முகத்தை பளபளப்பாக வைத்திருக்கக்கூடிய எளிய வழிமுறைகள் How can I maintain my face glow:
என்னதான் நாம் முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க ஆர்வமில்லாமல் இருந்தாலும் மற்றொருவரை பார்க்கும் பொழுது நாமும் இவர்களைப் போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.
அவர்களுக்கு எளிதில் பின்பற்றக்கூடிய சில வீட்டு வைத்திய முறைகளால் பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
ஒரு சிலர் எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் முகத்தை பளபளப்பாக வைத்திருப்பார்கள் அவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே ஒரு சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருவதாலேயே பளபளப்பாக இருக்கின்றனர் அவை பின்வருவன.
ஐஸ்:
தினமும் காலையில் எழுந்தவுடன் முகத்தை நன்கு சுத்தமான நீரில் ஐஸ் கட்டிகளை போட்டு முகத்தை அதில் வைத்து எடுக்க வேண்டும் இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் உறிந்து வருவதுடன் இதில் உள்ள சிறு சிறு துளைகளில் உள்ள தூசிகளை நீக்குகிறது. மேலும் முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் காரணமாக அதிகப்படியான ஆக்சிஜன் சருமத்திற்கு கிடைக்கின்றது இதனால் முகம் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்கிறது.
தேங்காய் எண்ணெய்:
தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உடையவர்களுக்கு சரும பிரச்சனை பெரும்பாலும் வருவது கிடையாது. தேங்காய் எண்ணெயால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கப்படும் மேலும் இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் போன்ற செயல்பட்டு சருமத்தின் துளைகளில் எவ்விதமான நுண்ணுயிரிகளும், பாக்டீரியாக்களால் தொற்றுக்கள் ஏற்பட்டு சருமம் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்கின்றது. மேலும் தேங்காய் எண்ணெயானது இயற்கையான சன் ஸ்கிரீன் போல செயல்பட்டு சூரிய ஒளியின் மூலம் சருமம் டேன் ஆகாமல் பார்த்துக் கொள்ளும்.
வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் அல்லது குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கீழிருந்து மேல் புறமாக மசாஜ் கொடுக்க வேண்டும் பின்பு குளிக்கும் பொழுது கடலை மாவு பயன்படுத்தி குளிக்கும் பொழுது எண்ணெய் பசை நீங்கும்.
கற்றாழை:
சருமம் பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் நாம் கற்றாழையை வீட்டில் வளர்த்திருக்க வேண்டும் தினசரி இரவு உறங்கும் பொழுது கற்றாழையை முகத்திற்கு அப்ளை செய்து காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி வரும்பொழுது முகம் பளபளப்பாக இருக்கும் . மேலும் கற்றாழை துண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்பொழுது உடல் உஷ்ணம் மற்றும் குடல் கழிவுகள் நீங்கும்.
வெது வெதுப்பான நீர்:
தினமும் இரண்டு வேளையாவது வெதுவெதுப்பான நீர் பருகி வரும் பொழுது சருமத்தில் உள்ள டாக்சின்ஸ் அனைத்தும் வெளியேறுவதால் சருமம் பளபளப்பாக தோன்றுகிறது மேலும் இதில் சிறிதளவு எலுமிச்சை தோல் எடுத்து கொதிக்க வைக்கும் பொழுது இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும்.
பப்பாளி பழம்:
பப்பாளி பழத்தை சிலர் அரைத்து ஃபேஸ் பேக் போல பயன்படுத்தி வருகின்றனர் அது மிகவும் தவறான செயல் பப்பாளி பழத்தை நாம் ஃபேஸ் பேக் க்காக பயன்படுத்துவதை விட அதை உண்ணும் பொழுது நமக்கு கிடைக்கும் பலன் அபரிமிதமாக இருக்கும். இதனால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக கிடைக்கும். உடலில் உள்ள நுண்கிருமிகள் மற்றும் புரோட்டோசோவா தொற்றுக்கள் நீங்கும் இதனால் சருமம் பளபளப்பாக தோன்றும்.
குரோத் ஹார்மோன்:
உனது உடலில் உள்ள ஹார்மோன்கள் பல்வேறு விதமான செயல்களுக்கு உதவி புரிகின்றன. அதில் இந்த குரோத் ஹார்மோன் தோல் சுருக்கங்கள் நீங்கவும், சரும பளபளப்புக்கும், வயதாவதை தடுப்பதற்கும், உடல் வளர்ச்சி அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதனை அதிகப்படியாக உற்பத்தி செய்ய நாம் HIIT என்று சொல்லக்கூடிய உடற்பயிற்சி வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும் மேலும் தினமும் 12-16 மணி நேரம் இடைவேளை கொண்ட விரதம் முறையை கடைபிடிக்கும் பொழுது பிட்யூட்டரி சுரப்பி குரோத் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது
தடையற்ற உறக்கம்:
நாம் உறங்கும் பொழுது நமது உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ள சிறந்த தருணமாகும், ஆனால் உறக்கத்தில் தடை ஏற்படும் பொழுது நமது உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிப்படையும், ஆதலால் இரவு 8 மணி நேரம் தடையற்ற உறக்கம் வேண்டும், இதற்கு உறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், அத்தகைய உணவில் குறைவான மாவுச்சத்து மற்றும் அளவான புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் இருக்க வேண்டும் மேலும் எளிதில் ஜீரணம் அடைய கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இரவு உறங்குவதற்கு முன்பு நாம் பயன்படுத்தும் செல்போன் காரணமாக நமது உடலில் உள்ள மெலட்டோனின் நமது உடலை உறங்குவதற்கு தயார் செய்வதில்லை ஆதலால் இரவு உறங்குவதற்கு முன்பு எவ்வித கணினியும், செல்போன் உபயோகமும் இருக்கக்கூடாது