40 வயதுக்கு மேல் இந்த உணவுகளையெல்லாம் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்

0

40 வயதிற்கு மேல் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்What is diet after 40 years old

பொதுவாக 40 வயதிற்கு மேல் தான் அனைவருக்கும் பல்வேறு வியாதிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும் அதில் குறிப்பாக மாரடைப்பு சர்க்கரை வியாதி மூட்டு வலி ஜீரணக் கோளாறு.

What is diet after 40 years old


ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டே வரவேண்டும் சிறு குழந்தைகளுக்கு உணவில் அதிகம் இருக்க வேண்டியது மாவுச்சத்து மற்றும் புரதம் ஆகும், வாலிப வயதில் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் நமது உணவில் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால் 40 வயதை தாண்டிய பின்பு நமது உணவில் மாவுச்சத்தை மிகவும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதிக அளவு வைட்டமின்களும் தாது உப்புகளும் புரதங்களும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், கொழுப்பு உணவுகளை மிகவும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் 40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்களுக்கும் காரணமானது மாவுச் சத்துக்கள் தான்.


முளைக்கட்டிய பயறு வகைகள்:


குறைவான கலோரிகளும், கொழுப்புகளும் நிறைந்த முளைக்கட்டிய பயிறு வகைகளை காலை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள புரதம் மற்றும் தாது உப்புக்கள் நமது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மூட்டுகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.


முட்டை:


புரதச்சத்தானது உடலில் உள்ள செல்கள் அமைப்புக்கும் தசைகளின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது குறிப்பிட்ட வயதிற்கு மேல் தசை இழப்பு அதிகமாக இருக்கும் ஆதலால் அதிக அமினோ ஆசிட் நிறைந்த புரதங்களை நமது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் முக்கியமானது முட்டையாகும் தினசரி காலை உணவாக இரண்டு முட்டைகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


மீன்:


மீன் நமது மூட்டில் உள்ள திரவங்களின் அளவை அதிகரிக்க தேவையான ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ளது வாரம் இரண்டு முறையாவது மத்திமீன் அல்லது வஞ்சிரம் மீன் நமது உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


காய்கறிகள்:


மதிய உணவில் சாம்பார், ரசம் மற்றும் மோர் போன்றவற்றுடன் சேர்த்து அதிகப்படியான அரிசி சாதங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகப்படியான மாவுச்சத்து உடலில் உள்ள அடிபோஸ் திசுவில் அதிக கொழுப்பு பதிவுகளை ஏற்படுத்தும் ஆதலால் 100 கிராம் அரிசி சாதத்துடன் 300 கிராம் காய்கறிகள் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்குத் தேவையான அத்தனை வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கும் மேலும் குடல் ஆரோக்கியமும் மேம்படும்.


கீரை சூப்:


எந்த வகையான கீரையாக இருந்தாலும் சரி தினசரி ஒரு 200 கிராம் கீரை சூப் போல செய்து கட்டாயம் சாப்பிட்டு இருக்க வேண்டும் ஏனென்றால் 40 வயதிற்கு மேல் நோயெதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும் அதனால் உடலுக்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் இரும்புச்சத்து பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கும் இதனை ஈடு செய்ய கீரை சூப் மிகவும் உதவி செய்யும், அதிகப்படியான என்னை சேர்த்துக் கொள்ளாமல் 10 மில்லிகிராம் நல்லெண்ணெய், பூண்டு, சீரகம், தக்காளி போன்றவற்றைப் பயன்படுத்தி கீரை சூப் செய்து சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படும்.


சிறு நெருஞ்சில் மூலிகை:


வயதாவதால் தோன்றும் சிறுநீர் செயல்பாட்டு குறைவு மற்றும் ஹார்மோன்பற்றாக்குறையை தீர்க்க சிறுநெருஞ்சில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சிறுநெருஞ்சில் பொடி தினசரி வெண்ணீரில் பயன்படுத்தி டீ போல செய்து சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரக கல், வயோதிகத் தன்மை குறையும், மேலும் வயதாவதால் குறையும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகரிக்கும்.


திணை அரிசி வகைகள்:


ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மட்டும் வாலிப வயதினர் கூட வெள்ளை அரிசி பயன்படுத்துவதற்கு பதிலாக வாரம் இரண்டு வேலையாவது திணை அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு நல்லது என்ற உடன் அதிகப்படியான திணை அரிசி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தீங்கானது ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் திணை அரிசி எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கக்கூடிய லோ கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டது மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து தாமிரச்சத்து நிறைந்ததால் நமது கணையத்திற்கு மிகவும் சிறந்தது.


40 வயதிற்கு மேல் தவிர்க்கவேண்டியவை:


ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஜீரண மண்டலம் மற்றும் இரைப்பையின் செயல்பாடு குறைவாக இருப்பதால் டீ காபி போன்ற பானங்களை வெறும்வயிற்றில் எடுத்துக்கொள்வதே முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

        மது பழக்கம் மற்றும் புகை பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் கல்லீரல் செயல்பாடு குறைவு மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகமாக ஏற்படும்.

         ஒரே இடத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பதை தவிர்த்து விட்டு தினசரி ஆறு கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

         வெள்ளை சக்கரை பயன்படுத்தி செய்யப்பட்ட அனைத்துவிதமான பண்டங்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

         40 வயதிற்கு மேல் யார் ஒருவருக்கு உடலில் கொழுப்பு சதவீதம் அதிகமாக உள்ளதோ அவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

What is diet after 40 years oldகருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)