சொறி சிரங்கை குணப்படுத்தக்கூடிய எளிதான வீட்டு வைத்திய முறை Home remedies for scabies in tamil

0

 

சொறி சிரங்கை எவ்வாறு கண்டறிவது:


சிறிய அளவிலான கொப்புளங்கள் உடல் முழுதும் அல்லது முழங்கை மற்றும் மணிக்கட்டு , விரல் இடுக்குகளில் தோன்றும் இதனை பெரும்பாலானோர் வெப்பத்தால் வரக்கூடிய கொப்புளங்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர் ஆனால் இது ஸ்கேபிஸ் எனப்படும் மிகவும் சிறிய நுண்ணுயிரிகள் சருமப் பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதால் உண்டாவதாகும்.

Home remedies for scabies in tamilஇதனை எளிதில் கண்டறிதல்.

 1. இரவு நேரங்களில் தோல் பகுதிகளில் ஊறுவது போல் இருப்பது, மற்றும் கடுமையான அரிப்பு
 2. வரிசையாக சிறிய கொப்புளங்கள் ஏற்படுதல்
 3. கொப்புளங்கள் பல்வேறு இடங்களுக்கு பரவுதல்

சொறி சிரங்கு வருவதற்கான காரணங்கள்:


 1. நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது ஏற்படும் உஷ்ணத்தால் என் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.
 2. அலர்ஜி தன்மை வாய்ந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு பெரும்பாலான தோல் வியாதிகள் உண்டாகும்.
 3. சொறிசிரங்குஉள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுதல்
 4. அசுத்தமான தலையணைகள் மற்றும் படுக்கைகள் பல பேர் பயன்படுத்துதல்
 5. உள்ளாடைகள் மற்றும் மேலாடைகளை வெயிலில் காய வைக்காமல் இருத்தல்.
 6. குடலில் உள்ள கழிவுகள் மற்றும் குடல் ஆரோக்கியம் குறைவாக இருந்தால் கூட உடலின் அமிலத்தன்மை அதிகரித்து பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுதல்.
 7. குறைவான நோய் எதிர்ப்பு சக்தி


சொறி சிரங்கை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறை (remedies for scabies) :


குப்பைமேனி இலை:


நாட்டு மருந்து கடைகள் அல்லது வயல்வெளியில் எளிதாக கிடைக்கக்கூடிய குப்பைமேனி எனப்படும் மூலிகை சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களை சரி செய்யக்கூடிய முதன்மை மூலிகையாகும். இதனுடன் சிறிதளவு கடல் உப்பு மற்றும் விராலி மஞ்சள் சேர்த்து மை போன்று அரைத்து சொறி சிரங்கு உள்ள இடங்களில் பயன்படுத்தி வரும் பொழுது விரைவில் சொறி சிரங்கு குணமடையும்


மனித தொடர்பு இல்லாமல் ஸ்கேபிஸ் நுண்ணுயிரிகளால் 48 மணி நேரம் உயிர் வாழக்கூடியது ஆதலால் உடல் முழுவதும் நாம் மூலிகையை பூசினால் மட்டுமே சொறி சிரங்கை குணப்படுத்த முடியும்.


வேப்பெண்ணை:


வேப்பெண்ணை தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும், வேப்பெண்ணை உடன் பச்சை கற்பூரம் சேர்த்து உடல் முழுதும் பூசி வரும் பொழுது இந்த நுண் கிருமிகள் விரைவில் இறக்கின்றது ஆதலால் தினமும் இரவு வேளையில் வேப்பெண்ணை பயன்படுத்த வேண்டும்.


மாதுளை பட்டை:


கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மாதுளை பழத்தின் பட்டையை சுத்தமான தண்ணீரில் போட்டு காயவைத்து அதில் குளித்து வரும் பொழுது சருமத்தில் உள்ள படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு விரைவில் குணமடையும். இதனை நாம் டீ போல செய்து குடித்தாலும் கூட குடல் பகுதிகளில் உள்ள காயங்கள் குணமடைகிறது மற்றும் குடல் புழுக்கள் வெளியேறுகின்றது.


உடலின் அமிலத்தன்மையை குறைக்க வேண்டும்:


நாம் அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கின்றது இதனால் உடல் இயக்கம் முழுவதும் தடைபடுகிறது. மேலும் ரத்தத்தின் தன்மை குறைவதால் எளிதில் ரத்தக் கழிவுகள் அதிகரிக்கின்றது ஆதலால் குறைவான மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு அதிகமான புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

பேக்கிங் சோடா:


நாம் உணவுக்காக பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா நமது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது இதனை படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பயன்படுத்தலாம். அரிப்பு ஏற்படும் காலத்தில் உடனடியாக இதனைப் பயன்படுத்தும் போது உடனடி நிவாரணம் கிடைக்கும். 100 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பயன்படுத்த வேண்டும்.


தேங்காய் எண்ணெய்:


அனைத்து விதமான தொற்றுகளுக்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் சொறி சிரங்குக்கு கூட பயன்படுத்தலாம் காய்ச்சிய தேங்காய் எண்ணெயில் பொடி செய்த கிராம்பு சேர்த்து சிரங்கு உள்ள இடங்களில் பயன்படுத்த வரும்பொழுது விரைவில் குணமடையும்.


சொறி சிரங்கு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:


நிலக்கடலை:


நிலக்கடலை மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவாக இருந்தாலும் அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் படர்தாமரை, சொறி சிரங்கு உள்ளவர்கள் கூட இதனை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் இது அலர்ஜி அதிகரிக்கக்கூடிய உணவாகும்.


நண்டு:


நண்டு போன்ற கடல் உணவுகளை சொறி சிரங்கு மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்றால் உடலில் அதிகப்படியான அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


கோதுமை:


கோதுமை சார்ந்த உணவுகள் மற்றும் ரொட்டிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் இதில் உள்ள குளூட்டன் தோல் அலர்ஜி மற்றும் குடல் அலர்ஜி அதிகரிக்க கூடியது.


சிக்கன்:


சொறி சிரங்கு மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் சிக்கன் மற்றும் முட்டையை உணவாக எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் உருளைக்கிழங்கு மற்றும் பால் சம்பந்தமான பொருட்களை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும்.


சொறி சிரங்கு உள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடிய உணவுகள்:


நம் உடலில் உள்ள உணவு மண்டலத்திற்கு பயனளிக்கக்கூடிய உணவுகளை தவிர்க்கும் பொழுது பல்வேறு விதமான உடல் உபாதைகள் தோன்றுகின்ற அதனால் கீழ்க்கண்ட உணவுகளை அவ்வப்போது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சொறி சிரங்கு மற்றும் அலர்ஜி போன்ற உடல் உபாதைகள் தோன்றுவதில் இருந்து தவிர்க்கலாம்.

 • பப்பாளி
 • மிளகு
 • காளான் வகைகள்
 • முருங்கைக்கீரை
 • மஞ்சள் பூசணிக்காய்
 • முளைக்கட்டிய பாசிப்பயறு
 • பூனைக்காலி விதை
 • தேங்காய் பால்

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)