சருமத்தை பாதிக்கக்கூடிய இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள் | bad food bad for your skin:
நமது சருமமானது நமது உடலில் உள்ள பாதிப்புகளை வெளிக்காட்ட கூடிய ஒரு உறுப்பாகும் நமது ஜீரண முதல் நரம்பு மண்டலம் வரை உள்ள அனைத்து பாதிப்புகளும் நமது சருமத்தையும் பாதிக்கக் கூடியதாகும்.
ஆகவே கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்கும் பொழுது நமது சருமம் உடல் உறுப்புகள் சரிவர இயங்கும்.
குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள்:
குறைந்த கொழுப்புகள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடல் பிட்டாகவும் எடை குறைவாகவும் இருக்கும் என்று பலர் எண்ணுகின்றனர், அவ்வாறு நாம் குறைந்த கொழுப்புகள் உள்ள உணவுகளை உண்ணும் பொழுது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A,D,E,K நமது உடலுக்கு சரிவர கிடைப்பதில்லை.
நமது செல்களில் உள்ள 50 சதவிகிதம் மூலப் பொருட்கள் SATURATED FAT ஆல் ஆனது ஆதலால் கொழுப்பு உணவுகளை நாம் சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பு உணவுகளை நாம் தவிர்க்கும் பொழுது நமது பித்தப்பை ஆனது பித்த நீர் சுரப்பை தேக்கி வைக்கும் பொழுது பித்த கற்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் பித்த நீருக்கான வேலை மிகவும் குறைவதுதான் காரணமாகும்.
மாவுச்சத்து உணவுகள்:
நாம் அதிகமான கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள மாவுச் சத்துக்களை எடுக்கும் பொழுது நமது ஜீரண மண்டலம் பாதிப்படைவதுடன் சருமமும் பாதிப்படைகிறது, சருமத்தில் உண்டாகக்கூடிய 80% பாதிப்புக்கு மாவுச்சத்துக்கள் ஒரு முக்கிய காரணமாகும். பருக்கள் (அக்னி), பூஞ்சைதொற்றுகள், கழுத்துப் பகுதிகளில் தோன்றும் கருமை, கைகளுக்கு அடியில் தோன்றும் கருமை போன்ற பல்வேறு காரணங்களுக்கு இந்த மாவுச்சத்துக்கள் காரணம்ஆகின்றது .
மேலும் சர்க்கரை உணவாவது இன்சுலின் அளவை அதிகரிப்பதால் ஹார்மோனின் உற்பத்தியை மிகவும் குறைக்கிறது ஆதலால் வயதான தோற்றமும், சுருக்கமும் உண்டாகிறது.
அதிகமான கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளான வெள்ளை சர்க்கரை, ஐஸ்கிரீம், சோடா பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட கான் சிரப், போன்றவற்றை முழுவதும் நமது சருமத்தை பாதிக்கக் கூடியதால் தவிர்க்க வேண்டும்.
குளூட்டன் மற்றும் ஆல்கஹால்:
குளூட்டன் நிறைந்த தானியங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கக்கூடிய ஆல்கஹால் நமது சருமத்தை பாதிக்கக் கூடியதாகும்.
குளூட்டன் நிறைந்த உணவால் நமது ஜீரண மண்டலம் வெகுவாக பாதிப்படைகிறது அதனால் மங்கு மற்றும் தேமல் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகள் தோன்றுகின்றது.
மேலும் தொற்றுக்களை அதிகப்படுத்தக்கூடிய ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள தானியங்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் வகைகள்:
பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதில் பெரும்பாலும் இருப்பது ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆகும் இது நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதால் பெரும்பாலும் தாவர எண்ணெய் வகைகளை தவிர்த்து விட்டு, ஆலிவ் ஆயில் , தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.
மேலும் ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகளான மத்தி மீன், சால்மன் மீன் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளும் பொழுது சருமம் பளபளப்புடன் இருக்கும்.
தரம் குறைந்த புரதங்கள்:
சுத்திகரிக்கப்பட்ட சோயா புரதங்கள் இப்பொழுது அதிக புரதம் உள்ள உணவாக பெரும்பாலும் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது இதில் உள்ள புரதமானது மிகவும் தரம் குறைந்ததாகும் இதனை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது, வயிறு உப்பசம், ஜீரணக் கோளாறு, அலர்ஜி சைனஸ், உடல் எடை கூடுதல் மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை உண்டாகின்றது ஆதலால் சோயா புரதங்களை தவிர்த்துவிட்டு, முட்டை, மீன், மாட்டிறைச்சி போன்ற தரம் வாய்ந்த புரதங்களை பயன்படுத்த வேண்டும்.
குறைந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ள உணவுகள்:
நாம் நாம் உண்ணும் மூன்று வேளை உணவுகளில் ஒன்றிலாவது ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் பல்வேறு விதமான சரும பிரச்சனைகள் மற்றும் கேன்சர் வரை உண்டாக வாய்ப்புள்ளது. இன்றைய மாடன் தலைமுறையினர் காலை உணவாக வெள்ளை பிரட் மற்றும் ஜாம் உண்ணுகின்றனர் இதில் சிறிதளவு கூட ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதில்லை ஆதலால் அதிகமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் எடுக்கும் பொழுது நமது சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது
அதிகமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ள உணவுக்கான உதாரணம், காய்கறிகள், ஈரல் உணவுகள், முருங்கைக்கீரை, மஞ்சள் , இஞ்சி, போன்றவையாகும்
செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள்:
சாலை ஓரங்களில் விற்கப்படும் பொறித்த உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் மற்றும் இனிப்பு உணவுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகள் நமது தோலுக்கு மிகப்பெரிய ஆபத்தை வைக்கக் கூடியதாகும் மேலும் இது நமது குடல் சுவற்றில் உள்ள நுண் உறிஞ்சிகளை முழுவதும் அழிக்கின்றது. ஆதலால் இத்தகைய உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்