணவில் முருங்கையை சேர்த்து வரும் பொழுது மலட்டுத்தன்மை கோளாறு நீங்கும் இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் தாது பொருட்கள் உடலின் தாது விருத்திக்கு மிக முக்கியமான மருந்தாகும்.


நெய் மற்றும் சின்ன வெங்காயம்:


மலட்டுத்தன்மை மற்றும் உயிர் செல் உற்பத்தி குறைபாடு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் மற்றும் நெய் சாப்பிட்டு வரும்பொழுது மிகச் சிறந்த பலன் அளிக்கும் தினசரி காலை வெறும் வயிற்றில் 15 கிராம் நெய் மற்றும் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் பயன்படுத்தி தாளித்து அப்படியே சாப்பிடும் பொழுது உடலின் தாது உற்பத்தி மிகவும் அதிகரிக்கும் மலட்டுத் தன்மை குறையும்.


பூசணி விதைகள்:


நாம் உணவாக பயன்படுத்தப்படும் பூசணி விதைகளை நீக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் உண்கிறோம் ஆனால் அதன் விதைகளில் தான் மிக அதிகமான உயிர்ச்சத்துக்கள் உள்ளது தினமும் பூசணி விதைகளை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு மலட்டுத் தன்மை பிரச்சனை வரவே வராது, இதில் அதிகம் உள்ள புரதம் மற்றும் ஜிங்க், மெக்னீசியம், காப்பர், செலினியம் போன்ற சிறந்த தாது உப்புக்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உயிர் செல் உற்பத்திக்கும் மிகச்சிறந்ததாகும்.


பாதாம் பிசின்:


பெரும்பாலும் உயிர்செல் அழிவுகள், விந்து உற்பத்தி குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மை உடல் வெப்பத்தால் உண்டாகிறது, ஆதலால் உடல் வெப்பத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் அதிகரிக்க தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம் பிசின் எடுத்துக்கொள்ளவேண்டும் இதில் உள்ள தாது உப்புக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடல் வெப்பத்தை குறைக்கிறது மற்றும் உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது.


எள்ளு:


கிராமங்களில் உள்ள சிறுவர்கள் பெரும்பாலும் எள்இடி என்று சொல்லக்கூடிய தின்பண்டங்களை பெரும்பாலும் சு வைத்திருப்பார்கள் அதில் உள்ள மிகச்சிறந்த தாது உப்புக்கள் மற்றும் புரதங்கள் உயிர் செல் உற்பத்திக்கும் கருப்பை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த உணவாகும் இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் எள்இடியை அனைவரும் மறந்து விட்டதால் வலிமை குறைந்த கருப்பை வளர்ச்சி, மற்றும் இனச்செல் குறைபாடு உண்டாகிறது.


அஸ்வகந்தா:


போதிய உறக்கம் இன்மையால் கூட மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது இதற்கு காரணம் இரவில் உறங்கும் பொழுது மடிக்கணினி மற்றும் செல்போன் பயன்பாடு, இரவு வேளைகளில் கடினமாக உணவு உண்ணுதல் மற்றும் மன அழுத்தம் போன்றவையாகும். இரவில் உறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க தினசரி 5 கிராம் அஸ்வகந்தா வெந்நீர் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளும் பொழுது மனஅழுத்தம் மிகவும் குறைகிறது.


வெந்தய நீர்:


இரவில் ஊற வைக்கப்பட்ட வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து விட்டு மீதமுள்ள வெந்தயத்தை சாப்பிடும் பொழுது உடலின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வருகிறது மற்றும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது இதனால் மலட்டுத் தன்மை பிரச்சனை குறைகிறது.


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)